குருவிடம் பக்தி செலுத்து! உருப்படுவாய்! எப்படியோ பக்தி வேண்டும்! அதுதான் உனக்கு பணிவை கொடுக்கும்! ஒழுக்கத்தை கொடுக்கும்! நல்ல நெறியோடு வாழ்வாய்! பக்தியே முக்திக்கு முதல்படி!
மூட நம்பிக்கையில் மூழ்கி விடாதே!? பரிகாரங்கள் செய்வது, உலக மாயையில் சிக்கி அதற்காக அலைவது பக்தியல்ல!? ஆடம்பரத்துக்காக அன்னதானம் செய்வது சேவை செய்வது பக்தியல்ல!!
இறைவனின் பெரும் புகழை மனமுருகி பாடு! ஆடு! இறைவனைப் பற்றி உலகுக்கு எடுத்துக்கூறு!
ஞான தானம் செய்! இறைவன் ஒவ்வொரு மனித உடலிலும் உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்கஜோதியாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு இதுவே ஞானதானம்! இதை விளக்கும் மெய்ஞ்ஞான நூற்களை தானம் செய்!
“பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை கூட்டும்” என்பதே ஆன்றோர் வாக்கு! பக்தி முத்தினால் ஞானம்! ஞானம் முத்தினால் முக்தி! ஒளியுடல்!
கண்ணிலே மணியிலே ஒளியிலே பக்தி செலுத்து! பணி! அன்பு செலுத்து! அவிலே அன்பு – அன்பு உ செலுத்து! அவிலே உ வை செலுத்து அதுவே ஞானத்தில் பக்தி! ‘அ’ வாகிய சூரியன் ஊடுருவ வேணும் ‘உ’ விலே சந்திரனிலே!