ஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்
சித்தர்கள்/ஞானியர் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட சொல்கிறார்கள் என்பதும் தெரிந்ததே!
இதையெல்லாம் தாண்டி இவர்களின் பாடல் வரிகளில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஆம், சித்தர்கள்/ஞானியர் என்றாலே அன்பு, இரக்கம், புலால் மறுத்தல் மற்றும் கொலை தவிர்த்தல் என்ற கொள்கை உடையவர்கள் மேலும் பல அற்புதங்களை செய்வார்கள் என்று தெரிந்திருக்கும் அளவிற்க்கு இந்த இறைவன் திருவடிபற்றி அதிகம் தெரியவில்லை. ஈடு இணையில்லாத இந்த திருவடி தவத்தை செய்த மற்றும் அதை நமக்கும் தந்த எல்லா சித்தர்களின் பாதத்தையும் பணிந்து பதிகிறோம்.
மேலும் வள்ளல் பெருமான் “ஞான சரியையில்” மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணருங்கள்” என்று உபதேசித்து உள்ளதை நன்கு அறிக. ..
ஆன்மீகத்தில் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கு ,வள்ளலார் மற்றும் சித்தர்களின் திருவடி தவ முறையை அறியாதவர்களுக்கு, இங்கு போடப்படும் பாடல்களும் விளக்கங்களும் நிச்சயம் உபயோகமாக இருக்கும் மேலும் உங்களுக்கு வள்ளலாரின் மீது நம்பிக்கை இருந்தால் (அ) ஏதாவது ஒரு சித்தரின் மீதோ (அ) ஞானியின் மீதோ (அ) இறைவன் மீதோ நம்பிக்கை இருந்தால் அவர்களை நினைத்து படித்தால் நிச்சயமாக இது உங்கள் கண்களை திறக்கும்.
- திருவடி – மெய்ப்பொருள் ஒரு அறிமுகம்
- திருவடியை போற்றி திருவருட்பாவில் திருவருட்பிரகாச வள்ளலார்
- திருவடியை போற்றி திருமந்திரத்தில் திருமூலர்
- திருவடியை போற்றி திருவாசகத்தில் மாணிக்கவாசகர்
- திருவடியை போற்றி “திருவடி புகழ்ச்சி” – திருவருட் பிரகாச வள்ளலார்
- திருவடியை போற்றி திருக்குறளில் திருவள்ளுவர்
- திருவடியை போற்றி தேவாரத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர்
- திருவடியை போற்றி “நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்” அன்னை ஸ்ரீஆண்டாள்
- மெய்ப்பொருள் பாடல்கள் – விளக்கங்கள்
3 Comments
Nesa Kumar
Great message
Mahendhran
விழிப்புணர்வு என்ற சொல்லிற்கும் மெய்பொருளிர்கும் தொடர்பு உண்டா?
admin
வணக்கம் மஹேந்திரன். தங்கள் கேள்விக்கான விடை கீழ்கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உள்ள புத்தகத்தில் மூன்றாம் பகுதியை (மூன்று நிலையங்கள்) என்ற தலைப்பினை பார்க்கவும். நன்றி.
http://tamil.vallalyaar.com/wp-content/uploads/2010/02/vallalyaar.pdf