திருவிண்ணப்பம்

சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில்
பழக்கி வைப்பது தேவரீர்க் குறிய
பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
பொய்யென் என்னில்யான் போம்வழி எதுவோ

 புழைக்கை மாவுரியீர் ஒற்றி உடையீர் – உள் பக்கம் துளையுள்ள கரிய யானை தோலை போர்த்திய சிவன்! கண்மணி கருவிழி யானை தோல் எனப்பட்டது. உள்துளை – கண்மணியிலுள்ள உள்துளை அதனுள் இருப்பது தான் சிவம். ஒளி. என்னோடு வழக்கு என்பது வினையால் செயல்படும் நாம் இறைவனோடு சேர முடியாமல் தவிக்கும் நிலை! ஆயினும் எவ்வுயிர்க்கும் தந்தை இறைவன்,அதனால் எனக்கும் தந்தை நீயல்லவா இறைவா என்னை கை விட்டிடாதே!

Share

Leave a comment