உள்புகு முன்!

“திருவருட்பா ” எனும் அதி உன்னதமான , ஞான களஞ்சியமான
இந்நூலை இயற்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க
சுவாமிகள் ஆவார்கள்.

வள்ளலாரின் சீடர் இறுக்கம் இரத்தின முதலியார் அவர்களின் வற்புறுத்தலின்
காரணமாக வள்ளல் பெருமான் திருவருட்பா நூலை வெளியிட இசைந்தார்.
வள்ளல்பெருமானின் சீடர் தொழுவூ வேலாயுத முதலியார் பெருமானின்
பாடல்களை ஆறு பகுதிகளாக பிரித்து ஆறு திருமுறைகளாக திருஅருட்பா என வெளியிட்டார்.

முதல் நான்கு திருமுறைகள் வள்ளல் பெருமான் காலத்திலேயே 1867 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பெருமானும் கண்ணுற்றார்.

ஐந்தாம் திருமுறை வள்ளல் பெருமான் ஜோதியாகி ஆறுவருடம் கழித்து  1880 இல் வெளியிடப்பட்டது.

வள்ளல் பெருமான் அருளிய ஏனைய பாடல்கள் அனைத்தும் ஆறாம் திருமுறையாக தொகுக்கப்பட்டு சோடாவாதனம் சுப்பராய செட்டியார் அவர்களால் 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

திருஅருட்பா ஆறுதிருமுறைகளையும் ஒரே நூலாக பொன்னேரி சுந்தரம் அவர்கள் 1892 ஆம் ஆண்டு வெளியிட்டார்கள்.

வள்ளல் பெருமான் இதயத்தில் தங்கிய அன்பர்கள் பலரும் சிறியதும் பெரியதுமாக திருவருட்பா பாடல்களை வெளியிட்டனர். 19-ம் நூற்றாண்டிலும் 20- நூற்றாண்டிலும் திருவருட்பா நூல்கள் ஏராளமாக வெளிவந்தது.

தமிழக மக்களை வெகுவாக கவர்ந்த பாடல்கள் நிரம்ப பெற்றது திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்பாவே!

அருட்பா பாடல்களை பாடியே பேர் பெற்றவர்கள் ஏராளம்! தேனினும் இனிய
தீந்தமிழ் பாக்களாலான திருவருட்பா சிறியோர் முதல் பெரியோர் வரை ,
சம்சாரிகள் முதல் சந்நியாசிவரை எல்லோரையும் கவர்ந்தது. பாடி மகிழ்ந்தனர் பலர்! ஆடி மகிழ்ந்தனர் பலர்!

திருவருட்பா எல்லோராலும் போற்றப்பட காரணம், மிக மிக எளிமையாக மிக மிக இனிமையாக ஒவ்வொரு பாடலும் அமைந்தது மட்டுமல்ல ! கருத்தாழம் மிக்க சொல்லோவியமாகவும் திகழ்ந்தது திருவருட்பா!

ஞானசற்குரு சிவ செல்வராஜ்
திருவருட்பாமாலை

Share

Leave a comment