விட்ட குறை தொட்ட குறை

மனிதன் இறந்தால் அவனுடன் அவன் மனைவி மக்கள் சுற்றம் அவன் சேர்த்து வைத்த
பொன் பொருள் வீடு வாசல் சொத்து எதுவும் கூட வராது!? இந்த உண்மை எல்லோரும் அறிந்தது தானே!

ஆனால் அந்த மனிதன் இறைவனை எண்ணி ஏதாவது செய்திருந்தால் அந்த புண்ணியம் கூடவரும்.

அவன் வாழ்வில் செய்த வினை கூட வரும்.

ஞானத்தை தேடியிருப்பானாயின் கண்டிப்பாக அந்த ஞானம் கூட வரும்.

இதைத்தான் பெரியோர்கள் “விட்ட குறை தொட்ட குறை” என்பர். அடுத்த பிறவிக்கு
இந்த ஞானம் துணை செய்யும்! “விட்டகுறை இருந்தால் கிட்டும் தானே!”

மனிதனே, இந்த உலகத்தில் நீ ஞானம் பெற முயற்சி செய்தால் இந்த பிறவியில்
அது கிட்டாமல் போனாலும் செய்த ஞான சாதனை அடுத்த பிறவியில் நிச்சயம் கை கொடுக்கும்.🔥🔥🔥

முடிந்தவரை தவம் செய்! 👁️🔥👁️
தவம் செய்வோருக்கு உதவி செய்!

🔥இறைவனைப் பற்றி எல்லோருக்கும் கூறு!🔥
🙏🏻ஞான தானம் செய்!🙏🏻

Scroll to Top