சங்க பாணியைச் சது முகத்தனை
செங்க ணாயிரத் தேவர் நாதனை
மங்கலம் பெற வைத்த வள்ளலே
தங்கருள் திருத் தணிகை யையனே
திருமாலும் பிரம்மனும் இந்திரனும் மேன்மை பெற வைத்தது
தணிகை ஐயனின் கருணையே.
தணிகை நாயகன் வால நற்பத வைப்பென் நெஞ்சமே – பாடல் 3
தணிகை நாயகன் – இறைவன் ஒளியின் இருப்பிடம் என் நெஞ்சமே என்
இரு கண்ணே, வால நற்பதம் – இறைவன் திருவடி – பதம் நல்ல பதம்
அது வால நற்பதம்.
கற்றதனாலாய பயனென் கொல் – வாலறிவன்
நற்றாள் தொழ ரெனின் – திருக்குறள்
வாலறிவன் – இறைவன், இங்கே வள்ளலார் வால நற்பதம் என்கிறார்.
திருவள்ளுவரும் திருஅருட்பா பாடிய இராமலிங்கரும் வால் என
ஏன் சொன்னார்கள்? வால் போல் நீண்டு செல்லும் ஒளி நிலை இறை நிலை
அனுபவம். நம் கண்மணி உள் ஒளி வால் போல் பின்னே – உள்ளே நீண்டு
செல்வதால் அதனால் நமக்கு பேரறிவு ஞானம் கிடைப்பதால் இறைவனை
உணர்வதால், வாலறிவன் என்று வள்ளுவரும் வாலநற்பதம் என வள்ளலாரும்
கூறினார்.
ஆறு மாமுகத் தழகை மொண்டு கொண்டூறில்
கண்களால் உண்ண எண்ணினேன் – பாடல் 12
ஆறுமா முகத் தழகை – நம் இரு கண்களையம் நாம் எப்படி காண முடியும்?
கண்ணால் எல்லாவற்றையும் காணலாம்? கண்ணை பார்ப்பது எங்கனம்?
கண்ணாடியில் காண்பதல்ல. தவத்தால் நம் இரு கண்களையும் நம் முன்னே
நாமே காணலாம்! கண்களால் உண்ண எண்ணினேன் என வள்ளல் பெருமான்
கூறுகிறார். கண்களை காண்பதற்கு தான் பரிபாசையாக கூறியது இது!
இன்சோலாலிவண் இருத்தி என்றனன் – பாடல் 18
தணிகை வேலவன் – கண்மணி ஜோதியில் விடாது தவம் செய்து வருபவரை
அங்கேயே இருக்க அந்த ஜோதி அருள் புரியும். வள்ளலாரை தணிகை வேலவன் அவ்வாறு இருக்க பணித்தான்.
வேதமாமுடி விளங்கு நின்றிருப்பதாம்
சாதல் போக்கு நற்றணிகை நேயனே
இறைவா தணிகை மலையான என் இரு கண்மணியுள் ஜோதியானவனே
வேதங்கள் எலாம் முடிவாக சொல்லும் உன்திருப்பாதம் தான் என் உடலுள்
– கண்மணியுள் நின்றொளிரும் ஜோதி! உன் திருப்பதமே , என் கண்மணி ஒளியே சாவை போக்கும். மரணத்தை மாற்றும், மரணமிலா பெருவாழ்வு கிட்டும்.
ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை