நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலையதனை
நனை யென்றன்
கண்ணே நீ யமர்ந்தவெழில் கண்குளிர காணேனோ கண்டுவாரி
உண்ணேனோ வானந்தக் கண்ணீர்கொண் டாடியுனக் குகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ  வாயாரப் பாவி யேனே
என் குறையலாம் தணிந்த – தணிவிக்கும் என் கண்மணி ஒளி
மலையை நாடுவேனோ! நாடி என் கண்ணில் இறைவா நீ
அமர்ந்த எழிலை – அழகை கண்குளிர காண வேண்டும்.கண்டு
அந்த ஆனந்த அனுபவத்தில் திழைக்க வேண்டும். கண்ணீர் அருவியென கொட்டும். உன் திருப்புகழை பாடி ஆட வேண்டும். உனக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார்.

என் கண்மணியை நின்று பாரேனோ
சாரேனோ நின்னடியர் சமுகமதை – பாடல் 3

கண்மணியை – அதிலுள்ள ஒளியை ஊன்றி நின்று பார்க்க வேண்டும்.
இறையடியார்கள் கூடி சத்சங்கம் நடத்த வேண்டும்.

உலகத்தொடர்பை யெல்லாம் தள்ளேனோ – பாடல் 4
இறைவன் மீது தீராக் காதல் கொண்டவர்கள்  உலகில் உள்ள தொடர்பு
எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்கள்! காரணம் பேரின்ப பெருவாழ்வில்
திழைக்கும் போது மாயை உலகை விட்டு விலகி வாழவே விருப்பம் அவர்
உள்ளம். சதா சர்வ காலமும் இறையின்பத்தில் துய்ப்பர்.

எனது இருகண் ஆய செவ்வேளை  – பாடல் 6
எனது இரு கண்ணில் துலங்கும் ஒளியை தியானிக்க தியானிக்க கண்
சிவப்பாகும். அதுதான் முருகன் செவ்வேள் எனப்பட்டார். சதா சர்வ
காலமும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் ஞானியார் கண்கள் சிவந்திருக்கும்.

கோவே என்குகனே எம் குருவே – பாடல்  10
எமக்கு தலைவன் எவ்வுயிர்க்கும் தலைவன் என் குகனே – என் கண்மணி குகையில்  இருப்பவன் அதனால் குகன்.  எம் குருவே – கண்மணி ஒளியே நம் ஆத்ம ஜோதி முன்னுதித்தவன் முருகன் அவனே நமக்கு வழிகாட்டி குரு. நம் உள் ஒளியே நம் உண்மை குரு.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

Share

Leave a comment