அருள் திறத்து அலைச்சல்

நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
உறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
மறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ


பூவில் மனம் உள்ளது போல் கண் மலரும் மணக்கும்! பூவில் தேன் உள்ளது போல் கண் மலரினுள் ஒளி பெருகி தேன் சுரக்கும்! அதை நாம் அருந்தலாம்! சடை போல் ஒளிக்கற்றை உடையது. கண்மணி ஒளி! வற்றாத நதி போல ஒளி ஆறு ஓடி வரும்!

கண்மணிமுன் விஷமாக மும்மலம் உள்ளது. அதனால் தான் கண்மணி நிறம் கருநீலம்! “கறை கண்டன்”என்றனர் சித்தர்கள். “கண்டதுண்டமாக” உள்ளது. கண்டமானது கறைபடிந்தது. இரு கூறாக உள்ளது என பொருள் .
இரு கண் எனப்படும்! வேதங்கள் போற்றும் உன் பொன்னார் திருவடியை பாடிப்பாடி என் வாயும் மணக்குமே! ஒற்றியூரானே, கண்மணியே உன் பெருமையை கூற இயலாது.

நீறடுத்த எண்தோள் – பாடல் 3
நீர்  சொரியும் எட்டான – கண்கள்

கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள் கரும்பே
ஒண்மணியே தேனே என் ரொற்றியப்பா – பாடல் 13


இறைவன் இருப்பிடம் – கண்மணியில் உள்ளில் ஒளி! அது கற்ப விருட்சம் போன்று நமக்கு எல்லாம் தரவல்லது! கரும்பை விட தேனை விட இனிமையான அமுதம் தரக்கூடியது! கண்மணியில் உள்ளே ஒற்றியிருக்கும் அப்பன் தான் அவன்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ்

Share

Leave a comment