நற்றுணை விளக்கம்

எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
அஞ்ச வேண்டிய தென்னை என் நெஞ்சே
அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
விளங்க வேண்டியும் மிடற்றின் கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன் தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம் பெறும் துணையே

ஐம்புலன்கள் வழி மனம் செல்லும் – வினைவழி மனம் செல்லும். இப்படி வாழ்ந்து துன்பமடைவது தான் மிச்சம். நமக்கு அஞ்சேல் அஞ்சேல் என அபயம் தருவது நான்கு வேதங்களும் சொல்வதும் எல்லா தேவர்களும் போற்றும், எல்லாம் வல்ல இறைவனின் திருவடியேயாகும்.  நமசிவய  என்பது பஞ்சபூதங்களை குறிப்பதாகும். பஞ்ச பூதங்களும் சேர்ந்த இடமே நம் கண்மணி!

நமச்சிவாயம் காண் என்கிறார் வள்ளலார். கண்ணை காண வேண்டும். அது தானே தவம்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ்

Share

Leave a comment