புத்தகங்கள்

வள்ளலார் மற்றும் சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கவும்.

சாகா கல்வி

இந்தப் புத்தகம் ஆன்மீக ஞானத்தை அனைவருக்கும் எளிமையாக விளக்கும் வழிகாட்டி ஆகும்.

வள்ளல் யார்?

மனித வாழ்க்கையின் நிலைகள், ஆன்மீக முன்னேற்றம் மற்றும் உண்மையை அடையும் பாதைகள் பற்றிய வழிகாட்டுதலாக அமைகின்றன.

ஆன்ம நேய ஒருமைப்பாடு

மனித வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து, ஒற்றுமையுடன் வாழ வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறது.

உலககுரு – வள்ளலார்

“உலக குரு வள்ளலார்” என்பதையும், அதில் கொடுக்கப்பட்டுள்ள உரை இந்திய சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை எதிர்த்து வள்ளலார் சன்மார்க்க நெறியை எவ்வாறு போதித்தார்

சனாதன தர்மம்

சனாதன தர்மம் என்பது, உலகம் தோன்றியது முதல் இருக்கும், நிலையானது, அழிவில்லாததுமான அறநெறிகளையும், ஒழுக்க நெறிமுறைகளையும்,

ஜீவகாருண்யம்

‘ஜீவகாருண்யம்’ என்ற வார்த்தை வள்ளலார் அவர்களின் “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் நூலின் முக்கியக் கருத்தாகும்.

மெய்ஞான உபதேசம்

சமயம் அல்லது மதம் போன்றவற்றிலும் லட்சியம் வைக்காமல், எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி, ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், கடவுளின் உண்மை வடிவத்தை (அருட்பெருஞ்ஜோதி) அறிந்து பேரின்ப வாழ்வை அடைவதற்கான உபதேசமே ஆகும்.

ஞானமணி மாலை

ஞானமணி மாலை என்பது, ஒருவரது அறியாமை எனும் இருளைப் போக்கி, மெய்ப்பொருளைத் தியானம், தானம் போன்ற நற்செயல்களின் மூலம் உணர்ந்து, தன்னையும் சிவத்தையும் ஒன்றெனத் தெளிவுபெற்று, முக்தி  நிலையை அடைய வழிநடத்தும்

ஜோதி ஐகூ அந்தாதி

ஞானியர்களின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆன்மநேய ஒருமைப்பாட்டையும், எல்லா உயிர்களிடமும் ஜீவகாருண்யத்தையும் கடைப்பிடித்து, உலகைப் பேதமை நீங்கி ஒன்றாகக் கண்டு, அருட்பெருஞ்ஜோதி என்னும் கடவுள் நிலையை அடையும் வழியை ஐக்கூ பா வடிவத்தில் அந்தாதித் தொடையாகப் பாடும் நூலாகும்.

இயேசு எழுபது அருள்வாய் இயேசுவே

கண் தான் உடலுக்கு விளக்கு! கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவது ஒளி பெற்றிருக்கும்.

இவ்வாக்கியம் தான் பைபிளின் அதி உன்னத ஞான இரகசியம்! நமது உடலுக்கு விளக்கு கண்ணாம்!?

இதுவே வேதப்பொருள்! மெய்ப்பொருள்! 

அன்பு உதய மலர்

காலங்காலமாக நம்நாட்டில் வழங்கிவந்த சனாதன தர்மம் போதித்து வந்தது அன்பைப் பற்றியதே. பிரணவத்தின் -ஓங்காரத்தின் – பகுப்பே அ – உ – ம். அன்பு உதயமாவது நமது தலையில் இறைவன் கருணையால் வழங்கப்பட்ட திருவடியாகிய கண்மலர்களே! அங்குதான் அன்பு கருணை வெளிப்படுகிறது.

செல்வமே சீர் தாருமே

என்னை நானே கேட்டேன்! என்னிடம் நானே கேட்டேன்!
என்னுள் இருக்கும் என் உயிரை அறிய, உணர ஆசை! நான் யார் என அறியும் முயற்சி! நான்தான் அது என ஆன்றோர் அறிவித்ததை உணர முயற்சி! உள்கடந்து போகையிலே உயிரைப் பற்றும் தவம்! எங்கும் நிறைந்த எல்லாம் வல்லவரே என்னுள் இருக்கிறாரல்லவா அவரிடமே கேட்கலாமே!? என்ற எண்ணம்!
கேட்டேன்! ஏராளமாக!! உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சற்குரு கோவிந்த சுவாமிகள்

“உலகே மாயம் வாழ்வே மாயம்” என எனக்கு உணர்த்தி என்னை நெறிப்படுத்திய மாகுரு சித்தர் பெருமகனார்தான் கோவிந்த சுவாமிகள்!கன்னியாகுமரிக்கு என்னை அழைத்தது வாலை கன்னியாகுமரி அம்பாள் அருள் பெறச் செய்தது, கன்னியாகுமரியிலே இருக்கச் செய்தது, குருபீடத்தில் அமர்த்தியது எல்லாம் வல்லவரான சற்குரு கோவிந்த சுவாமிகளே! அவரின் ஒப்பற்ற அருளாசியே!

வள்ளலார் விழியே

வள்ளலார் விழி வழியே செயல்படும் எமது பணிக்கு வள்ளலாரே காப்பு. அவர்தான் நடத்துகின்றார். இந்தநூல் முழுமையும் அவர் வரலாற்றுடன் ஞானம் பரவிக் கிடக்கின்றது. படித்து உணர்ந்து அனுபவப்பட்ட வருங்கால். உபதேசம் திட்சை பெற்று மரணமிலா பெருவாழ்வு வாழுங்கள்.

சத்திய சாய் பாபா

மானஸ பஜரே குரு சரணம்
துஸ்தர பவஸாகர தரணம்

குருவின் திருவடியில் லயித்து மானச பூஜை செய்தே பிறவிக் கடலிலிருந்து மீள வழி!

அண்ட அண்டத்தைக் கண்ணியின் கருவியாகக் கொள்ளலாம்! பிண்ட அண்டம் என்பது கருவிற்குள் இருக்கும் உள்ளடமாகும். கண்மணி பிரம்ம அண்டம் என்பது அதில் உள்ள ஒளியாகும்! அந்த ஒளியின் பிரகாசமாக இருப்பது பரம்பொருள்!”

 

ஜோதிமணி மாலை

 ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்

ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

2. வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி

மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி

ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி

ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

3. ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே

வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே

பதிப்புரிமை அறிவிப்பு (Copyrights Notice)

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களால் இயற்றப்பட்ட அனைத்து நூல்கள், எழுத்துக்கள், வெளியீடுகள் மற்றும் போதனைகள் யாவும் தங்க ஜோதி ஞானசபை அறக்கட்டளையின் (Thanga Jothi Gnana Sabai Trust) பிரத்தியேக அறிவுசார் சொத்து ஆகும். இந்த ஆக்கங்கள் இந்திய பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் பொருந்தக்கூடிய சர்வதேச பதிப்புரிமை ஒப்பந்தங்களின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த ஆக்கங்களின் எந்தவொரு பகுதியையும் அறக்கட்டளையின் முன்னனுமதி இன்றி (எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி), எந்த வடிவத்திலும், எந்த வகையிலும்—அது மின்னணு, இயந்திர, டிஜிட்டல், ஒளிநகல், பதிவு அல்லது வேறு வழிகள் என—நகலெடுக்கவோ, மறுஉருவாக்கம் செய்யவோ, தகவல் மீட்டெடுப்பு அமைப்புகளில் சேமிக்கவோ, மொழிபெயர்க்கவோ, தழுவவோ, விநியோகிக்கவோ, பிரசுரிக்கவோ, ஒளிபரப்பவோ, அல்லது கடத்தவோ அனுமதிக்கப்படாது.

இந்த ஆக்கங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அங்கீகாரமின்றிப் பயன்படுத்துதல், மறுஉருவாக்கம் செய்தல் அல்லது விநியோகித்தல் என்பது அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் செயலாகக் கருதப்படும் மற்றும் சட்டத்தின் கீழ் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறல் செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது இந்திய பதிப்புரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நூல்களும் எழுத்துக்களும் ஆன்மீக வழிகாட்டுதல், கற்றல் மற்றும் வணிகரீதியற்ற நோக்கங்களுக்காக மட்டுமே பொதுவில் பகிரப்படுகின்றன. வாசகர்கள் இந்த ஆக்கங்களை பக்தியுடனும் மரியாதையுடனும் கற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வணிகரீதியான சுரண்டல், மாற்றியமைத்தல் அல்லது மூல போதனைகளைத் திரித்துக் கூறுதல் ஆகியவை அனுமதிக்கப்படாது.

 

அனுமதிகள், மறுஉருவாக்க உரிமைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டிற்கு, தயவுசெய்து தங்க ஜோதி ஞானசபை அறக்கட்டளையை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.

Scroll to Top