புருவ மத்தி என்பது எது?

ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.

சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “.

சித்தர்கள் ஞானிகள் சொல்லும் புருவமத்தி – காணொளியாக பார்க்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்  (புருவமத்தி – காணொளி)

புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும்  “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர்.

இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது.

புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா என்றால் அது தான் இல்லை?

சிறிது சிந்தித்து பார்த்தல் இது புலப்படும்.

அதற்கு முன் அவ்வை பிராட்டி நமக்கு கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள் “

           “தேவர் குறளும் திருநான் மறை முடிபும்

            மூவர் தமிழும் முனி மொழியும் – கோவை

            திருவாசகமும் திருமூலர் சொல்லும்

            ஒரு வாசகம் என்று உணர்”

திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது ஒரு வாசகம். மெய். உண்மை. சத்தியம். மெய்பொருள்.

ஆக அணைத்து ஞானிகளும் ஒரே இடத்தில் தான் தியானம் செய் என்று கூறியிருப்பார் என்று தெளிவாகிறதல்லவா.

சரி முதலில் புருவ மத்தி எது என்று நாம் சிறிது சிந்திப்போம்?

நாம் பொட்டு வைக்கும் இடம் இரு புருவங்களிடையே உள்ளது. ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே?! புருவ மத்தி என்று ஒருமையில் தானே கூறினர். ஒரு புருவம் அதன் மத்தி என்று ஒன்றும் இல்லை, அதன் கீழ் இருப்பது கண்.

இப்படி சிந்திக்க வேண்டும். யூகிக்க வேண்டும். புருவ மத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணை பற்றி தானே சொல்லியிருப்பர்.

நாம் சிந்தித்ததை சித்தர்கள், ஞானிகள் பாடல்கள் கொண்டு பார்போம். எல்லா சித்தர்களும் , ஞானிகளும் நாம் தியானம் செய்ய வேண்டிய இடம் புருவ மத்தியான கண்ணே என்று நேரடியாகவும், பரிபாசயாகவும் கூறிபிட்டுள்ளனர். அதில் சிலவற்றை இதில் பார்போம். இதை விட அதிக விளக்கம் வேண்டின் எங்கள் குருநாதர் எழுதியுள்ள புத்தகத்தை வாங்கி படிக்கவும்.

“புருவ மத்தி எதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி” . – சித்தர் காகபுசந்தர்.

புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி. அண்டம் போல் அழகான , பூமி போல் அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும். அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி.

கண் நிறைந்த ஜோதியட புருவமத்தி
அலையாதே புருவமத்தி துலையென்றெண்ணி
அப்பனே மூக்கு நுனி அந்தமாச்சே                                                       –              அகத்தியர்

கண்ணில் நிறைந்த ஜோதியே (அ ) ஒளியே புருவமத்தி என்று தெளிவாக அகத்தியர் பெருமான் நமக்கு உரைக்கிறார்.

வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறிவிட்டார்.

“கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்.  “நடுக்கண் தான் புருவபூட்டு”  இதற்கு விளக்கமும் வேண்டுமோ.

மேலும்   வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

“என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்”

தன் கண்ணில் தான் தானும் தவம் செய்தேன் என்று வள்ளலாரே குறிபிடுகிறார்:

இதை திருமூலர் திருமந்திரத்தில் பரிபாசையாகவும், நேரடியாகவும் குறிபிடுகிறார்:

                 “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

                  வாட்டம் இல்லை மனைக்கும்  அழிவில்லை “

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார். எது சரி. அவ்வை பிராட்டி கூறிய முதல் பாடலை நினைவு கொள்ளுங்கள்.

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

                           நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

                           தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே”  

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மற்றுமொரு பாடல் திருமந்திரத்தில் இருந்து. தவம் எப்படி செய்ய வேண்டும் என்று கூறும் பாடல். இப்பாடலை படிக்கும் முன் “உடலில் உயிர் எங்கு உள்ளது “என்று இந்த லிங்கை படித்த பின் பார்க்கவும்”

                        “நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

                        உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

                        பற்றுக்குப் பற்றாய் பரம – னிருந்திடம்

                        சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே”

  நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி இதை நாம் உற்று உற்று பார்க்க வேண்டும். கிணற்றை உற்று பார்த்தான் என்றால் கிணற்றில் உள்ளே பார்த்தான் என்று தானே பொருள். நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உள்ளே இரு கண்களும் உள்ளே போய் சேருமிடம் நம் ஆத்மஸ்தானம். அதை தான் உற்று உற்று பார்க்க ஒளி விட்டு பிரகாசிக்கும் என திருமூலர் சொல்கிறார். அது தான் ஒளி தான் மந்திரம். அந்த நம் ஜீவஸ்தானம் தான் பரமன் இறைவன் இருக்குமிடம். நம் உயிரை பற்றி உடலை பற்றி இருக்கும் இடம். அதுவே சிற்றம்பலம் கோயில் என தெரிந்து கொண்டேன். நம் கண்மணியை பற்றியிருக்கும் ஒளி உள் ஒளி அம்சம். கண்மணி ஒளி வழி உள்ளே புக வேண்டும். குரு மூலம் உபதேசம், தீட்சை பெற்று கண் ஒளியை பற்றி உள் போக வேண்டும். இதுவே ஞானம். கண்ணை மூடி கொண்டு உற்று உற்று என பார்த்தாலும் மாயை தான் விளையாடும். கண்ணை திறந்து கண்மை ஒளியோடு போ.

மேலும் பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள் இரு+ உதயம் . நம் உடலில் வலது  கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதை தான் இந்த  சூரிய  , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் கூறி உள்ளார்.

“வலது கண் சூரியன் இடது கண் சந்திரன்”

கீதையிலும் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “கடவுளின் ஒளியை  தியானிப்போமாக என்பதே.” கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். ஆகா இந்த கண்ணனை – கண் ஒளியை தான் நாம் தியானிக்க வேண்டும்.

இப்படி அனைவரும் கூறுவது ஒன்று தான்.

கண் ஒளியை பற்ற உங்களுள் கடந்து செல்ல குருவிடம் உபதேசம் தீட்சை பெறுங்கள்.

நன்றி..

சித்தர்கள் ஞானிகள் சொல்லும் புருவமத்தி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கொல்லா  நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக

Share

27 Comments

  • Saravanan.R
    Posted May 1, 2013 12:00 pm 0Likes

    Do you know any guru who can teach everything. Please share your mobile phone number to call you back.

    Thanks,
    Saravanan.R

  • Ravichandrank
    Posted May 1, 2013 3:25 pm 0Likes

    goooooood

  • maghie
    Posted May 2, 2013 4:14 am 0Likes

    kannoliyayum gavanippathu yethuvoo athuve moolam

  • சத்தியமூர்த்தி
    Posted May 3, 2013 10:27 am 0Likes

    good information thank you

  • Mathivanan
    Posted May 9, 2013 4:07 pm 0Likes

    Hi Saravanan.R, Please click our contact page. There is contact numbers.

  • சந்திரச்சேகரன்
    Posted June 5, 2013 9:43 am 0Likes

    இதுவரைமூடனாயிருந்தேன் தாங்கல் கன்னொலிய்யை காட்டினீர்கல் மிக்க மகிழ்ச்சி.

  • ravichandran
    Posted July 1, 2013 3:21 am 0Likes

    குருவை தேடி என் பயணம் .. குருவடி சரணம் திருவடி சரணம் [ஓம் சிவ சிவ ஓம்]

  • LAKSHMANAN
    Posted July 17, 2013 3:57 am 0Likes

    Excellent explanation.God Bless you.

  • ரா.சக்திவேல்
    Posted July 19, 2013 4:44 pm 0Likes

    இந்த நிமிடம் தான் நான் அறிந்தேன் புருவ மத்தி எது என்பதை.மிக்க மகிழ்ச்சி.நன்றி

  • கருணாகரன்
    Posted July 27, 2013 3:17 pm 0Likes

    புருவ மத்தி , தெளிவான விளக்கம் , அருமையாக , அழகாக , புரிதலோடு கூடிய வகையில் அற்புதமாக தந்துள்ளீர்கள் , வாழுங்கள் வளமோடு, வாழும் நாளெல்லாம்.

  • manogaran
    Posted August 2, 2013 6:57 am 0Likes

    அருமையான விளக்கம். விளக்கத்துக்கு மிக்க நன்றி. தங்கள் பனி சிறக்க என் வாழ்த்துக்கள். அன்புடன் மனோ.

  • Venkat J Narasimhan
    Posted August 11, 2013 3:18 am 0Likes

    மிகவும் அருமையான சேவை…

  • gayathri gajendran
    Posted August 16, 2013 4:08 pm 0Likes

    thanks for great information

  • s,srithar
    Posted September 3, 2013 1:00 pm 0Likes

    நல்ல தகவல் நன்றி

  • k. vaidyanathan
    Posted December 3, 2013 10:44 am 0Likes

    Sir, If the eyes are the glorious feet of the Lord , then how blind people can worship the lord without their eyes and pupils ? please clarify.

    • admin
      Posted December 5, 2013 6:06 am 0Likes

      Dear Vaidyanathan

      This is the question lot of people asks. But the answer is in the Q&A Section. Please read it. Also it is written in detail in our online book “Saagaa Kalvi”. Infact our Guru has initiated 2 blind person. THey will get Unarvu in their soul spot. But compared to person with eyes person who is blind need to spend much more time in Penance to clear their karma.

      I suggest you to please read our online book “Saagaa Kalvi”, 1st chapter which has answer for this and our Q @ A section.

      Best Regards
      Thanga Jothi Gnana Sabai

  • Sundaramoorthy
    Posted July 6, 2014 7:44 am 0Likes

    olivi maraivu entri velipaduthi vitteer…

  • G. Rajkumar
    Posted July 31, 2014 2:49 pm 0Likes

    Anbulla Iyaa,

    How can I get thiruvadi theetchai. please inform me.

    Romba Nandri.

  • vijayakumar
    Posted September 10, 2014 3:13 pm 0Likes

    mika nantri

  • Kannaian R
    Posted December 16, 2014 3:48 am 0Likes

    Arutperumjothy Arutperumjothy Jothy Jothy Sivam

  • gurudev
    Posted June 25, 2015 9:45 am 0Likes

    நன்று

  • gurudev
    Posted June 25, 2015 9:48 am 0Likes

    Good

  • Nanthiny
    Posted September 30, 2015 3:03 pm 0Likes

    Anta paramporul aasi irupatanal indru puruvamathi enbatin miga sariyana vilakatai pedren…anta eesanuku nandri….

  • alagesan.R
    Posted August 22, 2016 2:07 am 0Likes

    Really it is hideded truth or fact .Thanks

  • seshya urpfr
    Posted February 21, 2018 6:01 am 0Likes

    Light / holy light / radirent heat energy / a micro point in physical body {pindam} / macro in universal body { and am}. Correct ?

  • Karthick Sivagurunathan
    Posted May 13, 2019 9:37 pm 0Likes

    As a sudha sanmargi I take as the final authority, Vallalar and his arutpa. In arutpa Vallalar says, 1. கையறவு இல்லாத நடுக்கண் புருவப் பூட்டு. What does he mean by ‘Nadukun’ ?

    2. எவ்வித தந்திரத்திலாவது நெற்றிக்கண்ணை திறந்துகொள்க , he says in another place. what is meant by ‘Netrikkan’?

    3. திருநிலை தனி வெளி சிவ வெளி எனும் ஓர்
    அருள் வெளி பதிவளர் அருட்பெரும் ஜோதி . says Vallalar in the Agaval.
    He begins the Agaval with A and continues with the poem in the alphabetical order. After twelve vowels when he comes to the thirteenth letter which is “ak”, he means …

    4. நெற்றிக்கு நடுவே புருவத்து இடைவெளியில்
    உற்று உற்று பார்க்க ஒளிவிடும் மந்திரம்
    பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்த இடம்
    சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே

    – திருமந்திரம்

    5. நடுநாடி நடுநாடி நடராஜர் நடமாடும் பதியே , meaning the central column at the top of which is your third eye – not to the left or to the right.

    6. திரையோதசத்தே திகழ்கின்ற என்றே , meaning ‘Oh sun resplendent in the thirteenth position.’ Here once again Vallalar denotes ‘ak’ only.

    So the third eye of Shiva is clearly denoted by Vallalar and Thirumoolar. We need not get confused.

    There are 2 stages to locate this place of the third eye exactly.

    Stage 1 : Focus your eyes on the third eye region in the center of your forehead for some months. Then you will have a sensation there always. Once this sensation is established you can go to the next stage.

    Stage 2 : Below the crown and above the roof of your mouth exactly at the center of your head is ‘Sithsabha’ or ‘Chitrambalam’ or ‘Chidhambaram’. Now imagine piercing a lance through the center of your forehead horizontally. At the same time force your breath above the roof of your mouth vertically. These two lines will intersect at a point. That point is ‘Chitrambalam’, that is where your life spirit is in the form of a light. You have to consciously enter into this ‘Chithsabha’. This is the yoga of Suddhsanmarha.

    பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே

    A Siddha clarifies this point in a verse :

    உச்சிக்கு கீழே உள்நாவுக்கு மேலே
    வச்ச விளக்கு எரியுதடீ …..
    One can go on giving innumerable proofs and evidences for the truth of the place of the third eye from Arutpa, Thirumandhiram and the Siddha literature.

    The above words are picked up from Salem Kuppusamy Ayya, who is ardent devotee of Vallalar and follower of Sudha Sanmargam
    This completely contradicts with your ideology of what is puruva mathi.
    Please clarify

    • admin
      Posted May 15, 2019 6:19 am 0Likes

      Hi karthick.sivagurunathan

      Please read the article again and also http://tamil.vallalyaar.com/q-a (Question and Answers) to get more clarity. Reading in depth and understand what is meant, only then clarity will be go..

      Some more points from your question:

      In “AK” there are 3 eyes correct…..

      Only using the soul light available in our two eyes (sun and eye) can the third eye can be opened. Hence Eyes are called Tiruvadi..See the name “Third Eye” “Moonravahtu Kan”.
      Also see the following line from Tiruvarutpa :
      “காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
      காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
      பூணுகின்ற திருவடிகள் திருவருட்பா 3125

      கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
      கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே – திருவருட்பா 2096

      என் இரு கண்மணியானபதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – Agaval.

      என் கண் மணியுள் இருக்கும் தலைவ
      நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன் – திருவருட்பா 6th Tirumurai (மெய்யருள்வியப்பு)

      என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி – திருவருட்பா 550

      Please read other articles as well for more clarification.

      anbudan
      Thanga Jothi Gnana Sabai

Leave a comment