வா வா என்ன அருள்தணிகை
மருந்தை யென்கண் மாமணியைப்
பூவாய் நறவை மறந்தவநாள்
போக்கின் றதுவும் போதாமல்
மூவா முதலில் அருட்கேலா
மூட நினைவும் இன்றெண்ணி
ஆவா நெஞ்சே எனக் கெடுத்தாய்
அந்தோ நீதான் ஆவாயோ
வா வா என அனைவரையும் கூப்பிட்டு தன்னை காட்டும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் தணிகை மருந்தானவன் என்
கண்மணி ஒளியே! பூவிலுள்ள தேனை அறியாதவன். இறைவனை
அறியாமல் வீண் நாள் கழிப்பவன் மூட நினைவுள்ளவன் எப்படி
என்றும் இளமையான கண் மணியை உணர்வான்! அறிவான்!

தன்னால் உலகை நடத்தும் அருட்சாமி – பாடல் 6

யாருடைய துணையுமின்றி தன்னால் உலகை நடத்துகிறான் நம்
கண்மணியுள் ஒளியான அருள்சாமி. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

நெஞ்சே யுகந்துணை யெனக்கு
நீயென்றறிந்தே நேசித்தேன் – பாடல் 9

நெஞ்சே எனக்கு யுகந்த துணை உற்றதுணை உனையன்றி யாருமில்லை
என அறிந்தேன், நேசித்தேன் அன்பு வைத்தேன். நெஞ்சே என்றால் இரு கண்மணி ஒளியே
எனப்படும்.

திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப – பாடல் 11

நம்நெஞ்சமானது வினைகளுக்கேற்ப நம்மை பல்வாராக அலைகழிக்கின்றது. உண்மை அறிந்தும் போகவிடாமல் தடுக்கும். தீயவழியில் தள்ளிவிடும். நரகம் போக தேவையான எல்லாம் செய்யும். மனிதா நீ அதிலிருந்து தப்ப வேண்டும். இறைவன் திருவடி மலரை  பற்றினால் பிழைத்தாய்! இல்லையேல் துன்பம்தான்! ஆகையால் மனிதா நீ திருந்துவாயாக!
மனந்திருந்து! நம் கண்மணி ஒளியை நம் குருவை பணிவாயாக!

குருவினடி  பணிந்து கூடுவதல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்
ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

Share

Leave a comment