பணித்திறஞசாலாப் பாடிழிவு
அடுத்திலேன் நின்னடியார் அவைக்குட் சற்றும்
அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
தரிசனம் செய் தேமதுரத் தமிழ்சொல் மாலை
தொடுத்திலேன் அழுதுநின தருளை வேண்டித்
தொழுதுதொழு தானந்தத் தூநீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லனெனும் பெயரை அந்தோ
ஏன் பிறந்தேன் புவிச்சுமையா இருக்கி றேனே
நல்லவர்களோடு இறையடியார்களோடு சேர்ந்து வாழ வேண்டும்.
எல்லோரிடமும் அன்புடையவனாக இருக்க வேண்டும். இறைவன்
அடியாராக இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள வஞ்சம் உட்பட
எல்லா துர்குணங்களை விட்டொழிக்கணும். தணிகையான – எல்லா
துர்குணங்களையும் தணித்து நம்மை தூயவனாக்கும் கண்மணி
ஒளியை கண்டு தவம் செய்ய வேண்டும். தேமதூரத்தமிழ்ச்
சொல்மாலை இறைவனுக்கு சூட்டி மகிழ வேண்டும். எல்லோரும்
பாட முடியுமா? முடியும்!
இறைவனை சரணடைபவன் தன்னாலே பாட ஆரம்பித்து விடுவான்.
ஆன்மீகவாதியின் ஒரு தகுதி பாடுவது. பாட்டுவிப்பவன் உள்ஒளி . பாடுவோம்
நாம்! கண்மணி ஒளியை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ நெகிழ
கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும். இவ்வண்ணம் தவம் செய்து இறைவனை
நம் கண்மணி ஒளியை பெருக்கி ஞானம் பெறலாம்! இதில்லாதவன் பிறந்தது பூமிக்கு பாரமே!
சிவதருமம் செய்வோர் நல்லோர் – பாடல் 6
எவ்வளவோ பொருட்கள் தான தருமம் செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
‘சிவதருமம்’ என்ன? இந்த உலகத்தையே வேண்டுமானாலும் தானம் செய்து
விடமுடியும். சிவதருமம் செய்ய முடியுமா? அப்படி செய்பவரே நல்லோர்!
சிவதருமம் என்றால் ஒளியை தருமம் செய்வது! எப்படி செய்வது யார் செய்வது?
எல்லாராலும் முடியாது! கண்மணி ஒளியை தருமம் செய்பவரே சிவ தருமம் செய்பவர்.
அடியேன் சிவ தருமம் செய்து வருகிறேன்! சற்குரு திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளாசியால் சிவதருமம் செய்து வருகிறேன்.தன் உள் ஒளியை பெருக்கி கொண்டவன் ஞானி ஒருவரின் பரிபூரண அருள் பெற்றவனே சிவதருமம் செய்ய முடியும்!
சிவதருமம் செய்பவன் ‘குரு’ அவனை நல்லோர் என வள்ளலார் கூறுகிறார்.
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை
சிவ தருமம் செய்யும் குரு லட்சத்தில் ஒருவரே! லட்சியம் உள்ள குருவே
இறைவனை சுட்டி கட்ட முடியும்! ஞானம் பெற்றவனாவான்!
அகமலர முக மலர்வோ டருள்செய்யுன்றன்
செம்பாத மலர் – பாடல் 9
நம் அகம் – உள்ளம் மலர்ச்சியடைய வேண்டும். முகமலர் – நம் முகத்தில்
உள்ள மலர் கண். செம்பாதமலர் – தவம் செய்து செம்மையேறிய திருவடியாகிய கண்மலர்
நமக்கு அருள் செய்யும் இறைவன் இருப்பிடம்.
ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை