கற்கி லெனுள தருட்பெய ராம்குக
கந்தாஎன் பவைநாளும்
நிற்கி லேனுன தாகம நெறிதனில்
நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமி லடியவர் அன்பினுள்
தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தருந் தணிகையா ரமுதே
ஆனந்த அருட்குன்றே

தணிகை மலை அமுதமே – கண்மணி ஒளியே ஆனந்தம் தரும்
அமுதே – அருள் பொழியும் இறைவா உன் நாமம் சொல்லாத என்வாழ்வு
என்னாகுமோ, உன் ஆகம நெறிவாழாத என் நிலை என்னாகுமோ
அப்பழுக்கில்லாத அடியார் அன்பில் தோய்ந்த இனிமையானவனே
காப்பாய்.

ஆவியே அருளமுதே – பாடல் 3

என் ஆவியாக இருக்கும் இறைவா! குறையாத அருள் மழை பொழியும்
அமுதமே.

பொன் செய்க்குன்றமே பூரண ஞானமே
புராதன பொருள் வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே – பாடல் 5
தகதகக்கும் தங்க ஜோதிமாலையே! பூரண ஞானம் தரும் கண்மணி ஒளியே !
புராதன பொருள் – மிக மிக பழமையான தோற்றம் அறிய முடியாத  காலத்திற்
முற்பட்ட ஒளியை வைத்துள்ள  கண்மணியே! ஒளி விட்டு பிரகாசிக்கும்
மாணிக்கமே கண் மணி ஒளி  – அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

கண்ணி னண்ணருங் காட்சியே நின் திருக்
கடைக் காணோக் கருணோக்கி
எண்ணி எண்ணி நெஞ்சழிந்து  கண்ணீர் கொளும் – பாடல் 6
கண்ணினால் காண்பதற்கு அருமையான காட்சியே!
அருட்பெருஞ்சோதி ஆண்டவரே உன் திருகடை கண்ணால் அடியேனை
கண்டு அருள் பாலிக்க கூடாதா? என்றும் எண்ணி எண்ணி நெஞ்சம் உருகி
கண்ணீர் பெருக்கெடுத்து வழிய தவம் செயும் எனக்கு அருளிசெய்!
Share

Leave a comment