தெரிந்து கொள்ளுங்கள்

தவம் எப்படி செய்ய வேண்டும்?

தவம் எப்படி செய்ய வேண்டும்?

இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து செய்வதே ஆகும்.

கண்ணை மூடி செய்தால் மாயைதான் விளையாடி கொண்டிருக்கும். அதனால் தான் வள்ளலார் விழித்திரு என்று சொன்னார். ஒவ்வொரு கணமும் விழித்திருக்க வேண்டும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதைத்தான் Awareness என்று சொன்னார்கள்.

மேலும் பொதுவாக நம்மிடம் ஒரு கருத்து வேறூன்றியிருக்கிறது. அதாவது இமைகளை திறந்து இருக்கும் போது புற உலகை பார்த்து கொண்டிருப்பதாகவும் மேலும் கண்ணை மூடி தவம்(Meditation) செய்யும் போது அகத்தில் உள்ளே போய் இறைவனை காண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆம், கண் திறந்து இருக்கும் போது புறக்கண் என்றும் கண்ணை மூடி இருக்கும் போது அகக்கண் என்றும் நாமாகவே நினைத்து கொண்டிருப்பதுதான் அப்பட்டமான அறியாமை!

ஆம், கண்ணை மூடி கொண்டு இருந்தால் அமைதியாக இருக்கிறது இதுவே நம்மை உள்ளே கொண்டு போய் சேர்த்து விடும் என்று நம்புவதே ஒரு மாயைதான். கண்ணை மூடி இருந்தால் அது இருட்டு, கண் திறந்து இருந்தால்தான் வெளிச்சம் (ஒளி). வேறொரு விதமாக சொல்வதானால் கண்மூடி இருப்பது என்பது அமாவாசை கண் திறந்து இருப்பது என்பது பெளர்னமி. பெளர்னமி அன்று கிரிவலம் சுற்றுவதுதான் சால சிறந்தது என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். இப்படி ஞானமடைய எப்படி தவம் செய்ய வேண்டும் என்பதைத்தான் பக்தியில் சொல்லி வைத்தார்கள்.

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று சொல்லியாயிற்று. எப்படி என்பதை திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.

“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”

திருமந்திர பாடல் – 2816

இவர்கள் ஏற்றி கொண்ட விளக்கு ஒரு ஞான குருவால் தூண்டி விடப்பட்ட விளக்கு தான். சிலர் குரு இல்லாமல் அடைந்து விடலாம் என்று பொதுவில் பேசி வருகிறாகள் ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று. குரு சுட்டி காட்டாத வித்தை பாழ் என்பதை கேள்விபடாதவ்ர்களே இப்படி பேசுபவர்கள். கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்களுக்குதான் குரு தேவையில்லை என்று சொல்லலாமே தவிர மற்றவர்களுக்கு இல்லை. நாம் கண்ணப்ப நாயனாரா இல்லையா என்பதை அவரவர் மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு சற்குரு நம் மெய்பொருளில் (அ) திருவடியில் சுட்டி காட்டினால்தான் இந்த ஞான தவம் செய்ய முடியும். மேலும் அப்பொழுதுதான் நமது புறக்கண் அகக்கண்ணாக மாறுவதற்க்கான முதல் படி மேலும் தொடர்ந்து சீடன் தவம் செய்ய செய்யவே அது அகக்கண்ணாக மாறும். இதுதான் அகக்ண்ணே தவிர மற்றது அல்ல. ஆம், கண்ணை மூடி கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது எல்லாம் அகக்கண் இல்லை. கண்ணை மூடிட்டான் என்று சொன்னாலே தமிழில் அது செத்தவனைத்தான் குறிக்கும் என்பதை சிந்தித்து தெளிக!விழித்திரு என்பது இதுவே!

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக இங்கு சொல்லவில்லை. ஏன் திறக்க வேண்டும்? எப்படி திறக்க வேண்டும்? மேலும் நமது மெய்பொருளில் (அ) திருவடியில் ஒளிந்திருக்கும் ஞான இரகசியங்கள் எல்லாம் எங்கள் தளத்தில் வெட்ட வெளிச்சமாக போட்டிருக்கிறோம். மேலும் வெளிச்சம் ஆக்குவோம்.

நமது திருவடியான மெய்பொருளின் தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் சூட்சுமங்கள் அனைத்தும் தெரிய வேண்டும். தெரிந்தால்தான் கண்ணை திறந்து எப்படி சும்மா இருக்க முடியும் என்பது தெரியும்! ஞான தவம் என்பது ஒன்றும் அல்ல! சும்மா இருப்பதுதான். ஆம், எல்லா ஞானிகளும் சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள். சும்மா இருப்பது எப்படி என்றால் முதலில் திருவடி (மெய்பொருள்) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

புத்தகங்கள்:

மரணமிலா பெருவாழ்வு பற்றி இரண்டு புத்தகங்கள் இந்த தளத்தில் இருக்கிறது. மேலும் இங்குள்ள சில கட்டுரைகளை படித்தால் தெளிவு பெறலாம்!

இந்த புத்தகங்கள் எங்கள் குருநாதாரால் எழுதபட்டது. அனைத்து ஞான ரகசியங்களும் இதில் வெளிபடுத்தபட்டிருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்கள் போதும் தவம் பற்றிய அனைத்து விஷயஙகளையும் சொல்லிவிடும். இதை தவிர திருவருட்பா, திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றிற்க்கு அற்புதமான ஞான விளக்கங்கள் எமது குரு நாதரால் எழுத பட்டிருக்கிறது வேண்டியவர்கள சபையை தொடர்பு கொண்டு வாங்கி படிக்கலாம்.

வள்ளல் யார்? – Click Here

சாகாக்கல்வி – Click Here

கட்டுரை

கட்டுரை சில சபை அன்பர்களால் எழுதபடுகிறது. அதில் மேற்கோள்காட்டபடும் சித்தர் பாடல்களின் விளக்கங்கள் எங்கள் குரு நாதரின் விளக்கங்கள்தான்

சித்தர்கள் திருவடி – Click Here

தவம் பற்றிய கேள்விகள் 1 – Click Here

தவம் பற்றிய கேள்விகள் 2 – Click Here

மறுபிறவி – Click Here


Reader Comments (8)

 1. Sriumadevi Srinivasan December 19, 2013 at 6:13 am

  “குருவரு லாலே அதில் தூண்ட” – பாடல் – 2014

  நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தினுள் துலங்கும் ஊசிமுனை அளவு நெருப்பை, குரு தீட்சையின் போது, தன் கண்மணி ஒளியால் தூண்ட உணர்வு மெய்யுணர்வு கடுகடுப்பு கண்களில் தோன்றும்.

  அந்த உணர்வை தூண்டி தூண்டி ஒளியை பெருக்க வேண்டும்.

  தீட்சை என்பது இதுவே!

  Just a gratitude to ayya, from his book “manthira mani maalai”

 2. Sriumadevi Srinivasan December 19, 2013 at 6:19 am

  “அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
  துதியது செய்து சுழியுற நோக்கில்
  விதியது தன்னையும் வென்றிட லாகும்
  மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே” பாடல் – 1186

  உலகத்தவர் கதை கதையை விதம் விதமாய் என்னவெல்லாமோ கூறுவார்!? இவை அனைத்தையும் தூரத் தள்ளி விடுங்கள்!

  இறைவனை துதி செய்யுங்கள். குருவை நாடி இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருக்கிறன் என்பதை ஓர்ந்து தெளிந்து தவம் செய்யுங்கள்.

  அப்போது கண்மணி சுழற்சி கூடும். இதுவே தவப்பயன்.

  நோக்கு, பார், உணர்! அங்கேயே நில். ஒளி பெருகி முச்சுடரும் ஒன்றாகி விதியை வென்றிடலாம். முக்கர்மங்களையும் (பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம்) மும்மலங்களையும் இல்லாமல் ஆக்கி இன்புறலாம்.

  சந்திரனில் இருக்கும் தாய் சொன்ன மூன்று ஜோதிகளையும் அடைவதே பெரும் பேறாகும்.

  மண்டலம் மூன்று என்றது மூன்று ஜோதியே! சூர்யா மண்டலம் – வலது கண். சந்திர மண்டலம் – இடது கண். அக்னி மண்டலம் – உள் ஆத்ம ஸ்தானம்.

  மதிமலராள் – மதி என்றால் சந்திரன். மலராள் – கண் மலரில் உள்ளவள்.

  சந்திரனில் உள்ள சக்தி தாய்! இதையே அவ்வையாரும் “மூன்று மண்டலத்தில் முட்டிய தூணை …” என விநாயகர் அகவலில் பாடியுள்ளார். உணர்க!

  from his book “manthira mani maalai”

 3. Sriumadevi Srinivasan December 19, 2013 at 6:22 am

  “தவம் வேண்டா மச்சக சன்மார்க்கத்தோர்க்கு” பாடல் – 1632

  வேறு எந்த சாதனையும் வேண்டாம் சன்மார்க்கத்தவர்க்கு என திருமூலர் கூறுகிறார். ஏன்?

  தவத்தில் சிறந்தது ஞான தவம் திருவடி ஞானம். அதைத்தானே சன்மார்க்க நெறி நிற்போர் செய்கின்றனர்.

  “மச்சக சன்மார்க்கத்தோர்” மச்சம் என்றால் மீன். மீன் போன்றது நமது கண். மீன் கண்களால் பார்த்து தான் குஞ்சு பொரிக்கும். நமது கண்மணி ஒளியால் பார்த்து தான் உள்ளொளி பெருக்கணும். ஞானம் பிறக்கும். மச்சத்தை அகத்தே பார்ப்பதே தவமாகும்.

  அதுவே மச்சக சன்மார்க்கத்தவர் என்பது. உலகில் மிக மிக உயர்ந்த இந்த மச்சக தவம் செய்வோர் வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. சும்மா இருந்தால் போதும். “சும்மா இரு”!

  from his book ” manthira mani maalai”

  also, as a gratitude, i’ve posted certain explanations of him in the website “indusladies.com”… interested persons may be benefitted by it by reaching guru. Thank you. The link is below:

  http://www.indusladies.com/forums/posts-in-regional-languages/230265-thirumanthiram-5.html

 4. Ashwath June 10, 2014 at 7:37 pm

  kanmani means singular. so, the atman is at right eye or the left eye?

  • admin June 16, 2014 at 12:17 pm

   Read again the articles. The place of Atman is in the center of head and the light of that is accessible/available/shinning in our two kanmanis as sun light and moon light in sukshumam.

   Requesting to read all the articles in full.

 5. SARAVANAN July 23, 2014 at 5:48 am

  I am doing lamp meditation with open eyes by concentrating on the lamp. But after some minutes, i am feeling some irritation in my eyes and tears coming out of my eyes. Is it correct? How to avoid the irritation or is it the play of maya on me to stop meditation?

  • admin July 25, 2014 at 5:51 am

   Do the Meditation in a relaxed way without much strain to Eyes. Before meditation first close the eyes and chant Maha Mantiram, pray vallalar holy feets and then do meditation.

   The main benefit of the meditation is to get a guru who by his light (Deekshai) will give unarvu to your eyes and so you no longer need lamp and with that unarvu you can go inside.

 6. maranamillaperuvalvu tamil April 29, 2016 at 4:39 pm

  it is different but exalent

What do you think?