மெய்ப்பொருள் பாடல்கள்

எல்லா மதங்களும், சமயங்களும் வெவேறு கொள்கைகள் வைத்திருந்தாலும்…… சேருமிடம் இறைவனைத்தான் என்று பொதுவாக சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். இது உண்மையா?

நிச்சயமாக இல்லை…. நீங்கள் எந்த கொள்கை வைத்து இருக்கிறீர்களோ அந்த கொள்கைக்கு என்ன கிடைக்குமோ!! அதுதான் கிடைக்குமே தவிர நாம் இறைவனை அடைய முடியாது .

இறைவன் ஏக இறைவனாக இருந்தால் அவனை அடையும் வழியும் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர நிச்சயமாக வேவேராக இருக்க முடியாது….

அதற்குதான் …. நாம் பார்க்க வேண்டியது … ஞானிகளின் பாடல்களையும் அவர்களின் கருத்துக்களையும் தானே தவிர…. சமயத்தையோ, ஆசிரம்த்தையோ அல்ல…. அப்படி சமயத்தின் படியோ (or) ஆசிரமத்தின் படியோ நடந்தால் நீங்கள் மிஞ்சி போனால் சமய தலைவனாகவோ அல்லது ஆசிரம தலைவனாகவோ ஆக முடியமே தவிர ஒரு காலும் பிரபஞ்சத்தின் அதி உன்னதமான நிலையை அடைய முடியாது……….

இதை திருஅருட்பிரகாச வள்ளலார் நன்கு உணர்ந்ததால் தான் இப்படி சொன்னார்…………

“இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தைன் தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல்வேண்டும்”

இப்பொழுது நாங்கள் கொடுக்க போகும் மெய் பொருள் விளக்க பாடல்களை நாம் ஒரு சமயத்திலோ அல்லது ஆசிரம்திலோ 50 வருடம் குப்பை கூட்டினால் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே……………. அந்த அளவிற்கு இது ரகசியமாக வைக்க படுகிறது … அதை பட்ட வர்த்தனமாக இங்கு நாங்கள் வெளிபடுத்துகிறோம்.

வள்ளல் பெருமானின் திருவடி வணங்கி இதை பதிகிறேன்….. உண்மையான ஆன்ம தாகம் உள்ளவர்களை இந்த பதிவு போய் சேர அருட்பெரும் ஜோதி ஆண்டவரை வேண்டி கொள்கிறேன்.

பட்டினத்தார் பாடல்:

“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்

கெட்டாத புட்பமிறையாத தீர்த்தமினி முடிந்து

கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சங் கருத்தினுள்ளே

முட்டாத பூசை யன்றோ குருநாதன் மொழிந்ததுவே.”


வெட்டாத சக்கரம் – நமது கண்மணி எப்படி உள்ளது.. அதாவது கருவிழி.. வட்டமாக சக்கரமாக உள்ளதா… அது வெட்டி வட்டமாக்கபட்ட சக்கரம் அல்ல என்கிறார்.

பேசாத மந்திரம் – பேசினால்தானே மந்திரம், பேசாவிட்டால் மௌனம். கண் பேசாது அதான் மௌனம்.

வேறொருவர்க் கெட்டாத புட்ப – வேறொருவருக்கு எட்டாத புட்பம் நம் கண்மலர் எப்படி எனில்… யாரவது உங்கள் கண் அருகில் கையை கொண்டு வந்தால் இமைகள் மூடி கொள்ளும் இதனைத்தான் வேறொருவருக்கு எட்டாத புட்பம் என்று பாடினார்……

மிறையாத தீர்த்த – நம் கண்ணிலே உள்ள நீர் இறைக்கபடாமல் உள்ளதா….ஆம் இறைவனை நினைக்க நினைக்க நீர் கங்கை போல் பெருகி ஒடுமஅல்லவோ…

இந்த இடத்தில் நீங்கள் எமது நாயகன் வள்ளல் பெருமானின் பாடலை நினைவு படுத்தி கொள்ளவும்……

“நினைந்து நினைந்து

உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து

அன்பே நிறைந்து நிறைந்து

ஊற்றெழும் கண்ணீர் அதனால்

உடம்பு நனைந்து நனைந்து

அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே

என்னுரிமை நாயகனே என்று

வனைந்து வனைந்து ஏத்ததும்

நாம் வம்மின் உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்

கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன்

சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே”

புரிகறதா எல்லாம் கண்தான் என்று………….

யன்றோ குருநாதன் மொழிந்ததுவே – இவைகளையே என் குருநாதன் மொழிந்தது என்று கூறுகிறார்……

இனிமேலாவது நாம் யாரை குரு என்று கொள்ள வேண்டும் என்று புரிகறதா….. இதை சொல்லி உணர்த்தி காடுபவர்தான் குரு…. அதை விட்டு விட்டு எல்லா அசிரமங்களிலயும் சொல்லி கொடுக்கப்படும் மூச்சு பயறிசி, காலை நீட்டி மடக்கி செயும் யோகா போன்றவற்றை சொல்லி தருபவர்களி எல்லாம் ஞான சர் குரு என்று நாம் கொள்ள கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் பட்டினத்தடிகளின் மிக அழகான பாடல்……….

“கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்

அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்

உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்

கடலருகே நிற்கும் கரும்பு.”

“கண்டம் கரியதாம்” – கண்டம் கருப்பு நிறமுடையது – கருவிழி.

“கண் மூன்று உடையதாம்” – அது எப்படி???

ஆம் ஐயா… கண்ணில் முதலில்

1. வெள்ளை படலம் உள்ளதா???

2. அதனுள் ஒரு கருபடல்ம் உள்ளதா??

3. அதனுள் இறுதியாக ஒரு சிறிய கரு விழி உள்ளதா??

இதுதான் மூன்று கண் என்பது!!!!

“கடலருகே நிற்கும் கரும்பு” என்று பாடுகிறார்….

கரும்பு எங்காவது கடலில் விளையுமா…தோழர்களே….. சிந்தியுங்கள் …. அப்புறம் எப்படி “…….கரும்பு” என்று பாடினார்.

கடல் நீர் எப்படி இருக்கும்??

கரிக்குமா???? உங்கள் கண்ணீர் எப்படி இருக்கும்?????? சொல்லுங்கள் அதுவும் கரிக்குமா!!!!!

அந்த கடல் போன்ற இடத்தில் நிற்கும் கரும்பாம்????

இதை நாம் கரும்பு என்று படிக்க கூடாது?? கருப்பு + பூ ???

ஆம் இருக்கிறது அது நம் கண் மலர்தான் அதுதான் நம் கண்ணீர் என்ற கடலில் ஒற்றி நிற்கும் கரும்பு என்று பாடினார்.

திருமூலர் பாடல்:

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணென்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுறுக்கயொ ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக்களிம் பறுத்தானே –  113

இறைவன் ஆகாயத்திலிருந்து இறங்கி நம் வினைக்கு ஏற்ப உடல் எடுத்து குளிர்ச்சி பொருந்திய திருவடியை தலைக்கு முன் பக்கத்திலே காட்டி – உள் நின்று உருக்கி ஒப்பிலாத ஆனந்தத்தை கண்ணிலே காட்டி – களிம்பாகிய

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னை

கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்

விண்ணாறு வந்து வௌகைண் டிடவோடிப்

பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே – 600

நயனம் என்றால் கண் ஐயா….கண்களில் உள்ள ஒளியை பார்த்து சாதனை செய்ய செய்ய.. விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன் காரியபடுவதை காணலாம் … என்கிறார்

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்

கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்

பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்

கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே – 1871

எல்லாமே கண்தான். இதை தவிர ஒன்றும் இல்லை என்கிறார்

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்

காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்

பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி

ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே – Song_2823

காணவல்லவர்கள் ஆர்வத்தோடு முயல்பவர்கள் கண்மணியாம் இறைவனை காணுங்கள் என்கிறார்

இறுதியாக…. இந்த பாடலை பாருங்கள்…

….

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்

கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை

உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்

கண்ணாடி போலக் கலந்துநின் றானே – Song_603

எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் செய்தாலும் அறிய முடியாது. கண்ணில் கலந்து நின்ற அவனை நாடி உள்ளே ஒளிபெற நோக்க காணலாம் அவனை என கூறுகிறார்.

மும்மலங்களை அறுத்தான் என்கிறார்

இதற்க்கு மேலும் சில திரு மூலரின் ஞானத்தை தெளிக்க முடியும் ஆனால் இப்போதைக்கு இது போது என்று நினைக்கிறேன்.

மாணிக்கவாசகர் பாடல்:

பாடலை பார்ப்பதற்கு முன் மாணிக்கவாசகரை பற்றி எம் வள்ளல் பெருமானின் பாடலை பாருங்கள்……….

“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,

நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்

ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”

இது போதாதா…….அவர் புகழ் சொல்ல…. எங்காவது கேள்வி பட்டதுண்டா…. ஒரு சுத்த மெய் ஞானி…. இன்னொரு சுத்த மெய் ஞானியை பற்றி பாடியதுண்டா?????

வன்திருபெருந்துறையாம் வழியடியோம் கண்ணகத்தே

நின்று களிதரும் தேனே- திருபள்ளிஎழுச்சி பாடல்-9

திருபெருந்துறையாம் – திருவாகிய இறைவன் தங்கியிருக்கும் பெரும் துறை .

பெரிய துறை – இடம் என்று பொருள்படும்

இது நம் உடலில் அடியார்களாகிய எங்கள் கண்ணில் அகத்தே – உள்ளே நின்று ஆனந்தம் தருபவனே என இறைவன் நம் கண்ணினுளே நின்றதை தெளிவு படுதியுருகிறார்

“அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே”

ஒப்பில்லாத நம் கண் – மணியே அம்மையப்பன் என்று சொல்கிறார்

மாணிக்கவாசகரும் ஒளியுடல் பெற்றவர்தான்.

தாயுமானவர் பாடல்:

“காணும் கண்ணில் கலந்த கண்ணே”

நாம் காணுகின்ற நம் உடலில் உள்ள கண்ணில் கலந்த இறைவனே என்கிறார்…………….

“கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை

விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை

எண்ணி எண்ணி இரவும் பகலுமே

நாணுகின்றவர் நான்தொழும் தெய்வமே”

கண்ணுள் நின்ற ஒளியை – கருவிழிக்குள் விண்ணாகிய ஆகாயத்தில் அந்தரத்தில் நின்று விளங்கும் மெய்யான – ஒளியை கருத்திலே இருத்தி இரவு பகல் பாராது எந்நேரமும் எண்ணி எண்ணி சாதனை புரிபவர்களே நான் தொழும் தெய்வம் என்று தாயுமான சுவாமிகள் கூறுகிறார்.

Share

Leave a comment