சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கண்ட வன்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே

இராமலிங்க சுவாமிகள் 9 வயது பாலகனாக இருந்த போது
தன் வீட்டில் ஒரு கண்ணாடியும் அதன் முன் விளக்கும் ஏற்றி
வைத்து அதன் முன் அமர்ந்து கண் திறந்து பார்த்திருந்து
பார்த்திருந்து தியானம் செய்தபோது கிடைத்த அனுபவமே
இப்பாடல். யார் தியானம் செய்தாலும் கிடைக்கும் முதல் அனுபவம்
இதுதான். கண்ணாடியில் நம் உருவம் தெரியும். நம் கண்ணில் விளக்கின்
ஜோதி பிரதிபலிக்கும். இப்படியே பார்த்து பார்த்து இருக்க இருக்க
நம் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்! நம் இரு கண்மட்டும்
தெரியும். கண்மணி ஒளி தெரியும். இதை விவரித்துத்தான் வள்ளலார்                                                       பாடினார் இப்பட்டை! சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறு- சீர் இறைவன்                                                  நமக்கு கொடுத்த சீர் ஒளி – உயிர். அந்த ஒளியை கொண்ட இரு மூன்று
வட்டம் கொண்ட இரு கண்களே ஆறுமுகம் என்றார். முகத்து முகம் கண்!

பண்ணிரு தோள் – பன்னிரு கலையுடைய வலக்கண் தாமரைதான் – தாமரை
போன்ற திருவடி – இருகண். வேல் மூன்று ஜோதி சேர்ந்த நிலை. மயில் பலவர்ண ஒளி.

கோழி – ஒலியை குறிக்கும். கார் கொண்ட – மழை போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், தணிகாசலம் – நம் காமகுரோதாதிகள் எல்லாம் தணிந்தபோது, முருகன் – ஒளி              என் கண்ணுற்றதே – என் கண்ணில் தெரிகிறது. பாலகனாயிருந்த போதே வள்ளலார் மாபெரும் ஞான அனுபவ நிலை எய்தினார்.
கண் மூன்றுறு செங்கரும்பின் முத்தே
பதம் கண்டிவான்  – பாடல் 2

கண் மூன்றில் – உறும். 1 கண் மூன்று வட்டம். வெள்ளை விழி – கருவிழி
– கண்மணி இதுவே கண் மூன்று என்றதாகும். அதில் உறுவது ஒளி. அது
செங்-கரும்-பூ தியானம் செய்ய செய்ய கண் சிவப்பாகும்.

கண்தான் கரும்-பூ என்பது கரும்பு அல்ல. கரும் பூவாகிய கண்ணில் முத்து
போன்ற வெள்ளொளி தோன்றும் அப்போது கண்வெள்விழி சிவப்பாகும்.
அதுதான் அனுபவம். இந்தபடியே காண்பவன் தான் பதம் இருகண்களாகிய
இறைவனின் ஒளி பொருந்திய பாதம் – திருவடி காண்பான்!

மாணித்த ஞான மருந்தே என் கண்ணினுள்
மாமணியே  – பாடல் 3

என்றும் உள்ள நித்தியானந்தம் தரக்கூடிய ஞான மருந்தானே என்
கண்ணுள் இலங்கும் மாமணியே. கண்மணியில் உள்ள ஜோதியே ஞான மருந்து.

தணிகாசலத்திற் பரனே குமார பரமகுருவே குகா
எனக்கூவி நிற்பேன் – பாடல் 7.

தியானம் செய்து செய்து நம் துர்குணங்கள் எல்லாம் தணிந்த நிலையிலே தான் – நாம் தான் தணிகாசலம். அப்போது நம் உள்ளொளி தோன்றும். அது குமரன் இளமையானது. பரம  குரு. நமக்கு நம் உயிரான ஒளி தான் குருவாக இருந்து நம்மை வழி நடத்தி சிவமாகிய பேரொளியிடன் சேர்ப்பிக்கும் குமரனே குமரனே பரமகுரு அவன் இருப்பிடம் நம் இருதய குகை, இரு உதய குகை. இரு கண்மணி உள்ளகும் கையில் இருப்பதால் குகா இதை எல்லோரும் அறிய கூவுவேன்.

தெய்வ மணிச்சுடரே
தணிகை சிவ குருவே  – பாடல் 14

தெய்வம் சுடராக நம் மணியில் கண்மணியில் இருக்கிறது.
தியானம் செய்யச் செய்ய நம் குறையெலாம் தணிந்தாலே
குருவாக நம் உள்ஒளி – முருகன் – சிவத்துக்கே குருவான
ஞான பண்டிதன் வருவான் சிவகுரு.

கருப்பாழ்செயும் உன் கழலடிக்கே –  பாடல் 19

இறைவனுடைய ஒளி பொருந்திய திருவடிகளே நாம் மீண்டும்
கருப்பையில் புகாமல் காத்து அருள் செய்யும்.

யென் கண்மணியே
என் சிரம் செருங்கொலோ நின் துணையடியே  – பாடல் 20

என்கண்மணியே என் சிரத்தில் – தலையில் பாதிக்கப்பெற்ற
இறைவனுடைய துணையடி இரு திருடியாகும்.

அருணகிரிபாடும் நின்னருள் தோய்ப்புகழை  – பாடல் 21

அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் முருகன் அருளால் பாடியதாகும் ,
ஞானபாக்கள் .

மனோலயம் வாய்ந்திலேனேல் சனன மரணமெனும்
கடற் கென் செய்வேன்  – பாடல் 22

மனம் லயம் ஆகாவிட்டால் பிறப்பு இறப்பு எனும் கடலில்
ஆழ வேண்டியது தான்,

மனம் லயமாகும் இடம் ஆலயம், அது தணிகை மலை. நம்
அனைத்து  துர்குணங்களும் தணிந்தால் – தணியும் இடமே ஆலயம்
– தணிகாசலம். குணம் – மனதின் வெளிப்பாடு தானே. குறை தணியும் இடம்
மனம் லயமாகும் இடம் அ  லயமாகும். இடம் கண் . அ – சூரிய கலை வலது கண். அ -லயமானால் மனம் லயமானால் ஒளி – இறைவன்- ஆத்மாவை காணலாம். கண்டால் பிறப்பு இறப்பு இல்லை. மனம் அ – வில் வலது கண்ணில்  லயமாகுமானால் மனம் இருப்பது கண்தானே!

மண் நீர் அனல்  வளிவானாகி  நின்றருள் வத்து – பாடல் 25

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களும் சேர்ந்த
ஒரு பொருள்தான் நம் மெய்ப்பொருள் கண் – ஒளி.

அணி ஆதவன் முதலா மட்டமூர்த்தம் அடைந்தவனே – பாடல் 26

தணிகாசலமான – நம் குற்றங்கள் தணியும் இடமான அணி கண்ணே!
சூரியன் சந்திரன் துலங்கும்  8 ஆனவன், எட்டில் மூர்த்தியாக இருப்பவன்.
8 வலது கண் 2 இடது கண்.

கண்ணவனே தணிகாசலனே – பாடல் 28

நம் குற்றங்கள் தணியும் இடமான கண்ணே – தணிகாசமூர்த்தி –
இருக்குமிடம்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

Share

Leave a comment