வரங்கொ ளடியார் மனமலரில்
மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
திறங்கொள் தணிகை மலைவாழும்
செல்வப் பெருக்கே சிற்பரமே
தரங்கொ ளுலக மயல கலத்
தாழ்ந்துள் ளுறுக அழுதழுது
கரங்கொள் சிரத்தோ டியானுன்னைக்
கண்க ளராக் கண்டிலனே

புண்ணிய பயனால் தம் மனம் அமையப்பெற்ற கண்மலரில்
மகிழ்வுடனமர்ந்த மாமணியே! மனமலர் – நம்கண்மலரின்
முன் உள்ள திரைதான் – நம் வினைத்தொகுதி. அதில்தான்
மனம் உள்ளது. அதைத்தான் வள்ளல்பெருமான் மனமலர்
என்றார். மனம் உள்ள மலர்! உலகமயல் அகல – உலகத்தின்
மீது உள்ள ஆசை அகல, தாழ்மையுடன், பணிவுடன் நம் உள்ளம் உருக,
அழுது அழுது செய்யும் தவம் மூலமாகத்தான் இறைவனை காணலாம்.
நாம் உருப்பெற,அழுதால் அழுதால் பெறலாம் அவன் அருளை! கண்ணார
காணலாம், தயவு செய்து ஒளிமிகுமல்லவா! உஷ்ணம் பெருகுமல்லவா!
சூடு தணிய வேண்டுமே – சூடு ஆரவேண்டும் -கண்ணார வேண்டுமாயின்
தவம் தொடர்ந்து செய்ய வேண்டும். முதலில் உஷ்ணம் ஏறும் பின்
குளிர்ச்சி பெறும். இதுவே தியான அனுபவம். வள்ளலார் இதைத்தான்
கூறுகிறார்.

 

திருஅருட்பாமாலை
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Share

Leave a comment