சித்தர்கள் – அழுதே சாதித்தார்கள்

“யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”

– திருவாசகம்

யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது! எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!?

என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம், மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே!

என் அன்பும் பொய் – நான் என் தாய், தந்தை என் மனைவி என் பிள்ளைகள் என் சகோதர சகோதரிகள் என் உறவினர் என் வீடு என் என் என்னுடையது என்றே திரிகிறேன். என் சாமி என இறைவனையும் ஆக்கி கொண்டேன். இப்படி இருந்தால் என்னிடம் என்ன இருக்கும் பொய், பித்தலாட்டம் ஏமாற்று தான் மிஞ்சும்! ஆக இதெல்லாம் பொய்யாய் இருக்க காரணம் அடியேன் முற்பிறவிகளில் செய்த வினைகள்தான்?! இதுவே வேதங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இதுவே நம் சனாதன தர்மம் உரைப்பது!

இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாமும் “அழுதால் பெறலாம் அவனருளை” எப்படி?

நாம் செய்த பாவத்தை நினைத்து அழு! இனி பாவம் செய்யாதிரு! நீ யாருக்கும் கெடுதல் செய்யாதே!
உன் பெற்றோர் குறிப்பாக தாய் பத்து மாதம் உன்னை சுமந்து பட்ட துன்பத்தை பின் ஒவ்வொரு
நாளும் வளர்க்கபட்ட துன்பத்தை நினைத்து அழு! உன் உயிருள்ளவரை மாத பிதாவை வணங்கி
போற்றி வாழ வைத்து வாழு! என் போன்று எல்லாவற்றையும் படைத்தானே யாரோ ஒருவன் யாரோ
ஒருத்தி இல்லை ஏதோ ஒரு சக்தி அதை காண வேண்டுமென்று அழு! நன்றாக அழு! குமுறி குமுறி அழு!
பைத்தியாகாரன் என்பர் உலகர்! பொருட்படுத்தாதே! நீ மட்டும் அழுவதை நிறுத்தாதே! இதெல்லாம்
நீ உருப்பெற வழிகாட்டும்! உண்மை உணர வழிகாட்டும்! சோகத்தில் – இழப்பில் – நஸ்டத்தில்
அழுவது மன ஆறுதல் மட்டுமே தரும்!

மாணிக்கவாசகர், வள்ளலார் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா ஞானிகளும், சித்தர்களும்
அழுதால் பெறலாம் இறைவன் அருளை என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றனர்.

அழுதால் உன்னை பெறலாமே” என்றார் மாணிக்கவாச்கர்.

“ நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே”

என்றார் வள்ளலார் .

“கண்ணீரோடு விதைக்கிறவன் கம்பீரத்தோடு அறுப்பான்”
என்றார் இயேசு பெருமான்!

ஒரு சித்தர் அவர் பெயர் அழுகண்ணி சித்தர் என்றனர்! அவர் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாராம் அதனால் எல்லாரும் அழுகண்ணி சித்தர் என்றனர்.

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்றார் திருஞானசம்பந்தர்!

இப்படி இன்னும் பல ஞானியர் இறைவனை அடைவதற்க்காக அழத்தான் சொன்னார்கள்!

இறைவன் திருவடிகளே நமது கண்கள் என குரு மூலம் அறிந்து உணர்ந்து இருந்தாலே கண்ணீர் பெருகி வழியும்! இப்படியே அழுது அழுது உங்கள் பாவங்கள் கரையும் வரை இறை ஒளி காணும் வரை அழுது கொண்டேயிருங்கள்!

எந்த தாயாவது பிள்ளை அழுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பாளா? ஒடோடி வர மாட்டாளா? ஆம், வருவாள் தாய்! அமுதம் தருவாள்! ஏதுமறியா மூன்று வய்து குழந்தை அழுததை கண்டு ஒடோடி வந்து பால் கொடுத்தாளே பார்வதி!!

அந்த ஞான்குழந்தை திருஞானசம்பந்தனை போல, திருவருட்பிர்காச வள்ளலாருக்கு 9 வயதில் பசியால் அயர்ந்து தூங்கிய போது தட்டி எழுப்பி அன்னம் கொடுத்து அருள் புரிந்தாலே தாய்!! அந்தத் தாய் – வாலைத்தாய் – அழும் குழந்தை எல்லாருக்கும் அமுதம் தருவாள்! சத்தியம்!

அழுது, ஒளிபெருகி, அமுது பருகி, ஒலி கேட்டு, ஒளி கண்டு பேரின்பம் பெறலாம்! நம்மை படைத்தவனை பார்க்கலாம்! அவணடி சேரலாம்! ஞானம் பெற, இறையருள் பெற எப்படி அழ வேண்டும் என்பதை தகுந்த குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
———————————————————————————————————————————
ஏன் அழ வேண்டும் எதற்க்கு அழ வேண்டும் என்றால் முதலில் நமக்கு சித்தர்கள் இறைவன் திருவடி பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிய வேண்டும்.

Share

Leave a comment