அடிமைத்திறத்து அலைசல்
தேவர் அறியார் மால் அறியான்
திசைமா முகத்தோன் தான் அறியான்
யாவர் அறிவார் திருஒற்றி
அப்பா அடியேன் யாதறிவேன்
மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே
முதிர்தீம்பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நருந்தேனும்
கைப்ப இனிக்கும் நின்புகழே
நன்கு சுண்டைக்காய்ச்சிய பாலும், முக்கனியும் நல்ல அமுதமும் தேனும் கூட கசக்கும்! ஆனால் இறைவா உன் புகழ் பாடும் தேவாரங்கள் பாடப் பாட வாய் இனிக்கும்! மனம் இனிக்கும்! தேவரும் மூவரும் அறிய தெய்வத்திருவடியை நம் கண்மணியில்
கலந்து நிற்பவனை அறிபவனே பாக்கியவான்!
உன் தன் அருட்புகழைக் கோடிஅளவில்
ஒரு கூறும் குணித்தார் இன்றி – பாடல் 11
இறைவா உன் அருளை – கருணையை கோடியில் ஒரு பங்கு கூட சரிவர உணர்ந்தவர் அறிந்தவர் இல்லையோ!