மனிதநேயம் மட்டுமல்ல! ஆன்மநேய ஒருமைப்பாடு!!
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுவது!
ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை அறக்கட்டளை
கன்னியாகுமரி – 629 702
நூல் : ஆன்மநேய ஒருமைப்பாடு
உரிமை : S.S. சுயம்ஜோதி
முதல் பதிப்பு : 07-02-2012
முதல் 25 பதிப்புகள் : 1,40,000 பிரதிகள்
26-வது பதிப்பு 5000 பிரதிகள் 11-02-2025
ஞானதானம் : நகுலன், அருள்மொழி, கோவை
ISBN No. : 978-81-941068-0-7
மனிதனாக வாழ முயற்சி செய்க!
புகை பிடிப்பவன் போக்கிரி
மது அருந்துபவன் மடையன்
புலால் உண்பவன் மனித மிருகம்
பொய் கொலை களவு கள் காமம் முதலிய பஞ்சமா பாதகங்கள் புரிவோர் பாழ் நரகையே அடைவர்!
சாதி, மதம், இனம், மொழி, நாடு என எவ்வித வேற்றுமையும் பாராதீர்!
உலக மக்களை பிரித்துப் பார்ப்பவன் வீணாய் போவான்!
தங்கஜோதி ஞானசபையில் நன்கொடை ஏதும் வசூலிக்கப்படுவதில்லை
நாம் யார்? மனிதர்கள்! உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம்! எண்ணற்ற ஜீவராசிகள் வாழ்கின்றன! ஒருவருக்கொருவர் உதவி, எல்லோரும் நலமாக, மகிழ்ச்சியாக வாழ்வதுதானே வாழ்க்கை! அப்படியா வாழ்கிறோம்? மிருகங்களைப் போல, ஒருவர் மற்றவரை ஏமாற்றி, வஞ்சித்து, மிரட்டி, பொய் சொல்லியல்லவா பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள்! இது ஒரு வாழ்க்கையா?
அதுமட்டுமா சாதிச்சண்டை, மதச்சண்டை, இனச்சண்டை, மொழிச்சண்டை, நம் நாட்டுக் குள்ளேயே மாநிலத்துக்கு மாநிலம் சண்டை, தண்ணீர் தரமாட்டேன், மின்சாரம் தரமாட்டேன் எனச் சண்டை, பதவி அதிகாரச் சண்டை இப்படி எத்தனையோ இழிச்செயல்களில் பெரும்பாலனவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே ஏன்? கேவலமான
அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், சினிமா, டெலிவிஷன், பத்திரிக்கை இவர்களால் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் கேட்டிற்கு அளவேயில்லை! நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்க தீய, ஆபாச வன்முறை செய்திகளே, செயல்பாடுகளே ஏராளம்! ஏராளம்!
நாடும் மக்களும் இவ்வளவு கேவலமாக போனதற்கு சீரழிவுக்கு எல்லோரும்தான் காரணம்! சமுதாயத்தின் நலனில் எல்லோருக்கும் பங்கு உண்டு! அதேபோல், சமுதாயத்தில் ஒரு அங்கமான ஒவ்வொரு மனிதனும் பொறுப்புடன் செயல்படுவது கடமையாகும்! எனக்கென்ன? யார் எப்படிப் போனால் என்ன? என்ற அலட்சிய மனோபாவம் இருக்கக் கூடாது.
நான் நன்றாக இருந்தால்தானே என் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர், தெரு, ஊர் எல்லாம் நன்றாக இருக்கும்! என் ஒருவனால் சமுதாயத்தை நல்லாக்கவும் முடியும், நாசமாக்கவும் இயலும்! சூழ்நிலையால் கெட்டுப்போனேன் எனச் சொல்பவன் முட்டாள்! உணர்ச்சிக்கு அடிமையாகாமல் பொறுமையாக நிதானமாக செயல்படுபவனே நல்ல மனிதன்!
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது. அதனினும் அரிது ஞானமும், கல்வியும் நயத்தல் அரிது. அதனினும் அரிது தானமும் தவமும் தான் செய்தல் அரிது. தானமும் தவமும் செய்தாக்கால் வானவர் நாடு வழி திறந்திடுமே!! ஔவையார் அருளிய ஞான அமுத வாக்கு இது!
மனிதனாக எக்குறையும் இன்றி பிறந்த நாம் ஞானக் கல்வியை கற்பதே மிகவும் முக்கியமானது! பள்ளிக்கூட படிப்பு ஏட்டுச்சுரைக்காய்! பணம் சம்பாதிக்க மட்டுமே உதவும்! நாம் பிறந்தது பணம் சம்பாதித்து ஆடம்பரமாக சுகபோகமாக கண்டதை தின்று வாழ அல்ல! மனம்போன போக்கில் போவதற்கு அல்ல!
நான் யார்? ஏன் பிறந்தேன்? எதற்கு வாழ்கிறேன்? எது நல்ல வாழ்க்கை? இது போன்ற பல கேள்விகளுக்கு விடைதான் “ஞானக்கல்வி!” நாம் பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கல்லவா? அதை அறிந்துகொள்ள புரிந்துகொள்ள வைப்பவர்தான் “குரு!” கண் கண்ட தெய்வமாக மாதா பிதாவுக்கு பிறகு நமக்கு அறிவூட்டி ஞானம் பெற வைப்பவர் தான் குரு!
“குருவில்லா வித்தை பாழ்! “குருபார்க்க கோடிவினை தீரும்! “குருபிரம்மா! குருவிஷ்ணு! குரு மகேஸ்வரா! குருசாட்சாத் பரப்பிரம்மம்! குரு ஒருவரை, மனிதனாக பிறந்தவன் கண்டிப்பாக பெற வேண்டும்! குருவை பெற்றவனே! மனிதனாவான் “குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்! இது ஒளவையார் கூற்று! குருவின் காணிக்கை கொடுக்க மறந்ததேனோ, குருவை வணங்க கூசி நின்றேனோ” என குருவின் மகத்துவத்தை கூறுகிறார்! வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் படித்தால் புரியும்!
உலகமே தீவிரவாதத்தால் பயந்து நடுங்க காரணம், நல்ல குரு மூலம் நல்ல ஞானத்தை யாரும் பெறாததாலேயே! ஞானத்தை சொல்பவரே நல்ல குரு! ஞானகுரு! உலகுக்கு இறைவன் ஒருவரே என்பதையும், அவர் ஒளியானவர் என்பதையும் முதலில் அறிய வேண்டும்! உணர வேண்டும்! எம்மதமும் சம்மதமே! உலகர் யாவரும் ஒரு தாய் பிள்ளைகளே! பின் ஏன் சண்டை சச்சரவு! அறியாமையில் மூழ்கி கிடப்பவரே சண்டை போடுவர்! அறிவு பெற குருவை நாடு!
முதலில் நமக்குத் தேவை நல்லொழுக்கம்! எவ்வித கெட்ட பழக்க வழக்கமும் இல்லாமல் தூய்மையானவனாக விளங்க வேண்டும்! கெட்டவர்களோடு சேரவும் கூடாது! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்! ஆலயம் தொழுவது சாலவும் நன்று! வைகறை துயிலெழு! இது போன்ற நல்ல நெறிகளை படித்து கடைபிடிக்க வேண்டும்!
ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் உயிரினினும் ஓம்பப்படும்
என திருவள்ளுவர் கூறும் ஒழுக்கத்தின் மேன்மையை உணர்ந்து வாழு!
அடுத்து நல்ல உணவு! மனிதர் சாப்பிடுவதற்காகவே இறைவன் பழங்கள் காய்கறி தாவர வகைகளை படைத்தான்! பசு கொடுக்கும் பால் பெற்ற தாய்க்கு நிகராகும்! தானியவகைகள் அரிசி முதலியவை போதுமே! நன்றாக சாப்பிட்டு மகிழ்வோடு வாழலாமே! சுத்த சைவ உணவே மனித குல உணவாகும்! மரக்கறி உணவே மனிதகுல உணவு! சைவ சாப்பிடுபவனுக்கே இறைவன் அருள் கிட்டும்!! உணவு
மாமிச உணவு சாப்பிடுவது மிருகங்கள்தானே! நீ மனிதனல்லவா? மாமிசம் சாப்பிடலாமோ? இன்னொரு உயிரைக் கொன்று தின்ன உனக்கு என்ன உரிமை இருக்கிறது? எல்லா உயிரையும் தன்னுயிர் போல நேசி என்றல்லவா இயேசுவும், நபியும், வள்ளலாரும் எல்லா மதமும் போதிக்கின்றனர்! மனதாலும் எவ்வுயிருக்கும் தீங்கு எண்ணாத மனிதனே கடவுள் அருள்பெறுவான்! மற்றொரு ஜீவனை கொல்லும் நீ, நாளை ஒருநாள் இன்னொரு ஜீவனால்
[1:29 pm, 23/12/2025] Saritha: கொல்லப்படுவாய்! இதுவே சத்தியம்! வினை விதைத்தவன் வினையறுப்பான்! தினை விதைத்தவன் தினை அறுப்பான்! எந்த ஒரு மனிதனின் எந்த ஒரு செயலுக்கும் நிச்சயம் எதிர்வினை வந்தே தீரும்! யாரும் தடுக்க முடியாது. பாவத்தின் சம்பளம் மரணம்!
“கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும்”
என திருவள்ளுவர் கூறியிருக்கிறார். தமிழ் படித்தோரே திருந்துங்கள்! மனிதனாக மாறுங்கள்.
தகுதி நல்ல ஒழுக்கத்துடன், நல்ல சுத்த சைவ உணவு உட்கொண்டு வாழும் மனிதன்தான் இறைவன் அருள்பெறும் உடையவனாகிறான்! “புலை கொலை தவிர்த்தோர் உள்ளே வருக” 6T 60T வடலூரில் சத்திய ஞானசபை வாசலில் நமது திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் எழுதி வைத்துள்ளார்கள்! மக்களே புலால் உண்போர் மது அருந்துவோர் புகைபிடிப்போர் வடலூர் மண்ணிலே காலெடுத்து வைக்காதீர்கள்! பாவம்!
தமிழனை காப்பாற்ற வேண்டும் என ஒரு கூட்டம், தெலிங்கான வேண்டும் என ஒரு கூட்டம் ஒரு மாநிலத்துக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று மற்றொரு மாநிலம் சொல்கிறது. இதில் எவருக்காவது அறிவு இருக்கிறதா? சாதி மத சண்டை வேறு! உலக மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகளே 6T 60T உணர்ந்தால் இப்படியெல்லாம் நிகழுமா? மக்களுக்கு அறிவு இல்லை! ஆன்மீக அறிவு சுத்தமாக இல்லை!
செத்தவனை எல்லாம் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தால் எப்படிவரும் அறிவு? சாகாதவனை ஞானியை சித்தரை போற்றுங்கள்! அவர்கள் உபதேசத்தை படியுங்கள்! குருவை பெற்று உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! நாமெல்லாம் உருப்பட வேண்டும் என்று கருதித்தானே பைபிளும், குர்ஆனும், நான்கு வேதங்களும், பகவத் கீதையும், உபநிஷதங்களும், திருமந்திரம் திருவாசகம், திருவருட்பா முதலிய ஞான நூல்கள் ஏராளமாய் உலகில் இருக்கின்றது! வருங்காலம் வளமானதாக இருக்க வேண்டும் என்றுதானே வள்ளல் பெருமான் வம்மின் உலகியலீர் மரணமில்லா பெருவாழ்வு வாழலாம் என கூவி அழைக்கின்றார்!
தருமச்சாலை கட்டி சாப்பாடு போட்டார் வள்ளலார்! சரி! ஊருக்கு ஊர் சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் பெயர் சொல்லி அன்னதானம் செய்கிறார்கள்! உலகெங்கிலும் சன்மார்க்க சங்க அன்பர்களால் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது! மிகவும் மகிழ்ச்சி! ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றால் சாப்பாடு போடுவது என்று மட்டுமே கூறுகின்றனர். அறிவிலிகள்! வள்ளலார் என்ற ஞானக்களஞ்சியம் அறிவுப் பெட்டகத்தின் பெயர் சொல்லி அறிவே இல்லாமல் சாப்பாடு போடுவதை மட்டுமே செய்கிறார்கள்! ஏனய்யா, உன்னை சாப்பாடு போடு என சொல்வதற்காகவா வடலூர் ஞானி வள்ளலார் அவதரித்தார்? சற்று சிந்திப்பாய் சன்மார்க்கியே!!
ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றால் சாப்பாடு போடுவதல்ல! வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று ஒரு தனி நூலே வெளியிட்டுள்ளார்! அதை முதலில் படியுங்கள்! தர்மச்சாலை அமைத்து சாப்பாடு போட்ட வள்ளலார் சத்திய ஞான சபையை எதற்கு நிறுவினார்? “தைப்பூச ஜோதி தரிசனம் காணத்தவறாதீர்கள் என்று வள்ளல் பெருமான் கூறக் காரணம் என்ன? சிந்தித்தீர்களா? அதிதி போற்றும் அருங்குணம் நம் மக்களிடம் உண்டு! சாப்பாடு ஒரு பெரிய விஷயமேயல்ல!
சாப்பாட்டைப் பற்றி நினைக்காமல், சாவுக்காக, பிறந்ததிலிருந்து நீங்கள் படும்பாட்டை சற்று சிந்தித்து கடைத்தேற வழிதேடுங்கள்! சாப்பிட்டு சாப்பிட்டு சாவை போக்குகிறீர்கள்! நோக்கியே காலத்தை
வாழ பிறந்த நாம் சாகாமல் வாழும் வழியை கூறிய வள்ளலார் வழிநடப்போம்! வெறும் உபதேசம் மட்டும் செய்யாமல், தானும் ஒளியுடலாகி மரணமிலா பெருவாழ்வு பெற்று இன்றும் நமக்கு தோன்றும், அருளும் துணையாக திகழ்கிறார்! இது சத்தியம்! உண்மை!! 150 வருடங்களுக்கு முன் வடலூர் பெருவெளியில் உலா வந்த அந்த உத்தம ஞானியின் வழி நடப்போம்! அவர் திருவருட்பா படிப்போம்! மரணமிலா பெருவாழ்வு பெற ஜீவகாருண்ய ஒழுக்க நெறிப்படி நடப்போம்! அன்னதானமும் செய்வோம்! முக்கியமாக ஞானதானம் தான் செய்ய வேண்டும்!!
வள்ளலார் எதற்கு தோன்றினார் 05-10-1823-ல் புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று வடலூருக்கருகே மருதூரில் இராமையா சின்னம்மை தம்பதியினருக்கு 5-வது குழந்தையாக பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததினால் தமையனாரின் கண்காணிப்பில் வளர்ந்தார். 9 வயதிலேயே கந்தகோட்டம் முருகன் அருள் பெற்று பாடும் வல்லமை பெற்றார். பின் தியாகராஜரையும், திருவொற்றியூர் வடிவுடையம்மனையும் பாடி அருள்பெற்றார். பின் வடலூர் வந்தார் ஊர் மக்கள் காணிக்கையாக கொடுத்த பெரிய நிலப்பரப்பிலே முதலில் 1867-ம் வருடம் தர்மசாலை 1872-ல் சத்திய ஞான சபையையும் தாமே முன்னின்று கட்டினார்!
சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வழிவகை செய்தார்! உலகில் இதுவரை யாரும் செய்யாத ஞான ஆலயமாக சத்தியஞானசபையை உருவாக்கினார்! எல்லா கோயில்களிலும் இறைவன் உருவத்தை வைத்து வழிபட பக்தியாக வழிகாட்டினர் ஞானியர்கள்! வள்ளலார் ஒருவரே ஞான நிலையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி, ஒளியான இறைவனை ஒளியாகவே காண சத்திய ஞானசபையில் ஏற்பாடு செய்தார்கள்! அது நம் உடல் அமைப்பை கொண்டதாக உருவாக்கி, உள்ளே மத்தியில் ஏழு திரை அமைத்து அதன் பின் ஜோதியை வைத்து அமைத்தார்! ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஏழு திரை நீக்கியவுடன் ஜோதி தரிசனம் காணும்படி உருவாக்கி அமைத்தார்! இதுதான் ஞானதவம் நாம் செய்யும்போது நம்முள் ஏற்படும் ஜோதிக் காட்சியாகும்!
நமக்குள் காணும் அனுபவம், ஜோதி தரிசனம் ஆத்மதரிசனம் எப்படி இருக்கும் என்பதனை சாட்சிக்காக வடலூரில் சத்திய ஞான சபையில் உருவாக்கிகாட்டி நம்மை அறியச் செய்தார்! தைப்பூச ஜோதி தரிசனம் காணத்தவறாதீர்கள் என்றும் பறை சாற்றினார் வள்ளலார்! ஏன் தெரியுமா? அன்றுதான் கிழக்கே காலையில் சூரியன் உதயமாகும் அதே வேளையில் மேற்கே சந்திரன் அஸ்தமனமாகும்! நடுவே சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் இதுதான் நாம் காணும் நம் அக அனுபவம்! ஞானநிலை! நமது வலது கண் சூரியன் எனவும், இடதுகண் சந்திரன் எனவும் நம் இருகண்ணும் உள்ளே ஒன்று சேரும் இடம் அக்னிகலை, ஜீவஸ்தானம் ஜோதி தரிசனம் கிட்டும் இடம் எனவும் ஞானிகள் கூறியதை புறத்தே வடலூரில் சத்திய ஞானசபையில் அமைத்துக் காட்டினார்! வடலூரில் சத்திய ஞான சபையின் எதிரில் தைப்பூசத்தன்று காலை, முதல் ஜோதி தரிசனத்தின்போது மட்டுமே இவ்வரிய ஞானக்காட்சியை இயற்கையாக பார்த்து பரவசப்படலாம்! வாருங்கள் வடலூருக்கு!
இதுபோலவே, இறைவன் உங்கள் இரு கண்களில் சூரிய சந்திரர்களாகவும் உங்கள் தலையில் உள் மத்தியில் உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேலே ஜோதி – ஆத்ம ஜோதியாக துலங்கி வழி நடத்துகிறான்! இதுவே ஞான இரகசியம் எல்லோரும் அறிந்து கொள்க என வள்ளல் பெருமான் திருவருட்பாவில் தெளிவாக கூறுகிறார்!
“கையறவிலாத நடுக்கண் புருவப்பூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடு நாட்டு”
“தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்” என்று வள்ளல் பெருமானே நேரடியாகவே ஞான தவநிலையை கூறுகிறார்.
சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் என்று வள்ளல் பெருமான் பாடியுள்ளார்! தன் அகஅனுபவத்தை நாமும் அறிந்து ஞானம் பெறவே வடலூரில் சத்திய ஞான சபை அமைத்து ஜோதி தரிசனம் காண வைத்தார்கள்!! எவ்வளவு பெரிய கருணை உள்ளம் வள்ளலாருக்கு! எல்லோரும் ஞானம் பெறட்டுமே என எல்லா ஞான இரகசியங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்! சொற்கோவிலாக திருவருட்பா! கற்கோவிலாக சத்திய ஞானசபை! இதுபோன்ற ஞானவள்ளல் உலகில் யாராவது உண்டா? அதனால்தான் அன்பர்கள் இராமலிங்கத்தை திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் என அன்போடு அழைத்து மகிழ்ந்தனர்!
அருட்பிரகாச வள்ளலார் 6T 601 ஏன் அழைத்தனர் அன்பர்கள்? வாடிய பயிரைக் கண்டு வாடினார், உலகர் படுதுயரங்கள் கண்டு வேதனையால் துடித்தார், அன்பே உருவான வள்ளலார், அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் உலகருக்காக எல்லா உயிர்களுக்குமாக இறைஞ்சுகிறார்? மன்றாடுகிறார்! உயிர்கள் துன்பத்தை நீக்கி அருள வேண்டுகிறார்! உருகி உருகி கரைகிறார்! அன்பு மிகுதியாக கருணை வெள்ளமாக உருமாறி கடவுளை கைகூப்புகிறார்! அழுது அழுது அரற்றுகிறார்! அதன்பலன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னை காட்டி தனக்குள் வள்ளலாரை காட்டி உலகையும் காட்டி ஒளிகாட்டி உண்மை உணரச் செய்து அருள் பாலித்தார்! அதுமட்டுமா, பாரறிய உண்மை ஞான இரகசியங்களை வெளிப்படுத்திடவும் அருள் பாலித்தார்! அதன் பயனே சத்திய ஞானசபை உருவானது! உலகுக்கு நன்மை கிட்டியது! ஞானம் பிறந்தது!
வள்ளலார் அருளால், அடியேன் கன்னியாகுமரியிலிருந்து வடலூர் சத்திய ஞான சபையில் தங்க ஜோதி தரிசனம் காண வழிவகை, விழி வழி உட்புகச் செய்ய உபதேசமும், தீட்சையும் கொடுத்து வருகிறேன்! ஞானிகளின் பரிபாஷை இரகசியங்களை எல்லோரும் அறிய விளக்கி, மெய்ஞான நூல்கள் 35 எழுதி வெளியிட்டுள்ளேன்! உலகில் இதுவரை யாரும் செய்யாத இவ்வரிய செயலை வள்ளலார் அருளாசியால் அடியேன் செய்ய முடிந்தது! ஏன் தெரியுமா? வள்ளலாரின் நோக்கம் என்ன? மரணமிலா பெருவாழ்வு உலகம் பெற வேண்டும் என்பதே ! அதற்கு அடியேனை குருவாக்கி செயல்வடிவம் கொடுத்துள்ளார்! என்ன புண்ணியம் செய்தேனோ!!
மெய்யன்பர்களே, எல்லா கோவிலுக்கும் போவதுபோல, வடலூருக்கும் வந்து ஜோதி பார்த்து போவோம் என கருதாமல், வடலூர் ஞானி வள்ளலார் ஏன்? எங்குமில்லாத விதத்தில் சத்திய ஞான சபையை கட்டி அதில் ஜோதி தரிசனம் காண வைத்துள்ளார்? என சற்று சிந்தியுங்கள்! அரிதான மனித பிறப்பாக வந்துள்ள நாம் பிறப்பின் நோக்கம் மரணமிலா பெருவாழ்வுதான்! சாவதல்ல என்பதை முதலில் அறிய வேண்டும்! பின் அதற்காக என்ன செய்ய வேண்டுமென பார்த்தால் எத்தனையோ ஞான நூல்கள் நமக்கு வழி காட்டுகின்றன! ஆனால் பெரும்பாலானவை பரிபாஷை இரகசியமாக மறைத்தே சொல்லப்பட்டுள்ளது! இதனை அறிய ஞான சற்குரு ஒருவரை நாடி பணிந்து உபதேசம் தீட்சை பெற்று ஞான தவம் செய்ய வேண்டும்.
நமது கண்களே இறைவன் திருவடி! வலது கண் சூரியன் – சிவம் – அ – சக்கரம் எட்டு எனவும், இடது கண் சந்திரன் – சக்தி – உ – சங்கு இரண்டு எனவும் ஞானத்தில் சொல்லப்பட்டுள்ளது. குரு தீட்சையால் நம் இருகண்களில் உணர்வு பெற்று நாம் ஞான தவம் செய்ய வேண்டும்! தொடர்ந்து வைராக்கியத்துடன் தவம் செய்தால், ஜோதி – நம் இரு கண்ணும் உள்ளே ஒன்று சேரும் இடம் – நம் தலையின் உள் மத்தியில் விளங்கும் ஆத்மஸ்தானம் அங்கே ஆத்ம ஜோதி பிரகாசிக்கும்! அந்த ஞான அனுபவத்தையே நம் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனமாக காண்பித்தார்கள்! என்னே அவர் தம் கருணை உள்ளம்! இரக்கத்தின் இலக்கணம்! நம் வள்ளல் பெருமான் போல வேறு யாரும் செய்யவில்லை!
வடலூரில் சத்திய ஞான சபையில் காணும் ஜோதி தங்கமென அந்திமாலை சூரியன் போல தங்கம் போல் தகதகவென ஜொலிக்கும் தங்கஜோதி! அதை அறிய அனுபவத்தில் உங்களுக்குள்ளும் காண, கன்னியாகுமரியில் தங்கஜோதி ஞானசபையில் இருக்கும் ஞான சற்குரு சிவ செல்வராஜ் அவர்களை சந்தித்து திருவடி உபதேசமும் ஞான தீட்சையும் பெறுக! வள்ளலார் மேட்டுக் குப்பம் சித்திவளாக திருமாளிகையில் திருக்காப்பிட்டுக் கொள்ளுமுன் கடைசியாக சொன்னது, “இப்போதுயாம் இங்கிருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் புகுந்து கொள்வோம்” என்று! ஞான சற்குருவிடம் நீங்கள் பெறும் தீட்சை மூலம் நமது வள்ளல் பெருமான் உங்களுக்குள் வருவார்! அருள்வார்! அவர் வருவதை நீங்கள் அனுமதிக்கும் நிகழ்ச்சியே தீட்சை! இவ்வளவு தெளிவாக யாரும் கூறமாட்டார்கள்!
ஞான உபதேசம் ஞான தீட்சை பெற வேண்டியவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள். மனிதனாக பிறந்ததே இறையருள்பெற போதுமானது! சாதி, மதம், இனம், மொழி, நாடு -துவும் தேவையில்லை? சுத்த சைவ உணவு எப்பிடுபவராக இருத்தல் அவசியம்! அசைவ ணவு சாப்பிடுவதால் நம் நாடி நரம்புகள் பாதிக்கப்படும் ஞானத்துக்கு விரோதமானது அசைவ உணவு! சைவ உணவே சன்மார்க்க உணவு! எந்தவித கெட்ட பழக்க வழக்கமும் இருக்கக்கூடாது! கன்னியாகுமரி வருக! முக்கடல் தீர்த்தமாடி வாலையை பணிந்து தங்கஜோதி ஞான சபைக்கு வருக! குருவை பணிந்து காணிக்கை கொடுத்து உபதேசம் தீட்சை பெறலாம்! யாரும் வரலாம்! ஞானம் பெறலாம்! ஞாலம் உங்கள் வசமே! எவ்வுயிரையும் தம் உயிர்போல எண்ணும் தூய உள்ளம் கொண்டவரே விரைவில் பெறுவர் ஞானம்! இன்றைய உலகில் மனிதநேயம் பற்றி வாய் கிழிய பேசும் பலரும் ஆடுமாடு கோழி ஊர்வன, பறப்பன என எல்லாவற்றையும் அடித்து சாப்பிடுகிறார்கள்! பிற உயிர்களிடம் கருணையே காட்டாத உனக்கு மற்றவர்கள் இரக்கம் காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி நடக்கும்? உன் பேச்சை எவன் கேட்பான்? நீ வாயில்லா ஜீவனை வதைக்கிறாய்? நீ அன்பு காட்டுபவர்களும் நீயும் வதைபடுவாய்! இதுவே இறைவன் வகுத்த நியதி! கசாப்புக் கடைக்காரன் கருணையை எதிர்பார்க்கலாமா? ஏ மனிதா! நீ முதலில் மிருக நிலையிலிருந்து மனிதனாக மாறு! அதன்பின் மனித நேயத்தைப் பற்றிப் பேசு! நட!
மனிதநேயம் எப்போது வரும்? ஆன்மநேயம் உன்னிடம் இருந்தால் தான் மனித நேயம் உன்னிடம் இருக்கும்? எல்லா ஜீவராசிகளையும் நேசிக்கும்போதுதான் உன்னிடம் அன்பு தோன்றும்! அன்பு மிகுதியானால் இரக்கம் வரும்! இரக்கம் எங்கே உள்ளதோ அங்கேதான் கருணை பிறக்கும்! கருணை உள்ளவர் கடவுளுக்கு சமமே! அப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவதே, தன் ஜீவனைப்போல பிற ஜீவராசிகளை, எறும்பு முதல் யானை எல்லாவற்றையும் ஒன்றாக காண்பதுவே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும்! வரை
“எவ்வுயிரும் தம்முயிர் போல எண்ணி ஒத்து உரிமையுடையவர் யாவர் அவர் தம் சிற்றடிக்கே ஏவல் செய்ய விழைந்தேன்” என இரக்கமே உருவான திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் கூறுகிறார்! எல்லா உயிரையும் தன் உயிர்போல கருதும் ஆன்மநேய ஒருமைப் பாடுடையவர் எவரோ அவர் பாதசேவை செய்யவே விரும்புகிறேன் என்கிறார் வள்ளலார்! அப்படியாயின், இந்த உலகில் உயர்ந்தவர் யார்? எவ்வுயிரையும் தம்முயிராக கருதி வாழும் “ஆன்மநேய ஒருமைப்பாடுடையவரே”
திவ்ய ஆத்ம சொரூபிகளே, வடலூருக்கு போனோமா? சோதிபார்த்தோமா? சாப்பிட்டோமா?
அன்னதானம் செய்தோமா? என்றிருக்காமல் உண்மை உணர வாருங்கள்!
உன் மெய்யிலே இருக்கும் ஒரே உண்மை! சத்தியமான பொருள் உன் உயிர் மட்டுமே! எங்கிருக்கிறது? எப்படியிருக்கிறது? அடைய வேண்டாமா? அறிய வேண்டாமா? சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் அதைத்தான் சொல்கிறது? விளக்குகிறது!
இது ஒன்றும் ஏதோ புதிய வழியல்ல! வாழையடி வாழையாக, யுகம்யுகமாக நமது ஞானிகளும் சித்தர்களும் கூறிவரும் அதே ஞானப்பாதைதான்! அதே பழைய பரமசிவம்தான்! அருட்பெருஞ்சோதி என்று வள்ளலார் சொன்னதும் அதே விஷயம்தான்!
நமக்கு ஆதிகுரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி! வழிவழியாக விழி விழி என சித்தர் ஞானியர் பலரும் நம்மை விழித்திருக்கவே உபதேசித்தனர்! விழித்திரு! கண்ணை மூடிச் செய்வதல்ல தவம்! கண்ணை மூடிச் செய்வதல்ல தவம்! கண்ணை திறந்து விழித்திருந்து செய்தாலே ஞானம் துலங்கும்! முதலில் புறக்கண்ணை – இமையை திறந்து குருவை பாரு! குரு உன் கண்ணில் உணர்வை ஊட்ட பின், நீ இருந்து ஞானதவம் செய்! உணர்வு இருந்தால் இமை மூடாது! இமை திறந்து விழித்திருந்து நீ ஞானதவம் செய்தாலே உன் அகக் கண்ணும் திறக்கும்! அகக்கண் திறந்தாலே ஜோதி தரிசனம்! தங்கஜோதி தரிசனம்!
உலகத்தில் இதுவரை யாருமே சொல்லாத ஞான இரகசியங்கள் எல்லாவற்றையும் கூறிவிட்டேன்! எல்லோரும் உண்மை உணர்ந்து ஞானம் பெறுக! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக!
சுபம்
“உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகி இலக அருள் செய்தான் இசைத்தே – திலகன் என நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான் தானே எனக்குத் தனித்து
திருவருட்பிரகாச வள்ளலார்
சய்து அந்த எல்லாம் இறைவன் ஒளிவடிவானவர்! அருள் பெருஞ்ஜோதி! பிறந்து வாழ்ந்து ஞான தவம் செய்து வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையாகவே ஒளியாகவே ஆனவர் நமது திருவருட்பிரகாச வள்ளலார். இராமலிங்க சுவாமிகள்!!
1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வடலூரில் ஆரம்பித்த வள்ளல் பெருமான் வேறு யாரிடமும் அதை ஒப்படைக்கவில்லை! நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என பறைசாற்றுகிறார்! ஆம் இப்போதும் சூட்சுமமாக இருந்து அவரே நடத்துகிறார்!
அறிந்து – உணர்ந்த, ஆன்ம நேய ஒருமைப்பாடுடைய திவ்ய ஆத்ம சொரூபிகளுக்கு கூடவே இருந்து. தோன்றும் துணையாக துலங்கி வழி நடத்துகிறார்! கண்ணுள்ளவர் நோக்கக் கடவர்! நம் பெருமான் அருட்பெருஞ்ஜோதியின் அருளே எல்லாம்!
என்றும் உண்மையுள்ள
சிவ செல்வராஜ்
கன்னியாகுமரி
நீ யார்?
நீ ஏன் பிறந்தாய்?
நீ எங்கிருந்து வந்தாய்?
நீ எப்படி வந்தாய்?
நீ எதற்கு வாழ்கிறாய்!
நீ எப்படி வாழ்கிறாய்?
நீ மனிதனா?
நீ என்றைக்கும் இருப்பாயா?
நீ எப்போது சாவாய்?
நீ எங்கே போவாய்?
நீ ஆணா? பெண்ணா?
நீ தான் “அது”
உன்னை நீ அறிய வழி “விழி!”:
கண்ணை திறந்து தவம் செய்!
தங்கஜோதி ஞானசபை
கன்னியாகுமரி
சாகாதவரே சன்மார்க்கி
உலகமக்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே! பசித்திரு! தனித்திரு! விழித்திரு ஞானம் பெறலாம்!
கடவுள் ஒருவரே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! சிறு தெய்வ வழிபாடு கூடாது! மூடநம்பிக்கை ஆகாது!
தெய்வங்கள் பெயரால் உயிர்பலி கூடவே கூடாது!
முடிந்தவரை அன்னதானம் செய்! ஞானதானம் செய்! எக்காரணங் கொண்டும் மாமிசம் சாப்பிடக் கூடாது!
புகை, மது போன்ற போதை பழக்கம் கூடவே கூடாது! சாதி, மதம், இனம், மொழி, சமயம் முதலியன கூடாது!
எக்காரியத்திலும் பொதுநோக்கம் வேண்டும்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! உயிர் இரக்கமே உண்மையான இறைவழிபாடு! உலக அமைதிக்கு
ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டும்! தன்னை அறிய ஜீவகாருண்ய ஒழுக்கம் வேண்டும்!
ஞான குருவை பணிந்து உபதேசம் தீட்சைப் பெறு!
இதனை கடைபிடிப்பவரே மோட்சம் பெறுவர்!
நம் கண்களே இறைவன் திருவடி!
மாதந்தோறும் பூசம் கொண்டாடும் நீவிர்! தைப்பூச விழா கொண்டாடுகிறீர்! மகிழ்ச்சி!!
வைகாசி 11 தர்மச்சாலை விழா கொண்டாடி அன்னதானம் கொடுக்கின்றீர்! மிக்க மகிழ்ச்சி!!
புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை குருபூஜையாக கொண்டாடாமல் விட்டீரே ஏன்?
இனியாவது புரட்டாசி சித்திரை குருபூஜை கொண்டாடுக!!
மெய்யன்பர்களே
அன்னதானம் செய்யும் மனித நேயம் மிக்கவர்களே!
ஞானதானம் செய்து ஆன்ம நேய ஒருமைப்பாடு கொள்க!
உலக குரு – ஞானசற்குரு திருவருட் பிரகாச வள்ளலாருக்கு நாம் காட்டும்
நன்றி நாம் ஆன்மநேய ஒருமைப்பாடு உடையவர் ஆவதுதான்!
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
உலகில் இதுவரை இரகசியமாக இருந்து வந்த ஞான இரகசியங்கள்,
பரிபாஷை விளக்கங்கள் எல்லாம் இந் நூற்களில் எளிதாக புரியும்படி எடுத்துரைக்கப்பட்டுள்ளது
- கண்மணி மாலை
- சனாதன தர்மம்
- அருள்மணி மாலை
- ஜோதி ஐக்கூ அந்தாதி
- ஸ்ரீ பகவதி அந்தாதி
- அஷ்டமணி மாலை -8 நூற்கள்
- வள்ளல் யார்
- இயேசு எழுபது
- ஞானக்கடல் பீர்முகமது
- திருவருட்பா – 4 பாகங்கள்
- சாகாக் கல்வி
- மந்திரமணி மாலை
- திருவருட்பா தேன்
- அகர உகர மாலை 6 நூற்கள்
- ஞானமணி மாலை 4 நூற்கள்
- திருவாசக மணிமாலை
- பரம பதம்
- ஆன்மநேய ஒருமைப்பாடு
- Who is Philanthropist Vallalar
- Spiritual Education for Deathlessness
- ஞானம் பெற விழி
- ஜீவகாருண்யம்
- மூவர் உணர்ந்த முக்கண்
- உலக்குரு வள்ளலார்
- WORLD GURU VALLALAR
புகை பிடிப்பவன் போக்கிரி
மது அருந்துபவன் மடையன்
கள் புலால் உண்பவன் மனித மிருகம்
பொய் கொலை களவு காமம் முதலிய பஞ்சமா பாதகங்கள் புரிவோர் பாழ் நரகையே அடைவர்!
சாதி, மதம், இனம், மொழி, நாடு என எவ்வித வேற்றுமையும் பாராதீர்!
உலக மக்களை பிரித்துப் பார்ப்பவன் வீணாய் போவான்!