ஞான முத்துக்கள்

இக்கட்டுரையில் எங்கள் குருநாதர் ஆன்மீக செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள 40 ஞான நூற்களில் உள்ள உண்மை மெய் ஞான விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லா மனிதர்களும் அறிந்து கொள்ள வேண்டியது.

ஞான முத்துக்கள்:

=============================================================

நன்றாக மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். எல்லா ஞானிகள் கூறியதையும் ஒருங்கே தெளிவுபடுத்திக் கூறுகிறேன். சிந்தித்து தெளிவடையுங்கள்.

இறைவன் ஒருவரே!

ஒளியே கடவுள்!

உன் கண்ணே திருவடி!

உன் ஆன்மாவை இறைவனோடு சேர்ப்பாயாக!

வாழு! வாழ்வாங்கு வாழ்க!

சித்தத்தில் சிவனை இருத்தி ஞானதவம் செய்வோர் வாழ்வாங்கு வாழ்வர்!

மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வர்! பின் இறைவனடி சேர்வர்! இது சத்தியம்!

குருவின் திருவடி சரணம்

நூல் : திரு மணி வாசக மாலை
============================================================
*மூச்சை இழுப்பது போன்ற மூச்சுப் பயிற்சி எதுவும் செய்யாதீர்கள்! ஆபத்து!
நீ பிறந்தது முதல் சீராக ஓடும் மூச்சை குழப்பாதீர்கள்!

ஒழுக்கமில்லாமல் சைவ உணவில்லாமல் நீ செய்யும் எந்த யோகத்தாலும் ஒரு பயனும் இல்லை!

சைவ உணவே சன்மார்க்க உணவு! (சைவ உணவே மனிதகுல சன்மார்க்க உணவு)

*ஒழுக்கமே ஞானத்துக்கு அஸ்திவாரம்!*

குருவின் திருவடி சரணம்
============================================================

நாம் யார் என அறிய உணர அறிவு துலங்க வேண்டுமாயின் சற்குரு ஒருவரை பாருங்கள்!

*பணியுங்கள் உபதேசம் கேளுங்கள் தீட்சை பெறுங்கள்!*

இதுவே ஒரே வழி!எந்தப் பொருள் வாங்கினாலும் நல்லதாக பார்த்து தானே வாங்குகின்றோம்!

நாம் கடைத்தேற நல்லகுருவை தேர்ந்தெருங்கள்!மாதா,பிதா,குரு,தெய்வம்!மாதா பிதா நம்மை பெற்றதோடு சரி !

இனி நாம் பெற வேண்டியது குரு அவர் மூலமே தெய்வத்தை அடையலாம்.(திருவடி தீட்சை)

குருவின் திருவடி சரணம்

===================================================================

காலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன் எப்படி, எப்படி இருக்கவேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று வள்ளல் பெருமான் உபதேசம் செய்து உள்ளார்.(திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்)

உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்!? மன மலங்களை போக்குபவனே, மரணமிலாது வாழலாம்!?

உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது. இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்! இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.

தலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வதுதான்! குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய – திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும். அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும் . எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும்.

“தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை” நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி அனலால் இளகி கோழை
கரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம்.

தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும். கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும். அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும். 1008 பகுதியாக சிறு சிறு பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008 இதழ் தாமரை என்றனர். ஒளி – சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008 மாற்று பொற்கோவில் என்றார். ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008 மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான்.

எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம்! பிறந்த இப்பிறப்பிலே தானே இனி பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம். விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம். வாரீர் ஜெகத்தீரே!

(தவம் எப்படி செய்ய வேண்டும்?)

குருவின் திருவடி சரணம்
===================================================================

“அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன்”
அம்பலம் என்றால் கோயில் என்றொரு பொருள்!
அம்பலம் ஆகிவிட்டது – வெளிப்பட்டுவிட்டது என்றால் இதுவரை இரகசியமானதாக சொன்னது எல்லோரும் அறிய வெளிப்பட்டுவிட்டது என்பது மற்றொரு பொருள்!

நமது உடலே கோயிலாக கொண்ட அம்பலவாணன் நமது கண்களிலே எல்லோரும் பார்க்கும்படியாகவே, நாம் இந்த உலகத்தையே பார்க்கின்ற கருவியாகவே கண்மணி ஒளியாகவே ஆடிக்கொண்டிருக்கின்றான்!

*கண்ணே – மெய்ப்பொருள்!*
கண்ணிலே மணியிலே பிணைந்திருக்கிறான் புணையாளன் – ஒளி -சிவம்!
அம்பலத்திலே ஆடுகிறான்!
குருவின் திருவடி சரணம்

===================================================================

பற்பலகாலம் தவம் செய்து, *உடலை வருத்தி செய்யும் தவ முனிவர்கள் பலரிருக்க இறைவன் மாணிக்க வாசகருக்காய் இரங்கி அருள்புரிந்து ஆட்கொண்டாராம்!

ஏன்? இறைவனுக்கிந்த ஓரவஞ்சனை?!

யார்? எப்படி? தவம் செய்கிறார்கள்? என இறைவன் பார்க்கிறார்?! (கடவுளை காணும் வழி – திருஅருட்பிரகாச வள்ளலார்)

பூடம் தெரியாமல் ஆடுகிறார் என எங்கள் ஊரில் சொல்வார்கள்!

இறைவன் எங்கிருக்கிறார் எப்படியிருக்காறார் எப்படி அடைவது என தெரியாமல் *கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்பவருக்கு (இது தவமா?) எப்படி இறைவனருள் கிட்டும்!*

குருட்டு பூனை இருட்டிலே கிணற்றிலே விட்டத்தை தாண்டிய மாதிரிதான்!
இப்படி கண்ணை மூடி – கண்மூடித்தனமாக தவம் செய்பவர்களைத்தான் திருமூலர் இவ்வாறு கூறுகிறார்,

“எண்ணாயிரத்தாண்டு யோகம் செய்யினும் கண்ணார் அமுதினை கண்டறிவாரில்லை!”
– திருமூலர்

கண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து *கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை! அதற்கு நீ முதலில் கட – உள்ளே, உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்!
எப்படி கண்மணி வழி! அது தான் ஒரே வழி!

குருவின் திருவடி சரணம்

===================================================================

கண்ணில் ஒளியான சிவத்தை காண்க! காண்க!

விழித்திருந்தால் தான் காண்பீர்கள்!

கண்ணைமூடி தியானம் செய்பவர்கள் காண்பதெல்லாம் மாயை!
தனக்கு காட்சி கிடைத்து விட்டது என்று ஆணவம் மிகுந்து அறிவிழந்து கெட்டுப்போவார்கள்!
மாயை வசப்பட்டவர்கள் மீள்வது கடினம்!

மாயையிலிருந்து விடுபட *ஞானசற்குருவிடம் சரணடைந்து (பக்தி குரு, கர்ம குரு, யோக குரு அல்ல!)* ஞானதீட்சை மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக் கொள்ளுங்கள்!

பின்னரே உங்களுக்கு கிட்டும் ஞானம்! உங்கள் இமைகளை முதலில் திறவுங்கள்! விழித்திரு! விழித்திருந்தாலே விழிப்புணர்வு வரும்!

விழிப்புணர்வு தான் அறிவை பெருகச் செய்யும்! மூடத்தனத்தை போக்கும்!

(அகத்தியர் சொல்லும் மடையர்கள்)

குருவின் திருவடி சரணம்

===================================================================
உலகத்தவர் கதை கதையாய் விதம் விதமாய் என்னவெல்லாமோ கூறுவர்!?

இவை யனைத்தையும் தூரத்தள்ளிவிங்கள்! இறைவனை துதி செய்யுங்கள்!

குருவை நாடி இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருக்கிறான் என்பதை ஓர்ந்து தெளிந்து தவம் செய்யுங்கள்!

அப்போது கண்மணி சுழற்சி கூடும் இதுவே தவப்பலன்! நோக்கு! பார்!. உணர்! அங்கேயே நில்!

ஒளி பெருகி முச்சுடரும் ஒன்றாகி விதியை வென்றிடலாம்!

குருவின் திருவடி சரணம்
===================================================================
“கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு”
– அகத்தியர்

வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர்!

கண்ணில் நின்ற ஒளிபாரு *இதுவே ஞானதவம்! கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து கண்மணி நடுவே ஊசி முனைவாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு!

நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண் இரண்டும் அடங்கிப்போகும்! இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் – உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும்!!
குருவின் திருவடி சரணம்
===================================================================
நன்றாக மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். எல்லா ஞானிகள் கூறியதையும் ஒருங்கே தெளிவுபடுத்திக் கூறுகிறேன். சிந்தித்து தெளிவடையுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே. அந்த இறைவனின் அணுப்பிரமாணமே நம் ஜீவன்.

நம் உடலில் ஜீவனாய் இறைவன் இருக்கிறான். நம் உடலில் கண்மணியில் ஒளியாக ஜீவன் உள்ளது. கண்மணியில் மனதை நிலை நிறுத்துக.

இம்முறையில் சாதனை தொடர்ந்தால் அனுபவங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்.
மேனிலை அடைவீர்கள் உறுதி, சத்தியம்.

இதுதான் உண்மை.

குருவின் திருவடி சரணம்
===================================================================
நம்மை நாம் அறிவதே ஞானம்!?

நாம் – ஆன்மா.

நம் உடலில் உயிராய் இருப்பதே ஆன்மா.

நம் உடலில் கண்களில் ஒளியாக நின்று நடமாடுகிறான் ஆன்மாவாகிய இறைவன்.

நம் உடலின் உட்புகுவாசல் கண்கள்.

நம் கண் வழி கருத்தை செலுத்தினால் காணலாம் இறைவனை கண்ணாலே!
பேசலாம் உள்ளத்தால்!

மௌனமாக இருந்து, மௌனத்தில் மனதை ஊற்றி இருந்தால் கிட்டிடும் ஞானம்.
அதனால் பெறுவதே பேரறிவு.

பேரானந்தம்.

குருவின் திருவடி சரணம்
===================================================================
வினை வழி வந்த மனிதரில் பலர், அறியாமையால் குருடாயிருக்கும் நம் கண்களை திறக்கும் சற்குருவை அறியமாட்டார்கள் அடையமாட்டார்கள்!

நம் கண்களை வினைத்திரையால் மூடப்பட்டு, நாம் கண்ணிருந்தும் குருடராகவே இருக்கிறோம்!?

நம் கண்ணிலிருக்கும் வினைத்திரையை விலக்கி கண்மணி ஒளியை தூண்டி உணரச் செய்யும் ஒரு நல்ல ஞான சற்குருவை பெற வேண்டும்!
பெறுவார்களா?
பெறமாட்டார்களே!?

போலிச்சாமியர்களை நம்பி பணத்தை மானத்தை இழப்பவர்களே அதிகம்!

நமது கண்கள் குருடு என்பதை அறியாத போலி வேஷதாரிகளை குருவாக கொள்வர் சீரழிவர்!!

நம் கண்களை திறப்பவனே உண்மை குரு!*

நம் கண்ணில் ஒரு மறைப்பு உள்ளது என காட்டி அதை அகற்ற *தவம் செய்யச் சொல்லித் தருபவரே உண்மை ஞானி சற்குரு!*

முதலில் புறக்கண்ணை திறக்கச் சொல்பவனே, *இமைகளை திறந்து தியானம் பண்ணச் சொல்வபனே உண்மை குரு!*

அந்த உண்மை மெய்ஞான சற்குரு அருளாலே, புறக்கண்ணை திறக்க – கண்மணி ஒளியை தூண்ட வழி கிட்டி, நாம் தவம் செய்தாலே முதலில் புறக்கண் திறக்கும்!

பின் அகக் கண்ணும் திறக்கும்?!

இப்படிப்பட்ட குருவை பெற வேண்டும்! (உண்மை குருவை பெற என்ன செய்ய வேண்டும்?)

குருவின் திருவடி சரணம்
===================================================================

மூக்குநுனி சுழியை பார்த்து மூட்டடா!

கண்ணுக்கு மூக்குநுனி கண்மணிமத்தியே!

அதுதானே கண்தானே சுழித்துக்கொண்டு வட்டமாக இருக்கிறது!

கண்மணி ஒளியை பார்த்து நினைத்து உணர்ந்து ஒளியை மூட்டு *மூட்டடா என்கிறார் அகஸ்தியர்!

மூக்கை பார்ப்பவன் மூடன்!

மூக்குநுனி சுழி என்றால் கண்!

*ஞானம்பெற விழி* – சுடரேற்று. ஒளிரசெய்!

குருவின் திருவடி சரணம்
===================================================================

கண்ணில் தான், கண்மணியில் தான், கண்மணியில் உள் உள்ள ஒளிதான் நம்மை காக்கும் இறைவன் என்பது தெரியாதல்லவா?!

அதுபோலத்தான்!

இதை அறிந்தவர் சொன்னால்தான் முடியும்!

அப்படித்தான், அறிந்தவர் மூலம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பரிபாஷையாக சொன்னார்கள் ஞானிகள்!

அறிந்து சொல்பவன் குரு!

தெரிந்துகொள்ளவருபவன் சீடன்!

கண்ணால் எல்லாம் பார்க்கிறோம் கண்ணை பார்க்க முடியுமா?

தவத்தில் தான் நம் கண்ணை நம் கண்மணி ஒளியை நம் உயிரான இறைவனை காண முடியும்!

கண்ணை திறந்தால்* தான் உள்ஒளியை காணலாம்!
திறப்பவர் தான் குரு!
“தகுந்த ஆச்சாரியர் மூலம் நடுக்கண் திறக்கப்பெற்றுக்கொள்வது நலம்”
– என வள்ளல் பெருமான் உபதேசித்துள்ளார்!

குருவின் திருவடி சரணம்
===================================================================

இந்த உலகில் போலிகளே ஏராளம்!

மயக்குபவர்களும் மயங்குபவர்களும் ஏராளம் ஏராளம்!

உண்மையான ஆன்ம தாகம் கொண்டவர் வாழ்வில் ஒழுக்கமாக நெறியானவர்களுக்கு அவன் அருளால் நல்ல செய்திகள் காதில் விழும்!

கர்மத்தால் தடுமாறும் அவன் செய்த புண்ணணியத்தால் வைராக்கியத்தால் உண்மை அறிவான்!
பல விதபோராட்டங்களுக்கு பின்னரே ஞானம் பெறுவான்!

ஏனெனில் முற்பிறவி பலவற்றில் செய்த கர்மத்தை எங்கே கொண்டு தொலைப்பான்?!
தவம், ஞான தவத்தால் தான் கொஞ்சங்கொஞ்சமாக கர்மத்திரை விலக வேண்டும்!

குருவருள் இந்த சமயத்தில் தான் பரிபூரணமாக இருக்கணும்!

குருவருளால் தான் நாம் கடைத்தேற முடியும்!

குருவில்லா வித்தை பாழ்!

குரு பார்க்க கோடி வினை தீரும்!

குருவே பரப்பிரம்மம்.

அந்த இறைவனே ஆத்ம சொரூபமாக குருவாக உன்னை காத்தருள்வார்!

குருமூலம் எதை கற்கணுமோ அதை கல்!

கற்றபடி நில்!

நின்றால் நிலைப்பாய்!

நீ அவனாவாய்!

நீயே அதை உணர்வாய்!

எதைப்படிப்பது குருவைபடி! பிடி!

குருவின் திருவடி சரணம்
===================================================================

“அன்னசத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று” – பாரதியார்

அன்னதானம் என்றால் *ஞானி ஒருவருக்கு உணவு கொடுப்பது சாலச் சிறந்தது.*

அதூவல்லாமல் ஆயிரம் சத்திரம் கட்டி *பல லட்சம் மக்களுக்கு உணவு கொடுப்பதை விட ஒருவனுக்கு அவன்

ஆத்மாவை அறிந்து கொள்ளும் ‘அ’ ‘உ’ எழுத்தை உபதேசிப்பதே மிக மிக உத்தமம்!*

தானத்தில் சிறந்தது ஞானதானமே!

அரிதான மானிட உடல் எடுத்து குறையின்றி பிறந்து ஞானக்கல்வி கற்று *ஞானதானம் ஞானதவம்* செய்தாலே மோட்சம் கிட்டும்!
– ஒளவையார் கூற்று.

ஞானம் எல்லோரும் அறிய கூறு!

வள்ளலார் உலகரை மரணமிலா பெருவாழ்வு பெற வருக என கூவியல்லவா அழைத்தார்!
நாம் மறக்கலாமா?

சிந்தியுங்கள்!

குருவின் திருவடி சரணம்
===================================================================
“விண்ணொளி காண வேண்டின் மெய்யிறை யருளினாலே

கண்ணொளி யுருகச் சேர்த்துக் கருத்தொளி நடுவில் நோக்கிப்

பொன்னொளி மேவும் வாலைப் பொருள்ரசமருந்தி மேலாந்

தன்னொளி கண்டு ஞானத்தானவனாக லாமே” – ஞானக்கடல் பீர்முஹம்மது

விண்ணொளி பரம்பொருளை பெருஞ்ஜோதியான இறைவனை காண வேண்டுமானால்,நமது மெய்யாகிய− உடலாகியதில் கண்ணில் உள்ள ஒளியில் நாட்டம் வைத்து சாதனை செய்ய வேண்டும்.

கண்மணி மத்தியில் கருத்தை வைத்து பார்க்கையில் பொன்னொளி தோன்றும்.

அதாவது தங்க மயமான ஜோதி அந்திமாலை சூரியனை போன்று − தங்க ஜோதி தோன்றும்!

தொடர்ந்து காட்சி தரும் *வாலை அருளால் நம் தலை உச்சியிலிருந்து அமிர்தம் கிட்டும்!*

அமிர்தம் உண்டவனுக்கு நரைதிரை மூப்பு மரணமில்லை!

தன்னொளி காண்பான்!

நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது

குருவின் திருவடி சரணம்
===================================================================

இறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டு வணங்கி கீழே விழுந்து எழுபவர்களே, *இது வல்ல இறைவனிடம் வரம் பெறும் முறை!*

நம் சிரசின் முன்தான் இறைவன் திருவடி – நம் கண்கள் உள்ளதே!

அங்கு ஒளியாக துலங்கும் இறைவனை தொழ வேண்டும்!

எப்படி?

தக்க ஞான சற்குருமூலம் உபதேசம் தீட்சை பெற்று  நம் கண்ணில் மணியில் ஒளியாக துலங்கும் கடவுளை நினைந்து உணர்ந்து *ஞானதவம் செய்ய வேண்டும்!

பணிந்து ஒழுக்கமுடன் *தவம் செய்வோரே* இறைவனிடமிருந்து வேண்டிய வரமெலாம் பெறலாம்!

குருவின் திருவடி சரணம்
===================================================================
கண்திறந்து ஆடாமல் அசையாமல் சும்மா இருந்து, *கண்ணில் ஒளியாக துலங்கும் இறைவனை நினைந்து உணர்ந்து இருப்பதே ஞானம் பெற வழியாம்!

சனாகதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாக வந்த குரு – உலக குரு எல்லா மனிதர்களுக்கும் உள்ளில் விளங்கும் சீவனாகிய சிவகுரு எதுவும் பேசவில்லை?!

கல்வி கேள்விகளில் சிறந்தவர்களான சனாகதி முனிவர்கள் தன் முன் தோன்றிய உருவத்தின் இருப்பைக் கண்டு உணர்ந்து கொண்டனர்.

ஒரு கையில் வேதம் ஒரு கையில் தீ ஒரு கையில் உடுக்கை வேதங்கள் கூறும் *இறைவன் ஒளி ஒலியானவர் சிவ சக்தியானவர்!

பேசவில்லை -மௌனமாக சும்மா இரு!

கண்பாதி திறந்து இருந்தார்!

உணர்ந்தனர் முனிவர்கள்!

கண்ணை திறந்து தவம் செய்!

கண்ஒளியை எண்ணி தவம் செய்!

சும்மா இரு!

இதுதான் ஞானம்! (ஆதிகுரு தட்சிணாமூர்த்தி உணர்த்தும் ஞானம் )

குருவின் திருவடி சரணம்

===================================================================

Share

Leave a comment