வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல்
நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ
வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே
நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ
வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே
துன்பத்தை தரும் உலக வாழ்வை துட்சமென கருதி, நம் கண்மணியில்
ஒளியாக துலங்கும் தரும துரையை தஞ்சம் அடைந்தால் உய்யலாம்.
அதை விடுத்து வஞ்சக குணம் கொண்டவர் மயக்கத்தில் ஆழ்ந்து நெஞ்சம்
கெட்டு பாவியாகி கெட நேரிடும். தணிகை மலை ஐயனை – நம் கண்மணி
ஒளியை தேனிருந்தொழுகிய செங்கரும்பே , கண்ணை நாடியே மெய்யன்பர்
வாழ்வே என்றும், கண்மணி ஒளியை எண்ணி வழிபடும் அன்பர் வறுமை
நீங்கும் என்றும் , எல்லாம் தரும் கற்பக விருட்ஷம் என்றும் போற்றிப்பாடுகிறார் வள்ளல் பெருமான்.
ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை