ஞான பதிவுகள்

திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்

 

1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்க.

2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.

3. சாதி , சமய , மத , இன வேறுபாடுகளை காணற்க.

4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவதினையும் விளக்குக.

5.புலால் உண்ணற்க. எவ்வுயிரையும் கொலை செய்யற்க. பஞ்ச மா பாதகங்கள் ஆனா (களவு, கொலை, காமம், பொய், கள் உண்ணுதல்) ஆகியவை முற்றிலும் கைவிடுக.

6. காமத்தில் இருந்து மீள உன் மனைவியினை தவிர எல்லா பெண்களையும் தாயாக , சாகோதரியாக  பார். அகில லோக நாயகியான பராசக்தி அன்னையின் அம்சங்களாக பெண்களை பார்த்தல் தான் காமத்தில் இருந்து விடுபட முடியும்.

7. பசித்தவர்களின் பசியினை போக்குதலே உண்மை வழிபாடாக  கொள்க.

8. தகுந்த ஞான ஆசிரியரின் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்க பெறுங்கள். (திருவடி தீக்ஷை என்பது இதுவே).

9. இறக்காமல் வாழ்வாங்கு வாழ ஞான தவம் செய்க.

10. பக்தி யோடும் , பண்போடும் வாழ்க.

11. கடவுளை பற்றி இரகசியம் எதுவும் இன்றி எல்லோரும் அறிய கூறுக.

12. இந்திரிய , கரண, ஜீவ , ஆன்ம , நித்திய , ஜீவகாருண்ய ஒழுக்கங்களை  கடை பிடிக்க.

13. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க. புறத்தே வீட்டிலும் விளக்கு ஏற்றி வழிபடுக.

14. உயிர்  குலமே கடவுள் விளங்கும் ஆலயமாக கருதி உயிர்கட்கு இரங்கி இதம் புரிக. இரகசியம் என எதையும் மறைகாதீர்.

15. வேஷம் போடாதே. ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகில் விளங்க உண்மையாக உழை.

16. மரணமில்லா பெருவாழ்வு எல்லோரும் பெற ஞான தானம் செய்.

வள்ளல் பெருமான் அருளிய ஜீவகாருண்யதினை அறிய கீழ் கண்ட லிங்கில் பார்க்கவும்

(ஜீவகாருண்யம்-அறிக)

 

அருட்பெரும் ஜோதி                                                                                                                                  அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும்கருணை                                                                                                                             அருட்பெரும் ஜோதி

What do you think?