நெஞ்சைத் தேற்றல்

நெஞ்சைத் தேற்றல்

சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
   திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
   ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
   வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
நன்று வேண்டிய யாவையும் வாங்கி
   நல்கு வேன்எனை நம்புதி மிகவே

திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதி மொழி இது !
மனோ வலிமை இல்லாதவர்களே , உலகிலுள்ள வஞ்சகரை அடுத்து ஒன்றும் பெறாமல்  திண்டாடாதீர்கள்! பயப்பட வேண்டாம் ! குருவாக என்னை கருதி என்னுடன் சேர்ந்து , திருவாகிய இறைவன் – சோதி ஒற்றியிருக்கும் கண்மணியில் உள் துலங்கும்  வள்ளலார் – இறைவன் திருவடியை வணங்கி சரணடைவோமாக !நான் உங்களுக்கு வேண்டிய யாவும் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனிடம் வாங்கி தருகிறேன் . என்னை நம்புங்கள் ! என உலக மக்களை அன்போடு அழைக்கிறார் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top