சக்தியில்லாமல் சிவமேது?! வாலைக்குமரி
அமுதம் தந்து தானே இறைவனை காணமுடியும்!
அம்பாளை பணிக! மாயை அகலும்!
அம்பாள் என்றால் அம்மன் என்றால் ஊர்க்காவல்
தெய்வங்கள், எல்லைக்காவல் தேவதைகள் அல்ல!!? பலிகொடுக்கும்
கோயில் – தேவதைகளல்ல! உயிர்பலி கொடுக்கும் இடத்தில் உயிரை
படைக்கும் இறைவன் நிச்சயம் இருக்கமாட்டார்! உயிர்பலி கொடுப்பது
சுத்தகாட்டுமிராண்டித்தனம்! மனிதச்செயலல்ல!!
எல்லாம்வல்ல ஆதிசக்தி எல்லாம்வல்ல இறைவனின் சிவத்தின் சரிபாதி – சிவசக்தி! அவள்
தாய்! நாம் அழுதால் ஓடோடி வந்து அமுதம் தரும் அன்புத்தாய்!
கருணையே வடிவான தாய்! உலக மக்கள் அனைவருக்கும் தாய்!
அவளே வாலை! பெரிய கோவிலிலே சிவத்தோடு தான் அபயவரத
கரத்தோடுதான் இருப்பாள்! அன்பாக கருணையோடு காணும்
கண்ணே தாயின் கண்கள்!
கோபப்பார்வை பார்ப்பவள் ஊர்க்காவல் தேவதைகள்! தாய் நம்மிடம்
எதையும் கேட்கமாட்டாள்! எல்லாமே நமக்கு தருவாள்! சிறுதெய்வங்கள் அதைக் கொண்டா,
இதைக் கொண்டா என நம்மை பயமுறுத்தி பிடுங்கும்!
பத்துமாதம் சுமந்து பெற்று பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாயை விட,
பன்மடங்கு கருணையோடு அன்போடு நமக்கு அமுதூட்டி தந்தையான
சிவத்திடம் சேர்ப்பவளே சக்தி! அந்த சக்தி ஆதிசக்தி இந்தியாவில் பெரிய பெரிய கோவில்
எல்லாவற்றிலும் சிவத்தோடு தான் இருக்கிறாள்! தாயாக!
காசி – விசாலாட்சி,
மதுரை – மீனாட்சி,
நெல்லை – காந்திமதி,
மயிலை – கற்பகாம்பாள்,
திருக்கடையூர் – அபிராமி
இப்படி ஏராளமான ஊரிலே கோயில் கொண்டுள்ளாள்!
அந்த தாய் ஆதிசக்தி – சிவசக்தி – வாலைத்தாய் – சேயாக இருக்கும் ஒப்பற்ற
புண்ணியஸ்தலம், முக்கடல் சங்கமிக்கும் புண்ணியஸ்தலம், தேவரும் மூவரும்
சித்தரும் ஞானியரும் போற்றும் இணையற்ற ஞானஸ்தலம் கன்னியாகுமரி பகவதியம்மா!
வயது குழந்தையாக, கன்னியாக, கடற்கரையிலே கோயில் கொண்ட
புண்ணியஸ்தலம் கன்னியாகுமரி! சித்தர்களில் பெரும் சித்தரான காகபுசுண்டர் போன்றோராலும்
இத்தலத்து வாலைக்குமரி போற்றப்படுகிறாள்.
இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம்
இருவருக்கும் நடுவான திவளே மூலம்
தொடக்காக நின்றவளு மிவளே மூலம்
சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம்
அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம்
ஐவருக்குங் குருமூல மாதி மூலம்
கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம்
கன்னியிவள் சிறுவாலை கன்னிதானே