பெருமை நிதியே மால்விடை கொள்
பெம்மான் வருந்திப் பெறும் பேறே
அருமை மணியே தணிகை மலை
அமுதே யுன்ற னாறெழுத்தை
ஒருமை மனத்தி னுச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
இருமை வளனு மெய்துமிடர்
என்ப தொன்று மேய்தாதே

பெருமை தரக்கூடிய நிதியே கண்மணி ஒளி1 மாலும் சிவனும்
கூட தவம் செய்து பெறும் பெரும்பேறே கண்மணி ஒளியே! எனது
அருமையான கண்மணியே! என் குற்றம் நீங்கப் பெற்ற தணிகை
மலையான கண்மணி அமுதே உன் ஆரெழுத்தை ‘சரவணபவ’
உணர்த்தும் ‘அ’  ஆறு  ‘அ’ இரு கண் ஆறுமுகம் மனதில் எண்ணி
உணர்ந்து தவம் செய்தால் – தவம் செய்யும்போது கண்ணீர் ஊறி
பெருகி வழிந்தோடும் திருவாகிய ஒளியை நினைந்து அதனால்
வரும் நீர் – திருவெண்ணீர் . இப்படி வரும் திருநீறு – திருநீர் வரப்
பெற்றவர் இம்மை மறுமை இரண்டிலும் வளம் பெறுவர் மரணமெனும்
இடர் வராது.

எய்தற்கரிய வருட்சுடரே
எல்லாம் வல்ல இறையோனே – பாடல் 2
கிட்டுவதற்கு மிகவும் அரிதான அருட்சுடரே என் கண்மணிச்சுடரே
நீயே எல்லாம் வல்ல இறைவனின் ஒளித்துகள்

துன்னும் மறையின் முடியிலொளிர்
தூய விளக்கே சுகபெருக்கே  – பாடல் 5
வேதங்கள் எல்லாம் முடிவாக சொல்கின்ற – வேதங்களின் சுருதி வாக்கியம்
உணர்த்துவது நம் மெய்ப்பொருளே, அது தூய விளக்கு கண்மணி ஒளி, அதை நாம் நாடினால் நமக்கு கிடைப்பது சுகம் சுகம் பேரின்பம்.

சேரும் முக்கண்  கனிகனிந்த தேனே ஞான்ச் செழுமணியே – பாடல் 6
நம் தவத்தால் முக்கண்ணையும் ஒன்று சேர்க்க வேண்டும். வலது கண் இடது கண் இரு கண்ணும் உள்ளே ஒன்று சேரும் மூன்றாவது கண். இந்த மூன்று கண்ணும் சேர்ந்தால் சூரியன் சந்திரன் அக்னி என்ற மூன்று ஒளியும் சேர்ந்தால் கனிந்து விடுவோம் நாம். கனிந்தால் சுவைதானே! தேன் என தித்திக்கும். அது ஞானந்தரும் செழுமையான ஒளிமிகுந்த மணியாகும்.

அழியாய் பொருளே யென்னுயிரே – பாடல் 8

கண்மணியிலுள்ள ஒளியே – பரம்பொருளின் – அருட்பெருஞ்ஜோதியின் அம்சமே என்னுயிர். அது  அழியாது.

தோன்றா ஞான சின்மயமே தூய சுகமே சுயஞ்சுடரே – பாடல் 10

வெளியே தோன்றாமல் கண்மணி உள்ளே ஒளியாயிருப்பவனே!  ஞான மருள்பவனே! சின்மயம் என்றால் கண்ணில் இருப்பவன்! அதை அடைந்தால் கிட்டுவது தூய சுகம் -உலகத்திலே கிட்டும் சுகம் துன்பமும் சேர்ந்தது.  ஞானத்திலே கிட்டும் சுகம் பேரின்பம். இன்பம் மட்டுமே அந்த ஜோதி சுயமானது. சுயம் ஜோதி.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

Share

Leave a comment