செழுஞ்சுடர்மாலை
ஊணே உடையே பொருளே
என் றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன்
வேறோர் துணைநின் அடிஅன்றிக்
காணேன் அமுதே பெருங்கருணைக்
கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.
ஒப்பற்ற தணிகையில் – என் கண்களில் விளங்கும் செழுமையான
சுடரே – ஜோதியே பெருங்கருணை கடலே, கனியே, கரும்பே தேனே
என் வினைகளை போக்கும் மருந்தே அடியேன் வீணாக உணவுக்கும்
உடைக்கும் உலக பொருள்களுக்குமாக வீணாக அலைந்து உழல்கிறான்,
மனம் தடுமாறுகிறேன், தணிகை வாழ்வதே உன்னையன்றி என்னை
ஆட்கொள்வார் யார்?
உன் திருவடியே என்னை காக்கும் தாயும் தந்தையும் நீ – பாடல் 2
என் கண்களில் துலங்கும் ஒளியே இறைவா நீயே என் தாயும் தந்தையும்
என்பதை உணர்ந்து கொண்டேன். உடல் கொடுத்தவள் – உலகத்தாய்.
உயிர் கொடுத்தது – தாயும் தந்தையுமான இறைவன் இறைவனே
எல்லாவுயிர்க்கும் அம்மையப்பன்.
பொருளே யென் கண்ணே நின்னை கருதாத – பாடல் 3
பொருளே – மெய்ப்பொருளே – என் கண்ணே என் கண்ணுள் நின்றலங்கும்
ஜோதியே இறைவா உன்னை கருதாதவன் – அறியாதவன் முக்தியடைய மாட்டான்.
எந்தாயே வினைதேனொழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு
விருந்தே – பாடல் 5
எனது தாயே, நன்கு விளைந்து தேன் ஒழுகும் மலர் கொண்ட மரம் போன்று என் கண்மணி தவத்தால் விளைந்து முற்றி – நெத்துக்காயாகி நெத்துக்கனியாகி -நெற்றிக்கண்ணாகும். தவம் செய்யச் செய்ய கண்ணொளி பெருகப் பெருக மணி – கண்மணி நன்கு விளைந்த கனியாகும். பேராற்றல் பெறும். விண்ணே – என் விழிகளுக்கு நல்விருந்தே தவம் தான் – அதில் கிடைக்கும் காட்சி தான் அனுபவம் தான் விண்ணில் – வெளியில் நம்முன் நாம் காணும்காட்சிதான் நல்விருந்து.
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை