நெய்யினால் சுடு நெருப்பவிப்பவன்………….. பாடல் 9
எரிகின்ற நெருப்பில் நெய்யை ஊற்றினால் அது மேலும் கொழுந்துவிட்டெரியும். இது புறப்பொருள். நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முடியாது. நீரை ஊற்றித்தான் நெருப்பை அணைக்க முடியும் . ஆனால் வள்ளல் பெருமான் கூறும் ஞானம் என்ன என்று பார்க்கலாமா?!
உலகத்தில் உள்ளதற்கு நேர்மாறாக உள்ளதே நம் ஞான அனுபவம். நம்கண்மணியில் உள்ள ஒளி இருப்பது நீரில் !? நீர் மேல் நெருப்பாக நின்றிலங்குகிறான் இறைவன்! கண்கருவிழியினுள் பிராணநீரில் தான் கண்மணி ஒளி துலங்குகிறது. சித்தர் பெருமக்கள் கூறும் ஞான இரகசியம் இது! சாதாரண நெருப்பு நீரில் அணைந்துவிடும். நம் கண்மணி உள் ஒளி எல்லாம் வல்ல அந்த பரம்பொருளின் பேரொளியின் ஒரு துளி!? இந்த கண்மணி ஒளி எதாலும் யாராலும் அழிக்க முடியாத தண்ணொளி !? சாட்சாத் இறைவனே!
நம் கண்மணி ஒளியை குருதீட்சை மூலம் உணர்ந்து தவம் செய்யச் செய்ய ஒளிபெருகும். பெருநெருப்பு ஆறு போல் பாயும்! வெண்சாரைபாம்பு போல் உள்ளே ஊர்ந்து சென்று அக்னி கலையை அடையும்! இருகண் ஒளியான சூரிய சந்திர ஒளி அக்னியோடு சேர்ந்து மேலும் பெரு நெருப்பாகும்! ஓங்கி வளரும் நெருப்பு மேலேறும் உச்சிக்கு போகும். நம் சகஸ்ரதளமாகிய சிரநடு உச்சியில் ஒளி வர வர அங்கு சேர்ந்திருக்கும் அமுதம் அதுதான் நெய்சொட்டு சொட்டாக நம் தொண்டையில் வரும்! எந்த நாடி வழியாக ஒளி மேலேறுமோ அதே நாடி வழியாக நெய் – அமுதம் வழியும்போது சுடுநெருப்பு அவிந்து போகும். குளிர்ச்சி பொருந்திய நெருப்பாகி விடும்! சுடும் நெருப்பல்ல!?
நாம் நீரிலே அரிசியை கொட்டி பானையில் வைத்து அடியிலே நெப்பை மூட்டி சமைப்பது போல , சூரிய சந்திர அக்னி ஆகிய மூன்று நெருப்பை கூட்டி எழுப்பி உறைந்த அமுதத்தை இளகச்செய்து பருகுவதோடு சுடுநெருப்பு சுகநெருப்பாகி விடும் !? இதுவே ஞான அனுபவம்! இதுதான் நெய்யால் சுடுநெருப்பை அவிப்பதாகும் !? இங்கு நெய் அமுதம் அவிப்பது வேகவைப்பது அணைப்பதல்ல!? வள்ளல் பெருமான் இது போன்ற ஞான இரகசியங்களை எல்லோரும் அறிய அடியேனை எழுத வைத்திருக்கிறார். அருள் வள்ளல் அல்லவா? எல்லோரும் அருள் பெற வேண்டும் ! உணர வேண்டும்! மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் என்பதே அவர் எண்ணம்!
குளிர்ச்சி பொருந்திய தாமரை திருவடிகளாகிய நம் கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்க! பொன்னடி – தங்க ஜோதியை காணலாம் !
நூல் திருவருட் பாமாலை 2
பக்கம் 24
குருவே சரணம்