மறைந்து கிடைத்த திருவருட்பா

ஆன்மநேய ஒருமைப்பாட்டுடையீர்,

அடியேன் கண்மணிமாலை நூல் எழுதி கொண்டிருக்கும் சமயம், திருவருட்பா பற்றி ஆராயும் போது 4067 ஆவது பாடலில் முதல் இரு வரிகள் இல்லை. அடுத்த இருவரிகளும் இருந்தது. கீழே ஒரு குறிப்பு. மூல ஏடுகள் சிதைந்து போனதால் முதல் இருவரிகள் கிட்டாது போயிற்று என்று இருந்தது. வருந்தினேன், வள்ளல் பெருமானிடம் வேண்டினேன். அருள் புரிந்தார். வள்ளலார் என் உள்ளத்தில் முதல் இரு வரியையும் உணர்த்தினார். பேருவகை கொண்டேன்.

திருவருட்பாவில் இருக்கின்ற மீதி இரு வரிகள்

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – –
நாரா யணனு நான்முகனு நயந்து
வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனி அடியேன் செய்யும்
பணியை இயம்புகவே.

– 4067 ஆவது பாடல்

இதோ, அடியேன் உள்ளத்தில் வள்ளல் பெருமான் உரைத்த இரு வரிகள்:

ஒரார் முகமும் காட்டுவித்து ஒங்கும்
படிகள் ஏற்றுவித்த
பாரூர் பதியே சோதியேநின் செல்வப்
பிள்ளை ஆக்கினையே

கேட்டதும் கொடுத்தார் திருவருட் பிரகாச வள்ளலார் அருள் வள்ளலல்லவா? அருள் மழை பொழிகின்றார்.

முழு பாடல்:

ஒரார் முகமும் காட்டுவித்து ஒங்கும்
படிகள் ஏற்றுவித்த
பாரூர் பதியே சோதியேநின் செல்வப்
பிள்ளை ஆக்கினையே
நாரா யணனு நான்முகனு நயந்து
வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனி அடியேன் செய்யும்
பணியை இயம்புகவே.

– 4067 ஆவது பாடல்

கண்மணிமாலை நூலில் சற்குரு சிவ செல்வராஜ் அய்யா.

அடுத்தடுத்த பாடல்கள் சில தினங்களில்……….

Share

Leave a comment