ஞானதவம் செய்பவனுக்குதான் சஞ்சிதகர்மம்

ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ புண்ணியமாக அவரவர்க்கே திரும்பி வருகிறது.
அவை பிராரத்துவம் – ஆகாமியம் – சஞ்சிதம் என மூன்று வகைப்படும்.

சராசரி மனிதனுக்கு பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது. பிறந்து வாழ்வதில் ஆகாமியம் நடக்கிறது.
அவரவர் வினைக்கேற்ப, நல்லது கெட்டது – பாவ புண்ணியம் கூடவோ குறையவோ செய்கிறது.
சராசரி மனிதன் வாழ்வு இதிலேயே முடிந்து போகிறது.

ஆனால் சாமான்யன் ஆன்மீக சாதனை செய்பவன் – சற்குருவை பெற்று,
ஞானஉபதேசம் – திருவடி தீட்சை பெற்று தவம் செய்பவன்,
ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுகிறான்!
பிராரத்துவம் குருவருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாது ஆகிவிடும்.
அதன் பிறகுதான் சஞ்சிதகர்மம் வந்து தாக்கும்.
குருவை நாடி ஞானதீட்சை பெற்று தவம் செய்பவனுக்குதான் சஞ்சிதகர்மம்!
மற்றவர்க்கில்லை! எதற்கு வருகிறது? இல்லாமலாவதற்க்குத்தான்! ஒரு கருமமும்
இல்லாமல் ஆனால் தானே பிறப்பு இல்லாமல் போகும்!? இனிமேல் பிறப்பு இல்லாத நிலை என்றால்?!
பிறந்த இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா? நமக்கு வேண்டுவது அதுதானே!
நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கப்பெற்று வாழ்வாங்கு வாழலாம்!

-ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா

Scroll to Top