பொறுக்காப் பத்து

 

மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம்
விரைமலர்த் துணைத்தமை விரும்பாப்
பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல்
பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
அளித்திடும் தெள்ளிய வமுதே
தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே
தணிகை வாழ்சரவண பவனே

சத்தியமாக, நெறியோடுவாழும் அன்பர் உள்ளத்தில், உள்
-அகத்தில் – கண்மணி உள்ளே – நம் மெய் – உடல் உள்ளே
விளங்கும் இறைவா உன் திருவடியாகிய இரு கண்மணி ஒளியே!
மலர்துணை – இருமலரடி. ஐயரும் இடப்பால் அம்மையும். நம் வலது கண்
சிவம் இடது கண் சக்தி. சிவமும் சக்தியும் சேர்ந்தால் பிறப்பான் ஆறுமுகன்.
வருத்தி அளித்திடும் தெள்ளியயமுதே – நாம் தவம் செய்து செய்து
நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து என்றே நிலையே இங்கு வருந்தி
என்கிறார் வள்ளலார்.  அப்படி தவம் செய்கையில் அமுதமான ஆறுமுக
ஒளி கிட்டும். அது பெண்மோகம் கொண்டவர்க்கு கிட்டாது அப்பொருளே
தணிகை வாழ் சரவணபவன் மெய்ப்பொருள்.

தன்மயக்கற்றோர்க் கருள் தரும் பொருளே – பாடல் 2

தன்மயக்கம் – நான் என்ற மயக்கம் – மும்மலம் உடையவர்களுக்கு கிட்டாது அது இல்லாதவர்க்கு அருள்தரும் மெய்ப்பொருள்.

சக்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே – பாடல் 7
சக்தியாகிய இடது கண் சிவப்பாகி – விடாது கண்மணி ஒளியை
தியானிக்கும் போது கண்கள் சிவந்து கோவை பழம் போலாகும்.
இதை செங்கரத்தில் – செந்தாமரை செங்கமலம் என குறிப்பிட்டனர்
சித்தர்கள்.

அருள் செயு நினது பாததாமரை – பாடல் 9

இறைவா உனது பாததாமரை அருள்செயும். அது என் மெய்யிலிருக்கும்
கண்மணி ஒளியே. இறைவன் திருவடி தாமரை போன்றது நம் கண்கள்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top