எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கண் வழி “கட உள்”ளே கடவுளை காண்!

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா! பரம் பொருள்! இறைவன்! எல்லா வல்லவரும் கடவுளே! அவரின்றி ஓர் அணுவும் அசையாது! அவர் பேரொளியாக விளங்குகிறார்! அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்!

அண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள், ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறார்! நம் உயிராக! ஜீவாத்மாவாக சிறுஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே! இதையும் இதுவரை இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்!

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்! உயிராக சிற்றொளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா!

உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது! அது இறையம்சமல்லவா?

நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர், அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது! ஒன்று, இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது!

நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக, பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும், மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும், அந்த ஊசிமுனை வாசலை மெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது!!

கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும்! இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார்! நம் ஆத்மஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே, அதற்காக நாம் ஞான தவம் செய்தாலே, நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும்

ஜீவன் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியில் செல்வதுதானே புத்திசாலித்தனம்!

நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனையடைய. அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம்! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே!

நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றால், கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரொளியான அந்த இறைவனை அடையலாம் அல்லவா?!

நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!

பரிதவிக்கும் மக்கள் மரணமிலாது காக்க! பரிபாஷையாக கூறியது சிந்திக்க வைக்க! தெளிவடைய செய்ய! மக்களை தன்னிலை உணரச் செய்யவே! சந்தேகமற உபதேசித்து ஞானஉபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள்!

உலகெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியது கடவுள் ஒருவரே! அவர் ஜோதி வடிவானவர்! எங்கும் நிறைந்தவர்! எல்லாம் வல்லவர்! மனித உடலில் தலையில் ஜீவனாகி, ஒளிர்ந்து, இரு கண்மணியிலும் துலங்குபவர்!

கண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள்ஒளியை அடைய வேண்டும்! தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும்! நம் கண்மணி ஒளி பெருகி, நம்உள் கடந்து தான், நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும்! கடவுளை நினைந்து கண்மணி ஒளியை நினைந்து குரு உபதேசத்தால் உணர்ந்து குரு தீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும்!

நெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும்! அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும்! இதுவே கங்காஸ்நானம்! அதாவது விடாது சதாசர்வகாலமும்

திருவடி தீட்சை பெற குருவை பணி
மாமிச உணவை சாப்பிடுவோர் மிருகமே!

நாம் தவம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்! கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகி கண்மணிமுன் உள்ள திரை விலகும்! உருகி கரையும்! பின்னர் தானே ஜோதி தரிசனம்!

ஒவ்வொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே, வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரை நீக்கி தங்கஜோதியை காண வைத்துள்ளார்! ஞானம் பெற நாடுவீர் குருவை! யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி, உணர்த்தி தீட்சை தருகிறாரோ அவரே ஞான சற்குரு! இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்!

பற்பல பிறப்பெடுத்து துன்பப்படுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனைதான்! பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த, மும்மல, 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை!

நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி, நம் உள் ஒளியை பெருக்கி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை!

எல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தைத் தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார்!

மரணத்தை வென்றிட, பிறவாதிருக்க வழிகாட்டி ஒரு ஆன்மா கடைத்தேற உதவுவதைவிட சிறந்த ஒப்பற்றபணி இவ்வுலகில் வேறு உண்டுமா?! இதுவே ஞானதானம்!!

மரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினார் வள்ளலார்! அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி அடியேன் ஞானதானம் செய்து வருகிறேன்! வருக! ஞானம் பெறுக! ஞானதானம் செய்க!

“கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி”

ஞானிகளை வணங்கு! ஒழுக்கமாக வாழு!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • கண்மணிமாலை
  • அருள்மணிமாலை
  • ஸ்ரீபகவதி அந்தாதி
  • அஷ்ட மணிமாலை (நூற்கள்)
  • ஜோதி ஐக்கூ அந்தாதி
  • சனாதன தர்மம்
  • வள்ளல் யார்
  • இயேசு எழுபது
  • ஞானக்கடல் பீர் முகமது
  • திருவருட்பா மாலை (4 பாகம்)
  • சாகாக்கல்வி
  • மந்திர மணிமாலை
  • திருவருட்பா தேன்
  • அகர உகர மாலை (6 நூற்கள்)
  • ஞானமணி மாலை (4 நூற்கள்
  • பரமபதம் எட்டெழுத்து மந்திரம் அ
  • ஆன்மநேய ஒருமைப்பாடு
  • ஞானம்பெற விழி
  • ஜீவகாருண்யம்
  • மூவர் உணர்ந்த முக்கண்

ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ்

தங்க ஜோதி ஞானசபை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

Share

Leave a comment