அண்ணாவே என் அருமை அய்யாவே பன்னிரண்டு
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம்பவள
வண்ணாவோ நற்றணிகை மன்னவோ என்றென்றே
என்னவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே

 

அண்ணாவோ – அண்ணாவுக்கு மேல் ஒளிரும் ஒளியே! என்னை
காக்கும் ஐயாவே! பன்னிரண்டு கலையுடைய சூரியகலை
– வலதுகண்ணே! வலது கண் இடது கண் அக்னி என மூன்று கண்
சேர்ந்த நிலையே வேல், சிவந்த ஜோதியே தணிகையாகிய என் கண்மணியே
என இப்படியெல்லாம் எண்ணி உனை அடையாமல் உலக வாழக்கையில்
சிக்கி தவிக்கிறேனே காத்தருள்வாய்!அருணகிரி தன்னப்பா நற்றணிகை தன்னில்
அமர்ந்தருளும் என்னப்பா – பாடல் 2

அருணகிரிக்கு தந்தையே கண்மணியில் அமர்ந்து அருள்புரியும் என் அப்பா என்கிறார்  வள்ளலார். கண்மணி ஒளியே அருணகிரிக்கு வள்ளலாருக்கு தந்தையாகும் உலக உயிர்களனைத்திற்கும் அப்பா ஒளியேயாகும்.
Share

Leave a comment