நெஞ்சறை கூவல்
கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்
கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில்
பாத நீடிய பங்கயப் பதத்தார்
ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே
மூன்று கண்களை உடையவர் ! கண்மணியில் கரையாக – விஷமாக
மும்மலத்தால் மறைக்கப்பட்டவர் ! வற்றாத நீர் சுரக்கும் ! இடப்பக்கம்
பெண் அம்சம் ! சொல்லமுடியாத அளவு பாடல்களால் பாடப் பெற்றவர் !
தாமரை திருவடிகள் நீண்டு உயர்ந்தவர் ! மனிதர்களாகிய – ஆத்மாக்களாகிய
– பெண்களாகிய நாம் தில்லை அம்பலவனுடன் ஆட விரும்புவதால்
நமக்காக நம் கண்மணி உள் நின்று ஆடுபவர் !
மண்ணிலே போகின்ற மாலையை போன்று நம் உடலும் போய்விடாது
இருக்க , பூமாலையால் அல்ல ! நல்ல தமிழ் பாமாலை சூட்டி மகிழ்வோம் !
வாருங்கள் என்னுடனே என வள்ளலார் – சற்குரு அழைக்கிறார் !
திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
கருவின் நின்றஎம் போல்வர்
உருவின் நின்றவர்அருஎன நின்றோர் – பாடல் 3
மகாவிஷ்ணு சக்கராயுதம் பெற வேண்டி இறைவனை நோக்கி தவம் செய்தார் ! 1000 மலர்களால் அர்ச்சனை செய்ய எண்ணினார் . 999 மலர்தான் இருந்தது . ஒருமலர் குறையவே தன் கண்மலரையே எடுத்து எல்லாம் வல்ல அருட் பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சார்த்தினார் . அர்ச்சித்தார் . இறைவனுக்கு திருமால் கண்ணை சார்த்தியதால் அதுமுதல் நாம் இறைவனுக்கு சார்த்தும் எல்லாம் திருக்கண் சார்த்துதல்
திருக்கம் சார்த்துதல் என்றாயிற்று !
இறைவன் அருள் பெற வேண்டுமாயின் , கருவில் நின்று எம்போல்வர் – கருவில் நின்று வள்ளலார் போன்ற ஞானிகள் ஆசி – அருள் அவசியம் வேண்டும் ! குருவருள் வேண்டும்!
நாம் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் போது முதன்முதலில் உருவாவது ! அதுவே கரு ! தாயும் தந்தையும் சேர்ந்து முதலில்உருவாவது , அதுவே கரு ! அது தான் கண் ! கர்ப்பத்தில் முதலில் உருவாவது கண்ணே ! அந்தக் கண்மணி ஒளியே கரு ! “அந்தக்கரு விந்து நாதம் அது அன்னை உதிரமோடு கூடிய சூதம் அந்த கரு ஐந்து பூதம்” என சித்தர் ஒருவர் பாடியுள்ளார் . அந்தக் கருவிலே நிலைத்து நின்றால் ஞானம் பெறலாம் ! அப்படி ஞானம் பெற்ற வள்ளலாரை நாம் குருவென கொண்டால் அவர் வழிகாட்டி நம் துயர் மாற்றி நம்மையும்ஞானம் பெறச் செய்து இறைவனிடம் சேர்ப்பிப்பார் !
இறைவன் சோதியாக உருவாகி நம் உள் துலங்குகிறார் ! உருவமில்லா வெளிச்சம் என திகழ்பருவம் அவரே ! எங்குமான ஒளியானவர் ! உருவமும் அருவமும் ஆனவர் இறைவனே !