ஆனந்த பதிகம்
குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற்
கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
படிகொள் நடையில் பரதவிக்கும்
பாவியேனைப் பரிந்தருளிப்
பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த
பொன்னே உன்னை போற்றி ஒற்றிக்
கடிகொள் நகருக்கு வரச் செய்தாய்
கைம்மா றறியேன் கடையேனே
நமது உடம்பில் நவ துவாரங்களில் வெளிப்படுவது அழுக்கே! மலமே! நமது உடலில் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உள்ள அசுத்தங்கள், எல்லாவற்றிற்கு மேலான பெரிய மலம் – மும்மலம் சூழ்ந்த நாம் உலகில் வாழ்ந்து தொலைக்கிறோம்!? இப்படிப்பட்ட மலம் நிரம்பிய உடலை பெற்ற நமக்கு, நிமலன் – மலம் அற்றவனாகிய இறைவன் வெள்ளை விழிக்கு மத்தியிலே கரு விழியின் மத்தியிலே மணியாய் அதனுள் ஒளியாய் துலங்கி அருள்கிறான்! யாவர்க்கும் அருளும் அருள்மயமான, கருணைமயமான கண் – கண்ட – கொண்ட – தெய்வம்! அருட்பெருஞ்சோதி!
ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து
ஒற்றியூர் சென்று உனை பாட காதல்
அறிவித்து ஆண்டாய் – பாடல் 2
இறைவா உன் புகழை ஓதிட அருள் தந்தாய்! உன்னை என்னை உணர செய்தாய்! என் ஒற்றியூரான கண்மணி உள் சென்று தவம் செய்ய வைத்தாய்! உன் மீது தீர காதல் கொள்ள வைத்தாய்!