தவம் பற்றிய கேள்விகள் 

தவம் செயவது எப்படி என்ற பதிவை படித்து கொண்டு எங்களுக்கு வந்த கேள்விக்கான பதிலாக இந்த பதிவை வைக்கிறோம்..

கண்ணை மூடினால் எப்படி மாயை விளையாடும் என்கிறிர்கள். கண்ணை திறந்தால் உண்மை எப்படி விளங்கும் என்கிறிர்கள்?.

எப்பொழுது கண்ணை மூடுகிறீர்களோ அப்பொழுது இருந்தே கற்பனை தொடங்கி விடும். இதை எப்படி இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் கண்ணை மூடி கொண்டு நம் வீட்டில் இறந்து போன மூதாதையர்களை கூட நம் மனக்காட்சியில் கொண்டு வர முடியும் அதே போல் வள்ளலார் உருவத்தையும் கொண்டு வர முடியும் இதனால் இறந்து போனவர்களும் இறவா நிலை பெற்ற ஞானிகளும் ஒன்றாகி விடுவார்களா?  ஆனால் இதையே விழித்திருந்து தவம் செய்யும் போது ஒருகாலும் இறந்து போனவர்கள் வர இயலாது! இப்படி தவம் செய்யும் போது சாகா வரம் பெற்ற ஞானிகள் மட்டுமே காட்சியில் வர முடியும்.  இதுதான் உண்மை!

இதேதான் வள்ளல் பெருமான் சொன்ன திரைகளுக்கும் பொருந்தும் கண்ணை மூடி கொண்டு இந்த நிறத்தில் எனக்கு திரை தெரிகிறது என்று நீங்களே கூட கற்பனை செய்து கொண்டு வந்து விட முடியும். ஆனால் விழித்திருந்து செய்யும் போது ஒருகாலும் உங்கள் முன்னால் கற்பனையாக அது தோன்றாது. அப்படி தோன்றினால் அது கற்பனை அல்ல உண்மை காட்சி. அதாவது ஞான தவத்தில் வரும் அனுபவங்கள்.

விழித்திரு! எக்கணமும்!

இப்படி விழித்திருந்து தவம் செய்வது என்பது இங்கு கட்டுரை அளவிலே கொடுக்க பட்டிருக்கிறது. தக்க குருவை நாடி உங்கள் மெய்பொருளில் உணர்வை பெற்று கொண்டால் மட்டுமே இந்த தவத்தின் பலன் தெரியும் என்பதையும் இந்த இடத்தில் சொல்ல கடமை பட்டுள்ளோம்.

கண்ணை திறந்து செய்தால் கவனசிதறல் ஏற்படுகிறது (அ) Concentration செய்ய முடிய வில்லை அதனால்தான் கண்ணை மூடி செய்ய செய்கிறோம் என்று சொல்வது பற்றி?

இதற்க்கு முதல் காரணம் சித்தர்களும், ஞானிகளும் சொன்ன மெய்பொருள் பற்றி தெறியாமல் இருப்பதே காரணம். ஆம், திருவடி பற்றி தெறிந்திருந்தால்தானே கண் திறக்க வேண்டும் என்று தெறிந்திருக்கும்.

இரண்டாவது மெய்பொருள் பற்றி தெறிந்தும் சிலர் தக்க குருவை நாடி மெய்பொருளில் உணர்வை பெறாமல் இருப்பதுதான் காரணம்!

மனம் இல்லாமல் அழிப்பதுதான் தவத்தின் வேலை என்றாலும் எப்படிதான் மனம் அலை பாய்ந்தாலும் உங்கள் மெய்பொருளின் உணர்விலே நில்லுங்கள். அந்த உண்ர்விலே நிற்க நிற்க நம் கர்மாக்கள் தீயில் போட்டு கொளுத்தபடும். மனமும் அடங்கும்! இதுதான் மனம் அடங்க சிறந்த வழி! இதைத்தான் ஞானிகள் செய்தார்கள். மூட்டை மூட்டையாக சேர்த்து வைத்திருக்கும் கர்மாவை பொசுக்க பொசுக்கவே மனம் சிறிது சிறிதாக அடங்கும். மனம் அடங்க அடங்கவே கர்மாவும் சீக்கிரம் இல்லாமல் ஆக்கப்படும். அதுதான் இந்த தவம்.

இதை விட்டு விட்டு எனக்கு கவனம் சிதறுகிறது என்று நீங்கள் கவலை பட்டு வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்தால் உங்கள் வினைதான் மீண்டும் கூடி போகும்! ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் மெய்பொருளில் உள்ள உண்ர்வுடன் புணர்ந்து சும்மா இருங்கள். எல்லா ஞானிகளும் இப்படித்தான் சும்மா இருந்தார்கள்!

இதைத்தான் வள்ளல் பெருமான் சொன்னார்

“ஒருமையுடன் உனது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்”

நாம் ஒருமையுடன் மலரடியை நினைக்க வேண்டும்.. இப்படி நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து சும்மா இருந்தால் போதும். எல்லாம் செயல் கூடும்!

சும்மா இருப்போம் சுகமாய் வாழ்வோம்!

கேள்வி: சித்தர்கள் எல்லாம் கண்ணை மூடித்தானே செய்தார்கள்? பிறகு எப்படி நீங்கள் கண்ணை திறந்து செய்ய சொல்கிறீர்கள்?

பதில்: நீங்கள் எந்த சித்தர் கண்ணை மூடி செய்வதை பார்த்தீர்கள்?  சொல்லுங்கள் பார்ப்போம்!

இப்படி நீங்கள் பார்க்காத சித்தர்களை பற்றி அதுவும் அவர்கள் கண்ணை மூடித்தான் தவம் செய்தார்கள் என்று உறுதியாக சொல்கிறீர்களே அது எப்படி?

இப்படி காலம் காலமாக மக்கள் மனதில் பற்றியிருக்கும் கற்பனைகளை தான் எங்க்ள் குரு நாதர் புத்தகங்கள் வழியாகவும், விளக்கங்கள் வழியாகவும் வள்ளல் பெருமானின் துணையோடு உடைக்க முயல்கிறார். அதாவ்து கண்ணை திறக்க முயற்ச்சி செய்கிறார்.

கேள்வி: சரி, பெரும்பாலான மக்கள் கண்ணை மூடித்தானே செய்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் கண்ணை திறந்து செய்ய சொல்கிறீர்கள்?

பதில்: நீங்கள் சித்த்ர்களும், வள்ளல் பெருமானும் செய்த தவத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவ்ர்களின் எழுத்துக்களை படிக்க வேண்டுமே தவிர பக்கது வீட்டுகாரன் சொல்வதையோ அல்லது அண்ணன் சொல்வதையோ எல்லாம் கேட்டு செய்வதல்ல தவம். மேலும் பெரும்பாலான மக்கள் செய்வதால் ஒரு விஷயம் சரியாகி விடாது. சித்தர்கள் என்ன சொன்னார்களோ அதை அறிந்து, உணர்ந்து செய்வதுதான் சரியாக இருக்கும்.

கேள்வி: எதை ஆதாரமாக கொண்டு நீங்கள் கண்ணை மூடி செய்ய கூடாது என்று சொல்கிறீர்கள்?

பதில்: மிக நல்ல கேள்வி! நிச்சயமாக ஆதாரத்தை காட்டுகிறோம். ஆனால் அதற்க்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறோம்.

இப்பொழுது ஆதாரம் கேட்ட நீங்கள் முதன் முதலில் தவம் செய்யும் போது எதற்க்காக நாம் கண்ணை மூடி தவம் செய்கிறோம்.  கண்ணை மூடி கொண்டுதான் தவம்  செய்ய வேண்டும்  என்று எந்த சித்தராவது எந்த சித்தர் பாடல்களிலாவது சொல்லியிருக்கிறார்களா இதற்க்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்று நீங்கள் எப்பொழுதாவ்து சிந்தித்து இருக்கிறார்களா?

எங்களுக்கு மிக நன்றாக தெரியும்! நீங்கள் சிந்தித்து இருக்க மாட்டீர்கள் சிந்தித்திருந்தால் கண்ணை மூடியிருக்க மாட்டீர்கள்.

அகத்திய மகரிஷியின் பாடலை எங்கள் ஞான சற்குருவின் “ஞனம் பெற விழி” என்ற புத்தகத்தில் இருந்து கொடுக்கிறோம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

“மடையனவன் சலத்திலுள்ளே யிருந்தே னென்பான்

மாடுநிற்கும் யோகமல்ல வித்தையாச்சு

சடைவளர்த்தா லாவதென்ன கண்ணை மூடிச்

சாம்பவியென் றேயுரைப்பார் தவமில்லார்கள்“

அகத்தியர் “ஞானச்சுருக்கத்தில்” உள்ள இந்த பாடலை படித்த பின்பாவது தெளிவு உண்டாகட்டும். இந்த பாடலுக்கான எங்கள் குரு நாதரின் முழு விளக்கம் இங்கே

 அகத்தியர் சொல்லும் மடையர்கள்

Share

Leave a comment