நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!
சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"
ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர்,
வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த…
காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!
திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. - திருமந்திரம்
அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது திகைப்பு…
திருவிண்ணப்பம்
சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர் தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில் பழக்கி வைப்பது தேவரீர்க் குறிய பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால் வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும் வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால் புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர் பொய்யென்…
அருள் திறத்து அலைச்சல்
நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே உறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடைய மறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ
பூவில் மனம் உள்ளது போல் கண் மலரும் மணக்கும்!…
ஆனா வாழ்வின் அலைசல்
துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத்
துடுக்கினை ஒடுக்குறும் காமக்
கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம்
கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த
உததிபோல் கண்கள் நீர் உகுப்பார்
அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள்
அண்ணலே…
அவல மதிக்கு அலைசல்
மண்ணை மனத்துப் பாவியன் யான் மடவார் உள்ளே வதிந்தளித்த புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன் தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத்…
ஆனந்த பதிகம்
குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப் படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனைப் பரிந்தருளிப் பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றிக் கடிகொள் நகருக்கு வரச் செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே
நமது உடம்பில் நவ…
அடிமைத்திறத்து அலைசல்
தேவர் அறியார் மால் அறியான்
திசைமா முகத்தோன் தான் அறியான்
யாவர் அறிவார் திருஒற்றி
அப்பா அடியேன் யாதறிவேன்
மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே
முதிர்தீம்பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நருந்தேனும்
கைப்ப இனிக்கும் நின்புகழே
நன்கு சுண்டைக்காய்ச்சிய பாலும்,…
குறை நேர்ந்த பத்து
வான்பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன் தேன்பிறந்த மலர்குழலார்க் காளா வாளா திரிகிறேன் புரிகின்றேன் தீமை நாளும் ஊன் பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள் …