சிவ புண்ணியத்தோற்றம்

கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள்
கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
அடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றை
அணியும் தொண்டரை அன்புடன் காண்க
தடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன்
தனக்கு வாளோடு நாள்கொடுத் தவனை
நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
நாதன் தன்னை நாம் நண்ணுதற் பொருட்டே

“துஷ்டனை கண்டால் தூரவிலகு” என்பது பழமொழி. வள்ளலார் கடவுளை கண்ணில் எண்ணி கண்ணீர்
விடாதாவரை கடையர் என்கிறார். நமக்கு உயிர் தந்த பரமாத்மாவை எண்ணி எண்ணி தவம் செய்யாதவனே
மனிதர்களில் இழிந்தவன்! அவனை காண்பது தான் பாவம்! தவம் செய்து கண்ணீர்மல்கி இறைவனை
நாடிடும் நல்லோரை மட்டுமே கண்கள் காண வேண்டும்!

வீணை மீட்டி நாதத்தால் வேத நாயகனை சேவித்த அசுரனுக்கு வரம் கொடுத்த இறைவன், நமக்கு அருளால் போவாரா? அந்த இறைவன் ஒற்றியூரில் – பொருட்டு நம்கண்ணில் நாம் விரைவாக அடையும் ஒளியாக துலங்குகிறார்.

கண்களில் எப்போது நீர் வர சதா காலமும் உள் ஒளியை நினைந்து நெகிழ்ப்பனோடு உறவாடுக! “நீரில்லா நெற்றி பாழ்’ என்பது நீர் வராத நெற்றி – கண் பாழ் என்பதே, நீர் உள்ள நல்ல தீ உடைய நெற்றியே இறைவன் இருப்பிடம்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ்

Share

Leave a comment