திருமந்திரம் – உபநயனம்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.


நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு நடத்துவர். அதற்கு உபநயனம் என்பெயர். இதன் பொருள் யார் புரிந்திருக்கிறார்களோ? 

உப என்றால் இரண்டு நயனம் என்றால் கண். இரு கண்ணை பற்றிய உபதேசம் என பொருள். உபனயத்தின் போது பூணூல் போடப்பட்டு காயத்ரி  மந்திரம் உபதேசம் பெறுவார்.

காயத்ரி மந்திரம் என்ன சொல்லுகிறது தெரியுமா? மேலான சுடர் கடவுளின் ஒளியை தியானிப்போம் என்பதுதானே! உபநயனம் + காயத்ரி என்பது இரு கண்களில் ஒளி உள்ளது இதை தியானிப்பாயாக எனப்பொருள்? இனிமேலாவது இவ்வண்ணம் உணர்ந்து தியானம் செய்யுங்கள்.

உண்மையில் பிரம்மத்தை சார்ந்து பிராமணர் ஆகுங்கள். இதனை உணராததினால்தான் இன்றைக்கு பிராமணர்கள் வெறும் சடங்குகளிலே நிற்கின்றனர்.

கிரியையில் நின்று விடுகின்றனர். ஞானத்திற்கு வருவதில்லை. 

எப்பொழுது புரிந்து ஞானம் அடைவார்களோ ? இறைவா உன் பக்தர்களை மேனிலை படுத்து. அருள் புரிவாயாக. இரு கண்களிலும் உள்ள ஒளியைப் பார்த்து சாதனை செய்ய செய்ய அங்கே தூங்காமல் தூங்கி இருப்போமேயானால் விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன் காரியப்படுவதை நாம் பார்க்கலாம். சாதனை அனுபவத்தில் இதனை உணரலாம். சிந்தனை செய் மனமே சுகம் பெறலாம்.

நூல்: கண்மணிமாலை – சற்குரு சிவசெல்வராஜ். 
பக்கம்: 70

Share

Leave a comment