கந்தர் சரணப்பத்து

அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்

 
கந்த பெருமானை பாடினார் வள்ளலார். கந்தன் – ஒளியானவன்.
சிவத்தின் 6 கண்களிலிருந்து 6 நெருப்பாக உருவானாவனல்லவா ?
சிவமாகிய பேரொளியிலிருந்து தோன்றிய ஒளியே கந்தன். அந்த
கந்தனே – ஒளியே அருள் தரவல்லது . அமுதம் தரவல்லது.அந்த ஒளி பொருந்திய பொருள் தான் – கண். அதுதான் மெய்ப்பொருள்.
நமை  ஆண்டு கொண்டிருப்பது  அவ்வொளியே, அந்த ஒளி பொன் போல்
அந்திமாலை சூரியன் போல் தக தக என ஜொலிக்கும் ஜோதி. அது
இருப்பது கண்மணியில், மாயை மயக்கம் உள்ளவர் அறிய முடியாதது.
மயிலின்தோகை பலவர்ணமுடையது போல பல வர்ண ஒளி காட்சி
தருவது. கருணையே வடிவான கடவுள் ஒளியான கந்தன் அவன்
திருவடிகளே நம் இரு கண்கள் அதுவே நான் சரண் புகும் இடம். அந்த
திருவடிகளிலே அடைக்கலம் என்கிறார்.

 

பண்ணோர் மறையின் பயனே
விண்ணே ரொளியே
உணர்வே
கண்ணே மணியே சரணம்  – பாடல் 2

ஓசை நயம் மிகுந்த இசைப்பதற்கு சிறந்த வேதங்களின் பயனான
– அதிலிருந்து அறிந்து கொள்ளும் சுருதியான ஒளியே! விண்ணில்
நிறைந்த ஒளியே! என் உணர்வாயிருக்கும் ஒளியே! என் கண்ணே
கண்மணியே நீயே சரணம்.

முடிய முதலே
வடிவே லரசே
அடியார்க் கெளியாய் – பாடல் 3
முடிவே இல்லாத முதற் பொருளே  ஜோதி, வடிவேல் அரசே
சூலாயுதம் தாங்கிய சக்தி கொடுத்தாள் ஞானவேல், சூரிய
சந்திர அக்னியாக முகூறாக இருக்கும் நம் முச்சுடரை
சக்தியாகிய இடக்கலை துணை கொண்டு சிவமாகிய வலக்கலையை
சேர்ந்தால் சக்தியும் சிவனும் சேர்ந்து அக்னியை தோற்றுவிக்கும்.
முருகன் – சண்முகன் பிறப்பான், அந்த சண்முகன் பிறப்பை – நாம்
அக்னி கலை அனுபவம் பெறுவதே – முக்கூறாய் உள்ள ஜோதியை
இணைத்தால் அது வேலாகும் – ஞான வேலாகும் . நாம் ஒளியை
பெற்றால் ஞானம் கிட்டும்.

பூவே மணமே
கோவே குகனே
குருவே திருவே
சிவ சண்முகன்  – பாடல் 4
பூவே  – கண்மலரல்லவா? மணமே – பூ மணப்பது போல்
ஒளிக்கும் மனம் உண்டு.கண்மலரில் உள்ள ஒளி மணமிகுந்தது.
கோவே என்றால் தலைவனே, குகனே – குகையில் இருப்பவன்.
கண்மணி மத்தியில் உள்ள சிறு துவாரத்தின் உள் குகை போன்ற
இடத்தில இருப்பவன் குகன். நாம் தியானம் செய்ய முதலில்
வெளியே ஒரு குரு மூலமாக தீட்சை பெறுவது அவசியம்.  வெளியே
உள்ள காரண குருவை பெற்று சாதனை செய்து வந்தால்  உள்ளே
குகனே காரிய குருவாக வந்து அமைவான்.அவன் – குகன் யார்? அவன்தான் திருவாகிய அந்த இறைவன். நம்முள்
இருக்கும் இடம் உயிர் ஆத்ம ஜோதி அவன் சிவம் – ஒளி ஆறுமுகங்கொண்ட
அருட்பெருஞ்சோதி.

கடவுள் மணியே சரணம். – பாடல் 5

கட – உன்  – மணியே – உன் கண்மணிக்குள் கடந்து போவாயாக! அங்கே இருக்கும்

ஒளியே – கந்தன் அவன் பாதமே சரணம் அடைக்கலம்.

நடுவாகிய நல்லொளியே சரணம். – பாடல் 6

நம் தலையின் மத்தியில் – நடுவில் இருக்கும் ஒளியே – அக்னிகலையே  சரணம்.

“உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேல்வைத்த விளக்கு நித்தம்
எரியுதடி வாலைப்பெண்ணே”
என்ற சித்தர் பாடல் பாருங்கள்.

ஒளியுள்     ஒளியே சரணம்  – பாடல் 8

ஒளிக்குள் ஒளியாக துளங்குபவன் சிவம் – சுப்பிரமணியம் ஆனது. சுப்பிரமணியத்துக்குள் இருப்பது சிவந்தானே . ஒளியான காந்தனுக்குள் ஒளியாக விளங்கும் சிவமே ஒளியே அடைக்கலம்.

அறுமா முகனே சரணம் – பாடல் 9

அறு – மாமுகனே – என்வினைகளை அறுத்து காப்பாய்! மாமுகன் பெரிய ஜோதியானவனே அடைக்கலம்.

வேதப்பொருளே
நாதாத்தொலியே  – பாடல் 10

 
நான்கு வேதங்களும் உரைப்பது ‘பொருள்’ ஆன உன்னைப் பற்றியே ‘பொருள்”  என்றால் மெய்ப்பொருள்.  நம் மெய்யாகியே உடம்பில் உள்ள பொருள் கண். கண்ணில் உள்ள  ஒளியாக இறைவன் இருப்பதையே எல்லா வேதமும் கூறுகிறது. ஒளி இருக்குமானால் ஒலி இருக்கும்! ஒலியும் ஒளியும்  சக்தியும் சிவமும் போல் இணை புரியாதது. சேர்ந்தே இருக்கும்.நாத விந்து கலாதி நமோ நம என்பது ஒலியாக ஒளியாக உள்ள இறைவனே
வணக்கம் என்பதுதான்.ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை
Share

Leave a comment