தேனே உளங்கொள் தெளிவே அகண்ட
சீதம்மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவபோத ஞான
குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய்…
தணிகை மலையைச் சாரேனோ
சாமி யழகைப் பாரேனோ
பிணிகை யரையைப் பேரேனோ
பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ
ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ
பார்மீ திரங்கும் நீரேனோ
தணிகை மலையான என் கண்மணியை சார்ந்தால் -…
தேனார் அலங்கல் குழல்மடவார்
திறத்தின் மயங்காத் திறல் அடைதற்க்
கானார் கொடியெம் பெருமான்தன்
அருட்கண் மணியே அற்புதமே
கானார் பொழில்சூழ் திருத்தணிகைக்
கரும்பே கருணைப் பெருங்கடலே
வானார் அமுதே நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே
பெண்ணாசையில் மயங்காது காத்து, சிவனாரின் அருட்கண்மணியே…
மஞ்சட் பூச்சின் மினுக்கி னிளைஞர்கள்
மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
கொஞ்சிக் கொஞ்சி நிறையழிந் துன்னருட்
கிச்சை நீத்துக் கிடந்தன னாயினேன்
மஞ்சுற் றோங்கும் பொழிற்றணி காசல
வள்ள லென்வினை மாற்றுத னீதியே
தஞ்ச மென்று வந்தடைந்திடு மன்பர்கள்
தன்மை காக்கும்…
வா வா என்ன அருள்தணிகை
மருந்தை யென்கண் மாமணியைப்
பூவாய் நறவை மறந்தவநாள்
போக்கின் றதுவும் போதாமல்
மூவா முதலில் அருட்கேலா
மூட நினைவும் இன்றெண்ணி
ஆவா நெஞ்சே எனக் கெடுத்தாய்
அந்தோ நீதான் ஆவாயோ
வா வா என அனைவரையும்…
நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலையதனை
நனை யென்றன்
கண்ணே நீ யமர்ந்தவெழில் கண்குளிர காணேனோ கண்டுவாரி
உண்ணேனோ வானந்தக் கண்ணீர்கொண் டாடியுனக் குகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே
என் குறையலாம் தணிந்த - தணிவிக்கும் என்…
கற்கி லெனுள தருட்பெய ராம்குக
கந்தாஎன் பவைநாளும்
நிற்கி லேனுன தாகம நெறிதனில்
நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமி லடியவர் அன்பினுள்
தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தருந் தணிகையா ரமுதே
ஆனந்த அருட்குன்றே
தணிகை மலை அமுதமே - கண்மணி ஒளியே ஆனந்தம் தரும்
அமுதே - அருள் பொழியும் இறைவா…
பெருமை நிதியே மால்விடை கொள்
பெம்மான் வருந்திப் பெறும் பேறே
அருமை மணியே தணிகை மலை
அமுதே யுன்ற னாறெழுத்தை
ஒருமை மனத்தி னுச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
இருமை வளனு மெய்துமிடர்
என்ப தொன்று மேய்தாதே
பெருமை தரக்கூடிய நிதியே…
மன்னே யென்ற னுயிர்க்குயிரே
மணியே தணிகை மலைமருந்தே
அன்னே என்னை யாட்கொண்ட
அரசே தணிகை யையாவே
பொன்னே ஞானப் பொங்கொளியே
புனித வருளே புராணமே
என்னே யேளியேன் துயருழத்தல்
எண்ணி யிரங்கா திருப்பதுவே
மன்னவனே என் உயிர்க்கு உயிரான மணியே தணிகை…
மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம்
விரைமலர்த் துணைத்தமை விரும்பாப்
பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல்
பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
அளித்திடும் தெள்ளிய வமுதே
தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே
தணிகை வாழ்சரவண பவனே
சத்தியமாக, நெறியோடுவாழும்…