ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர், வந்தனம்! இந்திய ஞான பூமியில் பிறந்த நீவீர் புண்ணிய சாலிகள் தாம்! எண்ணிலா ஞானிகள் பிறந்த, சித்தர்கள் இருக்கின்ற, திரும்பும் இடமெலாம் திருக் கோயில்கள் நிரம்பிய ஞான பூமியில் பிறந்த நாம் கொஞ்சமாவது ஞானத்தைப் பற்றி அறிய வேண்டாமா? “கல்தோன்றி மன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்!” வாழும் தமிழ் நாட்டில் வாழும் நீவிர் வாழ்வது ஒரு வாழ்வா? சற்று சந்தித்து பார்க்க!

மனிதன் முதலில் மனிதனாக வாழ வேண்டும்!? நல்லொழுக்கும் அவசியம் வேண்டும்! நற்பண்புகள் இருக்க வேண்டும்! சத்தியம் தவறாது வாழ வேண்டும்! எவ்விதத்திலும் அறிவை மயக்கும், உடலை கெடுக்கும் போதை பொருட்களை உபயோகிக்கவே கூடாது! மாமிச உணவை எக்காரணங்கொண்டும் உண்ணக்கூடாது! சுத்த சைவ உணவையே உட்கொள்ள வேண்டும்!

மாதா பிதாவை பெற்ற நீவிர் குருவை பெற்றதுண்டா? குருவழியே தான் கடவுளை காண முடியும்! குருவே பரப்பிரம்மம்! பிறந்ததிலிருந்து நீங்கள் தெரிந்து கொண்ட ஒவ்வொன்றும் யாரோ ஒருவர் சொன்னது தானே! அவரெல்லாம் குருவல்ல! நீ யார்? என அறிவித்து உன்னை நீ அறிய உபதேசிப்பவர், தீட்சை தருபவர் யாரோ அவரே குரு! சற்குரு! ஞானகுரு! அப்படி ஒரு குருவை தேடு!! எல்லாம் வல்ல இறைவன், எங்கும் நிறைந்த இறைவன் மனித தேகத்தில் உயிராக சிர-நடு-உள்-ஜோதியாக துலங்குகிறார்!? இது தேவ இராகசியம்! வேத இரகசியம்! ஞான இரகசியம்! உன் உயிரான இறைவனை நீ காண வேண்டாமா? கண்டாலே ஞானம்! கண் தானே காண வேண்டும்? அந்த கண்மணியிலே தான் சிறு ஒளியாக துலங்கி உள்புக வழியாக விழியை காண்பிப்பார் ஞானகுரு!!

கண்தானம் எல்லோரும் செய்யலாம் அல்லவா? எவருக்கும் எவர் கண்ணையும் கொடுக்கலாம் அல்லவா? எப்படி? எல்லோர் கண்மணியும் ஒரு போல இருப்பதால் தான்!! கடவுள் ஒருவரே ஆத்மா ஒன்றே! கண்மணியும் உலகிலுள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரு போலவே உள்ளது!? “ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்” என்கிறார் திருவள்ளுவர்! மக்கள் அனைவருக்கும் ஒன்று போல ஒத்திருக்கும் கண்ணை அறிந்தவன் உயிர் வாழ்வான்! சாகமாட்டான்! ஞானம் பெறுவான் என்கிறார்!

மனிதனாக பிறந்த அனைவரும் இறைவனின் பிள்ளைகளே! உலகர் அனைவரும் இறைவனான அந்த பரமாத்மாவின் ஒரு சிறு துளி -ஒளியான ஜீவாத்மாவே! எல்லோரும் பெறலாம் ஞானம்! ஆனால் இந்த உண்மை தெரியாமல் பூர்வஜன்ம கர்ம வினைகளின் படி மனிதன் மனம் போன போக்கிலே வாழ்கிறான்! மேலும் மேலும் வினைகளை சேர்த்து கொண்டே போகிறான்! மீண்டும் மீண்டும் பிறந்த இறந்த கொண்டே போகிறான் நாம் இதிலிருந்து விடுபடவே ஞானிகள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்! விழி மூலமாகத்தான் நாம் நம் சிரநடுஉள் விளங்கும் நம் ஆத்ம ஜோதியை அடைய முடியும் என்றும், பின்னரே பரமாத்மாவை அடையலாம் என்றும் எல்லா மகான்களும் கூறியருளியிருக்கின்றனர்.

கண்ணை அறிந்தவன், தன்னை அறிந்தவன் தான் நம் தலைவனான இறைவனை நம் தலையினுள் இருக்கும் இறைவனை அறிவான்! “யாதும் ஊரே யாவரும் கேளீர்”எனக் கூறிய நம் முன்னோர்.என் நடன் பணி செய்து கிடப்பதே எனக் கூறிய நம் ஞானியர் வழியிலேயே வாழையடி வாழையாக வந்தவர் தான் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் எல்ல உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா விரதம் குவலயமொம் ஓங்குக! என்று ஆண்டவரிடம் மன்றாடியவர் உலகோரே வாருங்கள் எல்லோரும் இறைவன் திருவடியை அடையலாம்! நான் வழிகாட்டுகிறேன்! விழி காட்டுகிறேன்! கூடவே இருந்து காப்பாற்றுவேன் என அழைத்தார்!

இறை உண்மை இரகசியங்களை வெளிப்படுத்தி எல்லோரும் ஞானம் பெற வழிகாட்டினார் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்! வள்ளலார் அருளால் அடியேன் ஞான விளக்கங்களை கூறுகிறேன்.

தாயின் கருவிலே உருவாகும் முதல் உறுப்பு கண்! பிறந்ததிலிருந்து சாகும் வரை 100 வயதானாலும் வளராதது கண்! கண்மணியில் ரத்தமில்லை! எலும்பு இல்லை! நரம்பு இல்லை! நம் உடலில் இருந்தாலும் உடம்பிலும் ஒட்டாது, பூமி ஆகாயத்தில் இருப்பது போல், கருவிழியுள் கருமணி சுற்றிக் கொண்டிருக்கிறது? தேவ இரகசியமிது!

குரு உபதேசம் பெற்று மெய்பொருள் – திருவடி – நம் இரு கண்கள் என உணர்ந்து தவம் செய்தால் கிட்டும் “ஞானம்!”

கன்னியாகுமரி தங்க ஜோதி ஞான சபை” இது பற்றி விரிவாக 28 ஞான நூற்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்! எல்லோரும் ஞானம் பெற வேண்டும்! இதுவே குறிக்கோள்! “வாலை” தான் கன்னியாகுமரி! திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளே எமது ஞான சற்குரு!

வருக! பெறுக! உணர்க! வாழ்க!

அருட்பெருஞ்தோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பொருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்றும் உண்மையுள்ள, சிவசெல்வராஜ்

இவை போன்ற ஞான ரகசியங்களை மேறும் விரிவாக தெரிந்து கொள்ள.

படித்து அறிந்து கொள்ள, ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா அருளிய ஞான நூற்கள்.

கண்மணிமாலை
அருள் மணிமாலை
ஸ்ரீபகவதி அந்தாதி
சாகாக்கல்வி
மந்திர மணிமாலை
திருவருட்பா தேன்
அஷ்டமணிமாலை – (8 நூற்கள்)
அகர உகர மாலை – (6 நூற்கள்)
வோதி ஐக்கூ அந்தாதி
சனாதனதர்மம்
வன்னல் யார்?
ஞானக்கடல் பீர்முகமது
திருவருட்பாமாலை பாகம் 4 parts
ஞானமணி மாலை – (4 நூற்கள்)
திருமணிவாசகமாலை
பரமபதம் எட்டெழுத்து மந்திரம் அ
ஞானம் பெற விழி

மூவர் உணர்ந்த முக்கண்
ஆன்மநேய ஒருமைப்பாடு
ஜீவகாருண்யம்
உலககுரு வள்ளலார்
திருவருட்பாமாலை நாலஞ்சாறு
Spiritual Education for Deathlessness
Who is PHILANTHROPIST?]
World Guru Vallalar
Sanathana Dharma
Share

Leave a comment