தந்தைக்கு முன் மகன் பிறந்தான்– பீர்முகம்மது

தக்கலை பீர் முகம்மது அவர்களும் தந்தைக்கு முன் மகன் பிறந்தான் என்று பாடுகிறார்.   மேலும் அவர்களின் பாடல் திருமந்திர பாடலுடன் எவ்வாறு ஒத்து போகிறது என்று சொல்லும் பாடல். அப்பட்டமான ஞான பாடலும் கூட!

அந்த பாடலை ஞான சற்குரு அவர்களின் “ஞான கடல் பீர் முகம்மது” என்ற புத்தகத்தில் இருந்து ஞானப் புகழ்ச்சி என்ற பகுதியில் உள்ள பாடல் – 10

கணங்காத தந்தைக்கு முன் பிறந்துந்திக் கமலத்தில் – பாடல்  10

பீரப்பா பாடலில் இது ஒரு அற்புதமான பாடல்! ஞான ரகசியம் வெளிப்படும் படலுங் கூட! தந்தைக்கு முன் பிறந்தான் – தந்தைக்கு முன்னாலயே பிறந்தவனல்?! தந்தை பிறப்பதற்கு முன் எப்படி மகன் பிறக்கமுடியும்?

தந்தையின் முன்னில் – முன்பக்கத்தில்
மகன் பிறந்தான் என்பதேயாகும்!?

கந்த புராணத்தில், சிவனின் நெற்றி கண்ணிலிருந்து வந்த தீப் பொறியே முருகன் என்கிறதல்லவா? சிவனின் முன்பு முருகன் தோன்றினான். எப்படி? நெற்றிகண் மூலமாக! உந்தி கமலம் – உந்தி – முன் தள்ளி கமலம் – தாமரை,இது பரி பாஷை நமது கண்களே தாமரைக்கு ஒப்பிடுவார்கள். கண் உந்தி கொண்டுதானே இருக்கிறது – கண்ணைத்தான் உந்திக்கமலம் என்றனர். சிவனின் உந்திக் கமலத்தின் நெருப்பிலிருந்து பிறந்தான் முன் பக்கத்தில்!முருகன்! பீரப்பா கந்த புராணத்தை சொல்லவில்லை!

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.

திருமந்திரம் – .869

சாத்திரத்தில் சிறந்த திருமந்திரத்தில் சொல்லப்பட்ட ஞானத்தையே பீரப்பாவும் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் கண்ணை விழித்திருந்து தியானம் செய்யும்போது நமது உந்திகமலமாகிய கண்களில் இருந்து, நம் கண்களின் வழி, உள்ளே இருக்கும் சிவமாகிய ஒளி பிரவாகமாக வெளிப்படும்! உள் ஒளி கண்வழி வெளிப்படும் போது ஆறுவட்டமான இரு கண்களின் காட்சி நமக்கு கிடைக்கும்.! அதாவது நம் கண்ணையே நாம் நமக்கு முன்னால் காணலாம்!?

ஆறு வட்டம்தான் கதையில் ஆறுமுகமானது, சிறுவர்களுக்கு கதை – புராணம். பெரியவர்களுக்கு ஞானம் – அனுபவம்.

இஸ்லாமியருக்கும் இந்துவுக்கும் கிறிஸ்த்துவனுக்கும் ஒரே அனுபவம்தான்! ஞானம் ஒன்று தான்!

இறைவன் ஒருவன் தானே! சாதனை ஞான சாதனை அதாவது ஞான தவம் செய்யும் யாவருக்கும் கிட்டும் முதல் அனுபவம் இதுவே!

இங்கே எங்கேயிருக்குது மதம்!? உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அனுபவம் தான்! ஒரே இறைவன் தான்!

——————————————————————————————————————————————-

தந்தைக்கு முன் மகன் பிறந்தான் – திருமூலர்

வள்ளலார் சொன்ன தவம் செய்தால் இந்த அனுபவம் நிச்சயம் கிட்டும். அதுதான் ஞான தவம்.எல்லா ஞானிகளுக்கும் கிட்டிய அனுபவம். கண்ணை மூடி செய்தால் இந்த அனுபவம் வராது. சிந்தித்து தெளிக.

தவம் எப்படி செய்ய வேண்டும்?

Share

Leave a comment