ஆறெழுத் துண்மை

  பெருமை நிதியே மால்விடை கொள் பெம்மான் வருந்திப் பெறும் பேறே அருமை மணியே தணிகை மலை அமுதே யுன்ற னாறெழுத்தை ஒருமை மனத்தி னுச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால் இருமை வளனு மெய்துமிடர் என்ப தொன்று மேய்தாதே பெருமை தரக்கூடிய நிதியே…

Read more

வேட்கை விண்ணப்பம்

  மன்னே யென்ற னுயிர்க்குயிரே மணியே  தணிகை மலைமருந்தே அன்னே என்னை யாட்கொண்ட அரசே தணிகை யையாவே பொன்னே ஞானப் பொங்கொளியே புனித வருளே புராணமே என்னே யேளியேன் துயருழத்தல் எண்ணி யிரங்கா திருப்பதுவே மன்னவனே என் உயிர்க்கு உயிரான மணியே தணிகை…

Read more

பொறுக்காப் பத்து

  மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம் விரைமலர்த் துணைத்தமை விரும்பாப் பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல் பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய் ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் தெள்ளிய வமுதே தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே தணிகை வாழ்சரவண பவனே சத்தியமாக, நெறியோடுவாழும்…

Read more

மருண்மாலை விண்ணப்பம்

  சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே யன்பர் துதி துணையே புல்லும் புகழ்சேர் நற்றணிகைப் பொறுப்பின் மருந்தே பூரணமே அல்லும் பகலு நின்னாமம் அந்தோ நினைந்துன்  னாளாகேன் கல்லும் பொருவா வன்மத்தாற் கலங்கா நின்றேன் கடையேன் சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே…

Read more

கருணைமாலை

  சங்க பாணியைச் சது முகத்தனை செங்க ணாயிரத் தேவர் நாதனை மங்கலம் பெற வைத்த வள்ளலே தங்கருள் திருத் தணிகை  யையனே திருமாலும் பிரம்மனும் இந்திரனும் மேன்மை பெற வைத்தது தணிகை ஐயனின் கருணையே. தணிகை நாயகன் வால நற்பத வைப்பென் நெஞ்சமே -…

Read more

இரந்த விண்ணப்பம்

  நாளை யேகியே வணங்குவது மெனத்தினம் நாளையே கழிக்கின்றோம் ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன் தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல் தணந்திடல் தனையிந்த வேளை யென்றறி வுற்றிலம் என் செய்வோம் விளம்பரும் விடையோமே ஒவ்வொரு நாளும் நாளைக்கு போய் இறைவனை…

Read more

ஆற்றா முறை

  விண்ணறாது வாழ் வேந்த னாதியர் வேண்டி யேங்கவும் விட்டென்  னெஞ்சகக் கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் எண்ணறாத்  துயர்க் கடலுண் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது சேகுவேன் தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ் சாமியே…

Read more

சீவ சாட்சி மாலை

பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும் பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவி லேனும் காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ விண்ணேறு மரிமுதலோர்க் கரிய ஞான விளக்கே யென்கண்ணே மெய் வீட்டின் வித்தே தண்ணேறு பொழிற் றணிகை மணியே…

Read more

குறையிரந்த பத்து

  சீர் பூத்த வருட்கடலே கரும்பே தேனே செம்பாகே எனது குலத் தெய்வமேநல் கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானக் பேர்பூத்த நின்புகழைக் கருதி யேழை பிழைக்கவருள் செய்வாயா பிழையை நோக்கிக் பார்பூத்த பாவத்திலுற விடிலென் செய்கேன்…

Read more

செழுஞ்சுடர்மாலை

செழுஞ்சுடர்மாலை ஊணே உடையே பொருளே என் றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்…

Read more