புண்ணிய நீற்று மான்மியம்
திவசங்கள் தொறும்கொண்டிரு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமில்விக பரமும் புகழ்பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே
நாம் நம் கண்மணி உள் ஒளியை – சிவ சண்முகனை நினைந்து தியானம் செய்தால் திருவிலிருந்து கண்மணி மத்தியிலிருந்து நீர் அருவியென கொட்டும்! அந்த திருநீர் எப்போதும் இருந்தால் நாள் தோறும் வரும் தீமைகள் ஆகாமியம் வராது. முற்பிறவி துன்பங்கள் பிராரப்தகர்மம், சஞ்சிதகர்மமும் அற்றுப்போகும். இப்படி கண்மணி ஒளியைப் பெருக்கி கர்மவினை அற்றுப்போகுமானால் உலகமெலாம் நம் புகழ் பரவும். நம் கண்மணி ஒளி நம் உடலைச்சுற்றி பரவி நமக்கு கவசம் போல் நிற்கும். கண் – திரை – கண்ணில் ஏறி நிற்கும் திரைகள் தவிரும். நலம் பெறலாம். மேலும் கண்மணியில் இருந்து நீர் அருவியென பாயும். திருநீர் அணிந்தவர்க்கு இவ்வுலகில் முக்தியின்பமும் எல்லா பெரும்பேரும் கிட்டும். எல்லா துன்பமும் அகலும்.
பவணன் புனல் கனல் மண் வெளிபலவாகி
பொருளாம் சிவசண்முக – பாடல் 3
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களும் சேர்ந்த பொருளே – நம் மெய்பொருள் -கண்மணி – அதுவே – சிவமாகிய பரஞ்சோதியின் சண்முக – ஆறுமுக ஜோதி. கண்மணி ஒளியே எல்லாமானது.
குயிலேறிய பொழில் சூழ் திருக்குன்றேறி
நடக்கும் மயிலேறிய மணியே – பாடல் 4
பொருளாம் சிவசண்முக – பாடல் 3
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களும் சேர்ந்த பொருளே – நம் மெய்பொருள் -கண்மணி – அதுவே – சிவமாகிய பரஞ்சோதியின் சண்முக – ஆறுமுக ஜோதி. கண்மணி ஒளியே எல்லாமானது.
குயிலேறிய பொழில் சூழ் திருக்குன்றேறி
நடக்கும் மயிலேறிய மணியே – பாடல் 4
கண்மணி ஒளியை எண்ணி தவம்செய்யும் போது, திருக்குன்று என்பது திரு-மலை திருவாகிய இறைவன் – ஒளி தாங்கியமலை நம் கண்தான்! அதன் ஒளிதான் மயில் போல பலவர்ண ஒளிக்கட்சியும் குயில் போன்ற தசவித நாதமும் கேட்க ஒளியாகிய ஆறுமுகம் காட்சிதரும்!