அகத்தியர் சொல்லும் மடையர்கள்
இங்கு கொடுக்கப்படும் அகத்தியர் பாடல் மிக முக்கியமானது. ஆம், சித்தர்களின் ஞான தவத்தை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய பாடல். கண்ணை மூடி கொண்டு சில யோக பயிர்ச்சிகளை செய்து கொண்டு இறைவனை அடைந்து விட முடியும் என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் படிக்க வேண்டிய பாடல். இந்த பாடலுக்கான குரு நாதரின் முழு விளக்கம் “ஞானம் பெற விழி” என்ற புத்தகத்தில் இருந்து கொடுக்கிறோம். படித்து தெளிந்து சித்தர்களும், வள்ளல் பெருமானும் சொல்லும் தவத்தின் படி திரும்ப எல்லாம் வல்ல அருட்பெரும்சோதியை வேண்டுகிறோம்
————————————————————————————
“மடையனவன் சலத்திலுள்ளே யிருந்தே னென்பான்
மாடுநிற்கும் யோகமல்ல வித்தையாச்சு
சடைவளர்த்தா லாவதென்ன கண்ணை மூடிச்
சாம்பவியென் றேயுரைப்பார் தவமில்லார்கள்”
– அகத்தியர் ஞானச்சுருக்கம்
————————————————————————————-
வித்தை காட்டுபவ்ர்கள் தான் நான் தண்ணீரினுள் இருப்பேன். அப்படி செய்வேன் இதை செய்வேன் என பொய்களை அவிழ்த்து விடுவர். மடையன் தான் அவன்! ஏனெனில் ஒரு எருமை மாடு கூட தண்ணீரினுள் இருக்கும்! அவன் யோகியல்ல!
அதுமட்டுமா? தாடி சடை வளர்த்து உத்திராட்சம் அணிந்து காவி உடுத்தி பெரியசாமி என்று தன்னை தம்பட்டமடிக்கும் எவனும் உண்மையான் சாமி அல்ல! மூவாசையை முற்றும் துறந்தவனே, சாமி – யார்? என தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுபவனே, அத்ற்காக ஞான தவ்ம் செய்பவனே சாமியார்! ஆத்மசாதகன்! தவசீலன்!
காஷாயம் தரித்து கண்ணை மூடி எவன் எதை செய்தாலும் அதுவும் ஞானமல்ல! தவமல்ல! கண்ணை மூடினாலே தவ்று!? அவன் கண்ணை மூடிட்டான் என செத்தவனைத்தானே சொல்வோம்? கண்ணை மூடி நீ எதை செய்தாலும் நீயும் செத்துதான் போவாய்!? சந்தேகமேயில்லை!
“கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலை என கொண்டாடும் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக” என் திருவருட்பிரகாசவள்ளலார் தெளிவாக கூறுகிறார்! இங்கே இந்த பாடலில் அகத்தியரும் கூறுகிறார்.“கண்ணை மூடி சாம்பவியென்று உரைப்பார் தவமில்லர்கள்” என்றே!?
இப்போதும், பல சாமியார்களும் தியானம் சொல்லித்தாரேன்! சாம்பவி முத்திரை யோகா என்றெல்லாம் விளம்பரம் செய்து அப்பாவிகளை கூட்டி வைத்து கண்ணை மூடு அதை செய் அப்படி நினை என என்ன்வெல்லாமோ கூறுகிறார்கள்! ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் அவர்களுக்கும் ஞானம் என்றால் என்னவென்றே தெரியாது!
பாவம்! மடையர்கள்!
————————————————————————-
சித்தர்கள் சொல்லும் திருவடி – இங்கே சொடுக்கவும்
தவம் செய்வது எப்படி – இங்கே சொடுக்கவும்
தவம் பற்றிய கேள்விகள் – இங்கே சொடுக்கவும்