நெடுமொழி வஞ்சி

நெடுமொழி வஞ்சி


வார்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
பார்க்கி றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
ஊருக்குள் மேவிய சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே


காமம் எனும் புலையன் நம்மை பெண் மோகத்தில் அழுத்திகெடுத்து விடுவான்! ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையால் வீழ்த்தப்பட்டாரே! நாம் எம்மாத்திரம்! மீண்டும் மீண்டும் திரும்பத்திரும்ப காமம் எனும் புலையன் எப்படியாவது நம்மை வீழ்த்தப்பார்ப்பான்! நாம் நம் கண்மணி ஒளி அழகில் தான் மயங்க வேண்டும்~! உலக பொருட்கள் எதற்கும் மயங்க கூடாது. கண்மணியை சிக்கென பிடித்தால் ஒளிபெருகும். அந்த ஒளியாகிய வாளால் காமத்தை வெட்டி வீழ்த்தலாம்! பெண்ணால் தானே காமம் வரும்! பெண்ணை தாயாகப்பார்த்தால் காமம் வராதல்லவா? எல்லா பெண்களையும் தாயாக பாருங்கள்! வாலை தாயை பணியுங்கள்!

காமத்தை வெல்ல காமத்தை – மாயையை ஆட்சி செய்பவளை தாயாக காண்பதே தப்பிக்கும் ஒரே வழி! காமத்தை ஆட்சி செய்பவளே காமாட்சி! காமாட்சி தாயை வழிபடு! முதலில் காமனை வெல்லலாம்! காமனை வென்றால் தான் காலனை வெல்ல முடியும்! அதற்க்கு ஒரே வழி தாயை சரணடைதலே!

காமம் கோபம் லோபம் மோகம் மதம் ஆணவம் இன்னும் பல துர்க்குணங்களால் மனிதன் கெட்டுப்போகிறான். அனைத்திலிருந்தும் விடுபட ஒரேவழி இறை அருள் பெறுவதுதான்! இறை அருளால் தான் நாம் தப்ப முடியும்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top