அவல மதிக்கு அலைசல்


மண்ணை மனத்துப்  பாவியன் யான்
மடவார் உள்ளே வதிந்தளித்த
புண்ணை மதித்துப் புகுகின்றேன்
போதம் இழந்தேன் புண்ணியனே

எண்ண இனிய நின் புகழை
ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
தண்நல் அமுதே நீஎன்னைத்
தடுத்திங் காளத் தக்கதுவே

மண்போன்று உணர்ச்சியற்ற பாவி – கருணை அன்பு இல்லாத
மனிதன்! பெண் மயக்கத்தில் திரியும் மனிதன்! போதமில்லாதவனாகும்!
போதம் உள்ளவன் – உணர்வு உள்ளவன் உலகில் நல்லது கெட்டது
தெரிந்து இறைவனை உணர்ந்து வாழ்வான்!  போதங் கெட்டான்! முடிவில்
போதமற்றுப் போவான்!! போதம் உள்ளவன் மேலும் மேலும் போதம் பெற்று
– உணர்வு பெற்று  என்றும் வாழ்வான்! போதமற்றால் – மரணம்!

நம் போதத்தை இல்லாதாக்கும் மண்  பெண்  பொன் போன்றவற்றில் மதி
மயங்காதே! மரம் போல் உணர்வற்று போகாதே! பரம்பொருளின் பெரும்
புகழைப் பாடி பணிந்தால் குளிர்ந்த தெள்ளிய அமுதம் தந்து, நம்மை
தடுத்தாட் கொள்வான்!  குளிர்ந்த தாமரை திரு வடிவாகிய நம் கண்மலரில்
உணர்வு பெற்று – குருமூலமாக உபதேசம் பெற்று உணர்வு பெற்று தவம்
செய்து உணர்வை பெருக்கினால்! உணர்வு பெருக பெருக என்றும் போதம்
நிலைத்திருக்கும்! போதம் இருந்தால் மரணமில்லை!

வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே – பாடல் 6
காமத்தை – மாயையை எரிப்பது மெய்ஞ்ஞான விளக்கான நம்
கண்மணி ஒளியே! நம் கண்மணி ஒளியை உணர்வால் பெருகச் செய்தால்
அதை மறைத்து கொண்டிருக்கும் மும்மலங்களுள் ஒன்றான மாயை – காமம்
– உணர்வால் பெருகும் ஒளியால் எரிந்து போகும்! இது அனுபவம்!
காமம் அழிந்தால் தான் மெய்ஞ்ஞானம்!

Share

Leave a comment