சொல்லும் பொருளுமாய் நிறைந்த
சுகமே யன்பர் துதி துணையே
புல்லும் புகழ்சேர் நற்றணிகைப்
பொறுப்பின் மருந்தே பூரணமே
அல்லும் பகலு நின்னாமம்
அந்தோ நினைந்துன் னாளாகேன்
கல்லும் பொருவா வன்மத்தாற்
கலங்கா நின்றேன் கடையேன்
சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே…
சங்க பாணியைச் சது முகத்தனை
செங்க ணாயிரத் தேவர் நாதனை
மங்கலம் பெற வைத்த வள்ளலே
தங்கருள் திருத் தணிகை யையனே
திருமாலும் பிரம்மனும் இந்திரனும் மேன்மை பெற வைத்தது
தணிகை ஐயனின் கருணையே.
தணிகை நாயகன் வால நற்பத வைப்பென் நெஞ்சமே -…
நாளை யேகியே வணங்குவது மெனத்தினம்
நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ
உயர்திருத் தணிகேசன்
தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல்
தணந்திடல் தனையிந்த
வேளை யென்றறி வுற்றிலம் என் செய்வோம்
விளம்பரும் விடையோமே
ஒவ்வொரு நாளும் நாளைக்கு போய் இறைவனை…
விண்ணறாது வாழ் வேந்த னாதியர்
வேண்டி யேங்கவும் விட்டென் னெஞ்சகக்
கண்ணறாது நீ கலந்து நிற்பதைக்
கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
எண்ணறாத் துயர்க் கடலுண் மூழ்கியே
இயங்கி மாழ்குவேன் யாது சேகுவேன்
தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ்
சாமியே…
பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும்
பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவி லேனும்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ
விண்ணேறு மரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கே யென்கண்ணே மெய் வீட்டின் வித்தே
தண்ணேறு பொழிற் றணிகை மணியே…
சீர் பூத்த வருட்கடலே கரும்பே தேனே
செம்பாகே எனது குலத் தெய்வமேநல்
கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானக்
பேர்பூத்த நின்புகழைக் கருதி யேழை
பிழைக்கவருள் செய்வாயா பிழையை நோக்கிக்
பார்பூத்த பாவத்திலுற விடிலென் செய்கேன்…
செழுஞ்சுடர்மாலை
ஊணே உடையே பொருளே என் றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்…
அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு
வடிகளை யன்போடும்
பணிகிலே னகமுருகி நின் றாடிலேன்
பாடிலேன் மனமாயை
தனிக்கிலேன் றிருத் தணிகையை நினைக்கிலென்
சாமிநின் வழிபோகத்
துணிகிலே னிருந்தென் செய்தேன் பாவியேன்
துன்பமும் எஞ்சேனே
திருவாகிய இறைவன் ஒளியானவன் இருக்கும் தணிகையை -
குற்றம் தணியும் கை இரு கண்ணை நினைக்கவில்லையே!
வேல் கொண்ட…
சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கண்ட வன்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே
இராமலிங்க சுவாமிகள் 9 வயது…
கந்தர் சரணப்பத்து
அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனைஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்…